Monday, December 15, 2008

கலரிங்

நான் Anti-colouring புத்தங்கள் படித்திருக்கிறேன். கலரிங் மட்டும் பண்ணுவதால், குழந்தைகளில் கற்பனைத் திறன் குறைந்து போகும், அவர்களை வரைய விட்டால் கற்பனைத் திறன் வளரும் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் சமீபத்தில் கலரிங் ஏன் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதற்கு, ஏதோ இணையத்தளத்தில் படித்தேன். எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் படித்தது இது தான்.

1. Accepting Boundaries - இந்த இடத்திற்குள் தான் கலர் பண்ண வேண்டும் எனும் பொழுது Boundaries கற்றுக் கொள்கிறார்கள். இது பின்னால் அவர்கள் எழுதப் பழகும் பொழுது, மிகவும் உபயோகமாக இருக்கும்.

2. Focus - அவர்கள் விருப்பட்டுச் செய்யும் பொழுது அதில் கவனம் அதிகரிக்கிறது.

3. Grip - பேனா, பென்சில் பிடிக்கப் பழகுகிறார்கள்.

4. Motor skills - கலரிங் பண்ணும் பொழுது விரல்கள், கை போன்றவற்றிக்கு நல்ல வேலைக் கொடுக்கப்படுகிறது.

5. Co-ordination - கை-கண் ஒருங்கினைப்புக்கு நல்லது.

6. Colour recognition - கலர்களைக் கற்றுக் கொள்வர்.

6 comments:

அமுதா said...

வாவ்... பாருங்கள் அன்றாடம் செய்யும் activity-ல் கூட எவ்வளவு விஷயங்கள். நன்றி தீஷு அம்மா

யாத்ரீகன் said...

>> Accepting Boundaries <<

thats true, our drawing master used to insist on this and i've personally felt that was good way to teach this concept..

pudugaithendral said...

மிக முக்கியமான விடயம் நிறங்களுடன் தனது நேரத்தை கழிப்பதால் மனதும் லேசாகிப்போகும்.

(நமது மனது துக்கமாக இருக்கும்பொழுது சும்மா எதானும் வரைந்து கலர் அடித்து பாருங்கள். உண்மை தெரியும்)

அருமையான பதிவு.

பகிர்தலுக்கு நன்றி தீஷூ அம்மா.

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா :) நல்ல விஷயம் :)
//
மிக முக்கியமான விடயம் நிறங்களுடன் தனது நேரத்தை கழிப்பதால் மனதும் லேசாகிப்போகும்.

(நமது மனது துக்கமாக இருக்கும்பொழுது சும்மா எதானும் வரைந்து கலர் அடித்து பாருங்கள். உண்மை தெரியும்)
//
ஆகா அற்புதமான மேட்டர் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓஹ் அப்படியா

கத்துக்கிட்டேன் தீஷூ அம்மா, சொல்லிடறேன் அமித்துக்கிட்ட

சதங்கா (Sathanga) said...

இரண்டு காரணங்கள் என்னை இங்கு இழுத்து வந்தது.

1. தலைப்பு 'கலரிங்' - பார்த்தவுடன் ஏதோ கலரிங்க் சொல்லிக்குடுப்பீங்க என்ற எண்ணம். பரவாயில்லை, தகவல்கள் நன்றாக இருந்தது.

2. தீஷு - எங்க ரெண்டாவது குட்டிஸ் பேரும் இதுவே

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger