Friday, May 8, 2009

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா?

உலகில் எத்தனை உறவுகள் கிடைத்தாலும் நிச்சயமாக ஒரு அம்மாவிற்கு ஈடு கொடுக்க என்னைப் பொறுத்தவரை யாராலும் முடியாது.நம்மை பெற்றது முதல் வளர்த்ததுவரை அவர் பட்ட துயர்கள் நாமறியோம்!இது எனக்கு நன்றாகவே பொருந்தும்!!
என் அம்மாவின் அருமையை முதன் முதலில் கொஞ்சமாய் அறிந்தது நான் விடுதியில் தங்கி இருந்த சமயம்.என்னால் அப்போதெல்லாம் என் அம்மா இல்லாமல் இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனாலும் சில நாட்கள் அம்மாவைப் பிரிந்தே கழிந்தது.அதுவே என் முதல் அனுபவம்.

என் அம்மாவின் அருமையை நான் இரண்டாவதாக அறிந்தது என் கர்ப்ப காலத்தில்.
எப்படித்தான் என்னையும் சுமந்து கொண்டு என் அண்ணனையும் வளர்த்துக் கொண்டு வீட்டிலும் வேலை செய்கிறாரோ என்று...அப்போதெல்லாம் வீட்டு வேலையை சாதரணமாக சொல்லிவிட முடியாது.அடுப்பு,உரல்,அம்மி......etc.நான்

மூன்றாவதாக என் அம்மாவின் அருமையைகண்டது என் பிரசவத்தின் பின்னர்.எனது பிரசவ வலியின் போது கூட என் அம்மாவிடம் நான் கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது....அம்மா நீயும் இப்படிதான் கஷ்டப் பட்டாயா என்று...
என் அம்மாவிடம் எனக்குக் கிடைத்த பதில் புன்னகை மட்டுமே!
என் பிரசவத்தின் பின்னர் நான் முதன் முதலில் பார்க்க நினைத்தது என் அம்மாவைதான்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் விட்ட கண்ணீர் முதலில் என் அம்மாவின் அன்பிற்காக.அதை என்ன வார்த்தை கொண்டு எழுதுவதென்று எனக்கு தெரிய வில்லை!

இன்னும் எத்தனைதான் இருக்கிறதோ அம்மாவின் அருமையை அறிந்து கொள்ள?
அன்பென்றாலே அம்மா!
அருமை என்றாலும் அம்மாதான்!!

10 comments:

Veena Devi said...

நான் என் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ( மே 25th) .இந்த நேரத்தில் அம்மகளின்பதிவுகள் அறிமுகம் நிரம்பவே சந்தோசத்தை கொடுத்தது. பிரசவத்திற்கு முன்னும் பின்னும் உபயோகப்படும் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது.
http://natpukaka.blogspot.com

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு சசி! //அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் விட்ட கண்ணீர் முதலில் என் அம்மாவின் அன்பிற்காக.அதை என்ன வார்த்தை கொண்டு எழுதுவதென்று எனக்கு தெரிய வில்லை!//

மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறாய்!

Thamiz Priyan said...

நல்ல உணர்வு சசி! எல்லாரும் கணவனைத் தான் பார்க்கனும்னு சொல்வாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. அம்மாவைப் பார்க்கனும்னு சொல்லி இருக்கீங்க..நெகிழ்வா இருக்கு!

Unknown said...

நெம்ப அருமையான வரிகளுங்கோ அம்முனி...!!! தாய்மைய பத்தி சொல்லுறதுக்கு உலகத்துல ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்குது....!!! மனிதனாலும் சரி... விலங்குகளானாலும் சரி.... ஒரு தாயின் அன்பு அரவணைப்பில் குழந்தை பாதுகாப்பாக இருப்பது போல உலகில் வேறு ஈடு இணை இல்லை...


" தூய்மை = புனிதம் = பாசம் = அன்பான அரவணைப்பு = = = = தாய்மை "

ராமலக்ஷ்மி said...

தலைப்பை அப்படியே வழி மொழிகிறேன். உணர்ந்த அம்மாவின் அருமையை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

uஅற்புதமக எழுதி இருக்கிறீர்கள்.அனால் பிரசவத்தின் போது மகள் அம்மாவை நினைப்பது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் .

ஆகாய நதி said...

வீணா உங்களுக்காக என் அடுத்த மொக்கைப்பதிவு :)

ஆகாய நதி said...

அருமையான பதிவுங்க! :) எப்போதோ படித்துவிட்டேன்... பின்னூட்டம் இட நேரம் இல்லாமல் இருந்தது... :) நேற்றே தூக்கத்தில் தான் அந்த பதிவு கூட எழுதினேன்

Anonymous said...

10 vari ezhuthi ennai kanneer vida vaithu veeteergal.

Thayai printhu Nigeriavil
Venkatesan

Suresh said...

மிக அழகான பதிவு

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger