Tuesday, December 2, 2008

குழந்தையிருக்கும் வீடு



வீடெங்கும்
இறைபட்டிருக்கும்
பொருட்கள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

ஓடும் ஆனா ஓடாது,
நிலையிலிருக்கும்
சாவி கொடுக்கும்
பொம்மைகள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எடுத்த பொருளை
அடுத்த நாள்
தேடும்போது
கிடைக்கா பொருள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

அலம்புவதும் அலசுவதுமாய்
டெட்டால் வாசம் வீசும்
வீடு சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

புதுசு புதுசா வார்த்தைகள்
கண்டுபிடிக்கும்
மூளை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

வருவோர் போவோரை
ஒரு நிமிடம்
நம் வீடு நோக்கி வரச் செய்யும்
வித்தை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

தீர்ந்தும் தீராமலிருக்கும்
ஏகப்பட்ட மருந்து குப்பிகள்
சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

நித்தம் நித்தம் துணி காயும்
கொடி சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எந்த கவலையிருந்தாலும்
எவ்வளவு உடல்
பளு இருந்தாலும்
இனிதாய் விலக்கி
எதையும் எதிர்கொள்ளும்
மனது சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எப்போதும் சிரிப்பு சத்தம்
எதிரொலிக்கும்
சுவர்களும் கூரையும்
நித்தமும் சொல்லிக்கொண்டேயிருக்கும் இது குழந்தையிருக்கும் வீடென....,,,,

10 comments:

அமுதா said...

சான்ஸே இல்லை. கலக்கிட்டீங்க.. கையைக் கொடுங்க... சூப்பர்

Vidhya Chandrasekaran said...

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை.. :)

கச்சக்காலடிக்கும் சத்தம் சொல்லும் இது இரண்டு குழந்தை இருக்கும் வீடென.. :)) இது எங்க வீட்டு கவிதைங்க.

மோனிபுவன் அம்மா said...

அருமையோ, அருமை வார்தைகள் வரவில்லை இந்த கவிதையை பாராட்ட.

Thamira said...

ஒவ்வொரு வரிகளிலும் உண்மை. ரசனை நிரம்பிவழிகிறது.. வாழ்த்துகள். பொறாமையாக இருக்கிறது.. மாதவம் செய்த பெண்கள்.!

Thamira said...

உங்க டீமுக்கு போட்டியா ஏதாவது செய்யணும்னு ஆசையா இருக்குது.. இந்த அப்பாக்களை ஒண்ணு சேக்கிறதுக்குள்ள டவுசர் கிழிஞ்சுடும்.!

ரிதன்யா said...

அட என் பொண்ணு இல்லாத விடுமுறை நாள்ல நானும் இது மாதிரி ஏங்கியிருகேன்.

http://rethanyame.blogspot.com/
தனி சுகம்ங்க...

கணினி தேசம் said...

அப்பாவாக இருந்தாலும் அப்படி என்னதான் "அம்மாக்கள் வலைப்பூ" வில் இருக்கிறதென நுழைந்தேன். நல்ல பல பயனளிக்கும் விடயங்களை அலசுகிறீர்கள்.


அப்புறம்..
கவிதை, கலக்கலா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க !!

நன்றி

கணினி தேசம் said...

@ தாமிரா said...

உங்க டீமுக்கு போட்டியா ஏதாவது செய்யணும்னு ஆசையா இருக்குது.. இந்த அப்பாக்களை ஒண்ணு சேக்கிறதுக்குள்ள டவுசர் கிழிஞ்சுடும்.!
//

அப்படி ஏதாவது ஆரம்பிச்சா சொல்லுங்க!!

kovai sathish said...

ரசித்தேன் மிக....

http://vaanavilkavithaikal.blogspot.com

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger