Monday, May 11, 2009

விதம் விதமா இட்லி சுடலாம் - முட்டை இட்லி

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு மட்டும்
மிளகு தூள் மிக சிறிதளவு
இட்லி மாவு
பொடியாக நறுக்கிய வெங்காயம்

செய்முறை:

இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லி மாவு சிறதளவு ஊற்ற வேண்டும்;

பின் முட்டையின் மஞ்சள் கருவை வட்ட வட்ட துண்டுகளாக வெட்டி அதில் ஒரு துண்டை மாவின் மேல் வைக்க வேண்டும்;

பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் சிறதளவு எடுத்து அதன் மேல் தூவ வேண்டும்;

அதன் மேல் மேலும் மாவு ஊற்றி இட்லியை வேக வைத்தால்... சுடச் சுட முட்டை இட்லி ரெடி!

முட்டை தோசை:(இலவச இணைப்பு)

இதே போல் தோசையிலும் செய்யலாம்; ஆனால் முட்டையை வேக வைக்காமல் மஞ்சள் கருவை மட்டும் தனியே பிரித்து தோசை மேல் ஊற்றி இந்த மிளகுதூள் கலந்த வெங்காயம் தூவி நெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்க வேண்டும்।

சுவையான முட்டை தோசை தயார்!:)

4 comments:

Deepa said...

நல்ல டிப்ஸ். நேஹாவுக்குப் பதினோரு மாதம் முதல் முழு முட்டையும் கொடுத்துப் பழக்கி இருக்கிறேன். ஆனால் வேக வைத்தது மட்டுமே. ஒன்றும் பிரச்னையில்லையே?

Unknown said...

ஆஹா.. நெம்ப அருமையான டிப்ஸ்....!! எனக்கு முட்ட இட்லி செஞ்சு சாப்பிடனுமின்னு ஆசயா இருக்கு... ட்ரை பண்ணி பாக்குறேன் ...!!! நெம்ப நன்றிங்கோவ் . ......!!!

ஆகாய நதி said...

வாங்க தீபா! முட்டையின் வெள்ளைக் கரு இப்போது வேண்டாம்... 1வயதிற்கு மேல் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுங்கள்...

ஏனெனில் முட்டையின் வெள்ளைக் கரு அலர்ஜி ஏற்படுத்தக் கூடியது.. நேஹாவுக்கு அலர்ஜி வரவில்லையெனில் மகிழ்ச்சி இருப்பினும் மருத்தவ ஆலோசனைப் படி கொடுங்கள் :)

நன்றி தீபா...

ஆகாய நதி said...

வாங்க மேடி! நல்லா சாப்பிடுங்க... :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger