Friday, December 5, 2008

டி.வி பார்த்தல் குற்றமா?

பொதுவாக அநேக அம்மாக்கள் ஓத்துக் கொண்டது - ஆறு மாத குழந்தை கூட டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், அடம்பிடிக்காமல் சாப்பிடுகிறது. பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் பொழுது டி.வி தான் baby sitter.


AAP(The Amercian Academy of Pediatrics) ஆய்வின் படி இரண்டு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் டி.வி பார்க்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகள் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் வரை பார்க்கலாம்.


நம் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை, இரண்டு மணி நேரம் என்ன ஒரு நிமிடம் கூட பார்க்கக் கூடாது என்பது என் கருத்து. நான் இது வரை சுட்டி டி.வி பார்த்தில்லை. அதனால் அது பற்றி தெரியாது. ஆனால் ஒரு முறை மக்கள் தொலைக்காட்சியில் ஒரு Cartoon பார்த்தேன். அதில் ஒரு அணில் (அணில் என்று நினைக்கிறேன்) ஒரு முயலிடம் "உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் பார்" என்றது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காந்தம் போல் இந்த வார்ததைகள் குழந்தைகளை கவர்ந்து இழுக்காதா?


டாம் அண்டு ஜெர்ரி - அதில் இல்லாத வன்முறையா? நமக்கு எலி தப்பிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் பூனை எத்தனை முறை அடி வாங்கும். குழந்தைகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார்கள். எதை கற்றுத் தருகிறோம். அடுத்தவர்கள் கஷ்டப்படும் பொழுது சிரிப்பதையா?


Dora - Dora நல்ல பழக்கங்கள் சொல்லித் தருகிறாள். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அன்னைக்கு Wal-martட்டில் பார்த்தேன். ஒரு மூன்று வயது இந்திய சிறுமி டோரா செருப்பு வேண்டும் என்றாள். ஏற்கெனவே வீட்டில் நாலு செருப்பு இருக்கு. அடுத்து 3 மாசம் குளிர். போட முடியாது. 3 மாசம் கழித்து வாங்கித் தருகிறேனு அவங்க அம்மா சொன்னதை அவள் காதில் வாங்கவில்லை. உருண்டு புரண்டு அழுதாள். அவங்க அம்மா எல்லோரும் வேடிக்கை பார்ப்பதைத் தடுக்க வாங்கி கொடுத்துட்டாங்க. இதே போல் விளம்பரங்கள் பார்த்து தேவையோ தேவையில்லையோ வாங்க நினைக்கும் குழந்தைகள்.


Power Rangers - நல்லவன் தீய சக்திகளை அழிப்பான். குழந்தைகள் தன்னை நல்லவனாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை அடிக்கப் பழகுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு ஆறு வயது சிறுவன் தன் மேல் தீ வைத்துக் கொண்டு பரிதாபமாக இறந்து விட்டான்.


Mega serials - கொலை, கொள்ளை, போலீஸ் இல்லாத சீரியல் உண்டா?


டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம்.

6 comments:

நட்புடன் ஜமால் said...

\\டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம்\\

சரியாச்சொன்னீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பவர் ரேஞ்சர் பாத்து நான் ஹீரோ நீங்கல்லாம் வில்லன்னு சொன்னான் பையன் இப்ப அந்த சேனலை மட்டும் மறைச்சு வச்சிருக்கோம் .. :(

என்ன பண்ரது.. நல்ல கார்டூன் தான்னாலும் நம்ம காசுக்கு வேட்டை வைக்குது கடையில்.. என் பொன்ணு அது காசு அதிகம் அடுத்தமுறை.. பாத்து வச்சிக்கோ அடுத்தமுறை எதற்காவது உனக்கு கிஃப்ட் செய்யனும்ன்னா அதை செய்துடலான்னா புரிஞ்சுப்பா.. பையன் உஹூம் ..வேணும்ன்னா வேணும் தான்.. பிள்ளை வளர்க்கறது லேசு பட்ட காரியமா.. :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மைதான்
பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் பொழுது டி.வி தான் baby sitter.

எங்க வீட்டுல அப்படியில்லையே, நான் கூட சில சமயம் ட்ரை பண்ணுவேன், ஆனா அமித்து டி.வி பாத்துக்கிட்டே சாப்பிடமாட்டா.
இப்ப வரைக்கும் அவளின் கவனம் டி.வியில் இல்லை.

pudugaithendral said...

நானும் இருக்கேங்க. என்னியையும் சேத்துக்கோங்க.

pudugaithendral said...

டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம். //

ஆமாம் எனது எண்ணமும் அதுதான்.

மங்களூர் சிவா said...

சூப்பர். மிக அருமையான பதிவு. ஆனா இந்த காலத்து பசங்க போகோ, கார்டூன் சேனலை விட்டு வரமாட்டிக்கிறாங்களே. எத்தனை மணி நேரமானாலும் சளைக்காமல் பார்க்கிறார்கள். :(((

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger