Sunday, May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3



நான் என் தாய்மையை உச்சக்கட்ட உணர்வாக உணர்ந்த அந்த நிமிடங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்! இது தாயாகப் போகிற தாய்மார்களுக்கு பயனளிக்கும் தைரியம் அளிக்கும் என்று நம்புகிறேன். மொக்கையாக இருந்தாலும்... மன்னித்து என் தாய்மைக்கு, என் குழந்தைக்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் அளியுங்கள்! :) அன்னையர் தின ஸ்பெஷல் என்பதால் பொழிலன் பிறந்த தருணத்தை மட்டும் இங்கே எழுதியுள்ளேன். மற்றவை என் வலைப்பூவில் :) இங்கே தொடுப்பு கொடுத்துள்ளேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்( ஆபரேஷன் தியேட்டரில்) - 2


என் குழந்தை இந்த உலகத்தைக் காணும் பொன்னேரத்திற்காக நான் கடவுளை வேண்டத் துவங்கினேன். "கடவுளே அது பிறக்கும் இந்த நேரம் நல்ல நேரமாக, என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்... எந்த குறையும் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறந்து இறுதி வரை அப்படியே ஆரோக்கியத்துடன் இருக்க அருள் பண்ணிடேன்!" இப்படியெல்லாம் என்னன்னவோ தத்துபித்துனு சாமிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

ஆஹா! வயிற்று மேலே சில கைகள்! இங்க தான் சிஸ்டர்... நல்லா பிடிச்சிக்கோங்க... அப்படி இப்படினு ஏதோ பேசிக்கிட்டாங்க... நான் தலையை அப்படி இப்படி அசைத்து கண் துணி ஓரளவு விலகி எனக்கு தெரியும் படி செய்தேன். :) என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல.... குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்... பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே... டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல... :) நல்லா இழுங்க.. பார்த்து ஜாக்கிரதைனு சொல்ல இரு கைகள் என் மேல் வயிற்றை மார்பு நோக்கி இழுத்தது பார்க்க முடிந்தது.. சரியா உணர முடியல...

ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல... அந்த ச்ங்கீதம்... வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்.... "ங்கா ங்கா ங்கா"னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! :) :) :)

இதை எழுதும் போதே கண்ணுல கண்ணீர் கன்னத்துல ஓடுதுங்க! அவ்வளவு சந்தோஷம்... :) ஆனந்த கண்ணீர் இப்போ. அப்பனா அப்போ எப்படி இருந்திருக்கும் எனக்கு... என் உலகமே என் கைக்கு வரப் போகுது!

ஆனால் அந்த இரு கைகள் என் வயிற்றை இழுத்துபிடித்த படியே இருந்ததால அப்போ குட்டிமாவ பார்க்க முடியல.:(

நான் இந்த உலகத்துக்கு வந்த காரணம் புரிஞ்சாச்சு! என் பிறப்பின் அர்த்தம்... எங்கள் காதலின் கல்யாண பரிசு... குட்டியான அழகான பூ... இப்படி என்னனமோ நினைச்சு எப்படா பார்ப்போம்னு இருக்கையில, குழந்தையை சுத்தம் பண்ணி திரும்ப கொண்டு வந்தாங்க... அப்போ குழந்தை அழுகை இல்ல... எனக்கு என் வயிற்றில் தையல் போடுவது தெரிந்தது! பிறகு சில நிமிடங்கள் கண் அயர்ந்தது போல இருந்தேன்... அதற்குள் ஐயோ குழந்தையை நான் தான் முதலில் பார்க்கனும்னு கண் திறந்தா என் வயிற்றை துடைச்சிக்கிட்டு இருந்தாங்க... எல்லாம் முடிந்தாச்சு போல :)

கண் கட்டை கழட்டினாங்க... இப்போ எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது... நான் என் குழந்தையை தேடினேன்... :( காணோம்... பிறகு அந்த மயக்க மருந்து டாக்டர் வந்து இவங்க கிட்ட குழந்தைய காட்டலாம இல்லனா இவங்கள தூங்க வைக்கலாமானு என் டாக்டர் கிட்ட கேட்டாரு :( அடப்பாவி என்ன குழந்தைனும் சொல்லாம, கண்ணுலயும் காட்டாம... என்னயா கேள்வி இதுனு நினைச்சுக்கிட்டு " குழந்தை எங்கே?" கேட்டேவிட்டேன். :) அங்க தான் ஒரு குட்டி அறைல இருந்தது பாப்பா...

தூக்கிட்டு வந்தாங்க.... உங்களுக்கு பையன் அப்படினு சொன்னாரு.. ஆஹா! ஆஹா! எனக்கு குழந்தையா? இதுவா என் வயிற்றுல இவ்வளவு நாள இருந்தது? thank god... எப்படி அழகு... மொத்த அழகும் இங்க இல்ல இருக்கு... கடவுளே நேரில் வந்துட்டாரோ? ஆனால் இது ரோஜாப் பூ மாதிரியே இருக்கே... அதே இளஞ்சிவப்பு ரோஜா நிறம்... கண்ணை இருக்க மூடி கைகள மூடி... அழகா! எவ்வளவு அழகு? எப்படி தூங்குது... எனக்கு பேச்சே வரல... அவ்வளவு சந்தோஷம்... கண்களில் கண்ணீர் பொங்கி வழியுது அப்ப... கண்ணாலயேவும் கை ஆட்டியும் கிட்ட வர சொல்லி சைகை காண்பிச்சேன் :)

என் பக்கத்துல வந்து குழந்தையைக் காண்பிச்சாங்க...:) தொட்டேன் மெதுவா... ஆஹா! எவ்வளவு மிருதுவா... என்னால முடியல... "thank god" னு மட்டும் வாயிலிருந்து தானா வந்தது. அப்புறம் ரோஜாப்பூ மாதிரியே இருக்குலனு சொன்னேன். அந்த டாக்டர் சிரித்தார். :) அப்புறம் டாக்டர் என்னிடம் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் காட்டனும் அதுனால குழந்தையை தூக்கிட்டுபோறோம்னு சொல்லிட்டு கொண்டு போயிட்டாரு!

அப்பாடா ஒரு வழியா குட்டிமா வந்தாச்சு! ஆனால் அவனைப் பார்க்கும் போது என் அப்பா, அம்மா, கணவர், மாமா, அத்தை இவங்க முகம் விரிந்து சிரிக்கும் அந்த காட்சியை பார்க்கமுடியல!

எனக்கு என் கணவரை உடனே பார்க்கனும் போல இருந்தது. ஆனால் அதற்குள் அந்த தியேட்டர் குரூப் எந்த அறிவிப்பும் இல்லாம என்ன தனி அறைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அதற்குள் ஆண்கள் அனுமதி இல்லயாம். :( அம்மா, சித்தி, அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க.

குட்டிமா உள்ள மஞ்சள் லைட் கீழே விளையாடிட்டு இருந்ததது! இளம் வயது சிஸ்டர்கள் பார்த்து " எவ்வளவு அழகு! சேட்டை! உன்னை நானே கட்டிக்கிறேன்... " அப்படி இப்படினு அப்பவே ஒரே போட்டி! பெண்கள் பட்டாளம் புடை சூழ என் தங்கம் தங்க நிற வெளிச்சத்துக்குக் கீழே ஜொலிச்சது! :)

கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தேன்... இன்னமும் சொல்லிக்கிட்டே இருக்கேன்! :)
இப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்க்கையில வேறு எந்த சந்தோஷத்துலயும் அனுபவித்ததே இல்லை... :)

தாய்மையை உணர்ந்தேன்! அனுபவித்தேன்! மெதுவா என் கை தூக்கி குழந்தையை லேசா தொட்டேன். குழந்தைக்கு பால் கொடுக்க என் அத்தை உதவினார். அம்மா! அப்போ பொங்கின தாய்மை உணர்ச்சிய எப்படி சொல்ல... வார்த்தையே கிடையாதுங்க! எனக்கு ஒரே ஆச்சரியம்... " இப்போதானே கண்ணு வந்த... அதுக்குள்ள உனக்கு சாமி பால் குடிக்க கத்துக்கொடுத்தாட்டாரானு " கேட்டேன்... :) குழந்தையோட ஸ்பரிசம், கூடான அதோட கை... அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம்... இப்ப நினைச்சாலும் என் குழந்தை பிறந்த அந்த தருணம் புல்லரிக்குது! கண்ணீர் பொங்குது! தாய்மை எப்படிப்பட்ட உணர்வு! புனிதமானது!

வாய்ப்பளித்த முல்லைக்கு நன்றி! :)

10 comments:

சந்தனமுல்லை said...

நன்றி சுபா பிரேம்குமார் & ஆகாயநதி!

மிக நெகிழ்ச்சியாக இருந்ததுங்க உங்க பதிவு! பல சிக்கல்கள், உடல் உபதைகளை கடந்து வந்திருக்கும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது!

எங்கள் அன்பும் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் என்று பொழிலுக்கு உண்டு!

Vidhya Chandrasekaran said...

பொழிலனுக்கு வாழ்த்துகள்:)

Anonymous said...

பொழிலனுக்கு வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

நன்றி முல்லை! :) பொழிலுக்கு முன் எல்லா உபாதைகளுமே தூசு :)

மிக்க நன்றி!

ஆகாய நதி said...

நன்றி வித்யா! :)

நன்றி மயில்! :)

Dhiyana said...

மிக நன்றாக பதிவு செய்து இருங்கீங்க ஆகாயநதி. எத்தனை மகிழ்ச்சியான தருணம்.

லக்கிலுக் said...

மூன்று பகுதிகளையும் வாசித்தேன்.

பெண்ணாக இல்லாவிட்டாலும் பிரசவ அவஸ்தையையும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன்.

நன்றி!

ஆகாய நதி said...

நன்றி தீஷு அம்மா! :)

ஆகாய நதி said...

நன்றி லக்கிலுக்!

இதனை ஆண்கள் உணரும் போது தான் தன் தாயையும், தன் மனைவியையும் இன்னும் அதிகம் நேசிக்கிறார்கள் :)

hari amma said...

enakkum antha naalin ninaivu vanthathu.Thanks for sharing.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger