Friday, December 19, 2008

தடுப்பூசி


குழந்தைகளுக்கு வழக்கமாக போடும் தடுப்பூசிகளைத் தவிர கூடுதல் தடுப்பூசிகளைப்போடுவது சரியா.

இப்போதெல்லாம் குழந்தை மருத்துவர்கள் (சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்) நமக்கு, இல்லையெனில் நாம் நம் டாக்டர்களிடம் இது போன்ற தடுப்பூசிகளைப்பற்றி சொல்கிறார்கள் / கேட்கிறோம்
எனக்குத் தெரிந்து நிறைய பேர், இது போன்ற கூடுதல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடுகிறார்கள். மூளைக்காய்ச்சல் மற்றும் இன்னும் சில நோய்களுக்காக இது போன்ற தடுப்பூசிகள் போடப்படுகிறது.

வழக்கமான தடுப்பூசிகளை விடவும், இந்த கூடுதல் தடுப்பூசிகள் சற்று அதிகமான விலையாகிறது, அதாவது ரூ. 4000 வரை. (எனக்குத் தெரிந்தவரை)
இது போன்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் போடப்படுவதாய் தெரியவில்லை.
பிரைவேட் டாக்டர்களே இதனை அதிகம் அறிவுறுத்துகிறார்கள்.

இது போன்ற கூடுதல் தடுப்பூசிகளை நம் குழந்தைகளுக்கு போடலாமா. போடுவது என்ன பயனைத் தரும், பக்க விளைவுகள் ஏதெனும் உண்டா.
அனுபவ ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் கற்றுத் தெரிந்தவர்கள் உங்கள் பதில்களை பின்னூட்டமிடுங்கள்.
என்னைப்போன்ற குழப்பவாதிகளுக்கு உதவும்.

10 comments:

pudugaithendral said...

எனது மாமாவும் பிடியாட்ரிஷியன் தான்.

மூளைக்காயச்சல் ஊசி என் பிள்ளைகளுக்கும் போட்டேன்.

நம்மால் முடிந்தால் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய முடிந்தால் குழந்தைகளைப் பாதுகாக்கலாமே! என்பது என் எண்ணம்.

மூளைக்காய்ச்சல் கொடூரமானது. (அதில் பாதிக்கப்பட்டவள் நான்)

அம்மை எல்லாம் இப்போது பல பிள்ளைகளுக்கு வராமல் இருக்கக்காரணம் தடுப்பூசிதான்.

என்னைப் பொறுத்தவரை மேலதிக தடுப்பூசிகள் தவறில்லை.

அமுதா said...

அப்படியே புதுகைத் தென்றல் கருத்தை ஆமோதிக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி கண்டிப்பாக போடலாம். சஞ்சய்க்கு இப்போதான் போட்டேன். என் உறவினர் மகளுக்கு ஒரு டோஸ் 4500 ரூபாய் என 3 தடவை ஒரு தடுப்பூசி போட்டார்கள். அதை போட்டால் சளி, ஜூரம் எதுவும் வராது என்று என்னையும் போட சொல்லி ஒரே வற்புறுத்தல். Pneumoniaவிற்க்கு என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. என் குழந்தையின் டாக்டரிடம் கேட்டபோது, அது தேவையே இல்லை. வெளிநாட்டில் பிறந்து இங்கு வரும் குழந்தைகளுக்கு மட்டும் தான் அதை பரிந்துரைக்கிறோம் என்றார்.

Poornima Saravana kumar said...

தெரிந்தவர்கள் கூறினால் எங்களைப் போன்றோர்க்கு உபயோகமாய் இருக்கும்..

ஆகாய நதி said...

மூளைக்காய்ச்சல் ஊசியின் பெயர் என்ன? நான் பொழிலனுக்கு போலியோ மருந்து, அம்மை உட்பட மூன்று முறை முத்தடுப்பு ஊசி போட்டுள்ளேன். நான் அவனுக்கு வாங்கிய ஊசியின் பெயர் "easy five"

ஆகாய நதி said...

இப்போது புதிதாக "ரெட்ரோ வைரஸ்" தடுப்பூசி போடுமாறு தொலைக்காட்சி விளம்பரங்கள் வருகிறது. அது பற்றி யாருக்கேனும் தெரியுமா?

ஆகாய நதி said...

எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீதும் நம்பிக்கை இல்லை தடுப்பூசி விவகாரத்தில் ஆதலால் நான் தனியார் மருத்துவமனையில் தான் ஊசி போடுகிறேன் நானே மருந்தகத்திற்குச் சென்று ஊசி வாங்குகிறேன்

புருனோ Bruno said...

//எனக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீதும் நம்பிக்கை இல்லை தடுப்பூசி விவகாரத்தில் ஆதலால் நான் தனியார் மருத்துவமனையில் தான் ஊசி போடுகிறேன் //
உங்கள் அறியாமையை பார்த்து வருந்துகிறேன்

//நானே மருந்தகத்திற்குச் சென்று ஊசி வாங்குகிறேன்//
உங்கள் அறியாமையை பார்த்து வருந்துகிறேன்

புருனோ Bruno said...

இது குறித்த என் கருத்து மற்றும் சில தகவல்கள்

Anonymous said...

Rotovirus vaccine is not an injection.It is given as oral drops. 2 doses are recommended. It is said to avoid diarrohea in infants. A single dose costs Rs 999.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger