Monday, May 4, 2009

அம்மா

(தாய்மையைப் பற்றி பகிர்வதற்கு நல்லதொரு யோசனையை முன் வைத்த சந்தனமுல்லைக்கு நன்றிகள்.)

ஒரு மழை நாளின் பொழுது எழுதி ஏற்கனவே பதிவிட்ட, என் அம்மாவிற்கு சமர்ப்பித்த ஒரு கவிதை இதோ மீண்டும் இங்கே.

மழையாய் நீ, மண்ணாய் நான்





வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........



(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

4 comments:

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! என்ன சொல்வது ..மழையாய் பொழிந்துத் தள்ளி விட்டீர்கள்..உங்கள் உணர்வுகளை கவிதையாய்! :-)

அன்னையர் தின வாழ்த்துகள், உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும்!

Vidhya Chandrasekaran said...

சூப்பர் அமித்து அம்மா:)

ஆகாய நதி said...

நல்லாருக்கு :)

அமுதா said...

ஏற்கனவே படித்துள்ளேன். என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுதெல்லாம் மனதில இதமான சாரல்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger