Sunday, June 21, 2009

தந்தையர் தின வாழ்த்துகளுடன்!


அனைத்து தந்தைமார்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேன்! :)

அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்து யோசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை! ஏனென்றால் எல்லா பெண்களுக்குமே "அப்பா" என்பவர் ஒரு ஹீரோவாக, ரோல் மாடலாக, ஏன் உலகத்திலேயே சிறந்தவராதான் இருப்பாங்க! எப்படி சொல்றதுனு தெரியல.... என்னைப் பொறுத்தவரை என் அப்பாவைப் பற்றிக் கூற வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது! இது சற்று மிகையாகத் தோன்றினாலும் உண்மை!

என் அப்பாவின் வாழ்க்கை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த புத்தகம்! இது என் கருத்து ஆனால் இதனையே என் அப்பாவை அறிந்த பலர் கூறிக் கேட்டிருக்கிறேன்! எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அட்சயப் பாத்திரமாய் அன்பு பொழியும் திருக்குறள் காட்டும் வழி வாழும் ஒரு மெழுகுவர்த்தி மனிதர்! நீங்களும் பழகிப் பாருங்கள் நான் சொல்வது புரியும் :)

அதோ அந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் நான் இன்றும் என் தந்தை கை பிடித்து நடப்பேன்! என் மகனும் அவ்வாறே அவன் தந்தைக் கை பிடித்து நடக்கும் நாளுக்காக அந்த அழகைக் காண மனம் ஏங்குகிறது...... சரி ரூட் மாறுது!

நான் இன்று இவ்வளவு தன்னம்பிக்கையோட, துணிச்சலோட, எதோ கொஞ்சூண்டு அறிவாளியா, ஈரமான மனசோட, ஏதோ கொஞ்சூண்டு நல்லவளா இருக்கேனா அதுக்கு என் அப்பாதான் காரணம்!
என் அப்பா எனக்கு அளித்த சுதந்திரம் அவர் இரத்தம் இரண்டுமே இவையாவையும் எனக்கு அளித்தது! கி கி கி! பார்க்கக் கூட எங்க அப்பா மாதிரிதான் நான்! அரை சொட்டை டோப்பா, ஒட்டு மீசை வெச்சு பார்த்தா!!!! :)))

ஆனால் சோகம் என்னனா நான் முதுநிலைல தங்க மெடல் வாங்கினப்போ என் அப்பா தான் அதை வாங்கனும்னு நினைச்சேன்... அவங்களுக்கு வர முடியல சரி அவங்க இடத்துல நான் வைத்துப் பார்க்கும் இன்னொருவர் என் கணவர்... சரி அவங்களயாவது கூப்பிட்டு வாங்க சொல்லலாம்னு பார்த்தா நான் தான் வந்து வாங்கனுமாம் நான் வரலைனாதான் அவங்க வாங்கலாமாம் :( நாம தான் காலைல ரிகர்சல் அப்பவே பிரசண்ட் கொடுத்தாச்சே என்ன செய்ய!
நான் தான் போயி வாங்கினேன்! ஆனால் அதுலயும் ஒரு மகிழ்ச்சி என்னனா பொழிலன் என் வயிற்றில் 5மாத சிசு அப்போது! அவன் தான் வாங்கினதா நினைச்சுக்கிட்டேன்! :)

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியும் என் அப்பா எனக்கு தந்தது! நல்ல வாழ்க்கை, கல்வி, வேலை, நல்ல பெயர், கணவர்னு எல்லாமே எனக்கு அப்பா கொடுத்த அருமையான பரிசுகள்!

பெற்றோர் இல்லாமல், உறவினர் ஆதரவும் இன்றி கண் தெரியாத சூழ்நிலையிலும் தன்னந்தனியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் தானும் படித்து பிறர் படிக்கவும் உதவி செய்து பட்டப்படிப்பை முடித்து கிடைத்த வங்கி வேலையையும் ஆதரவில்லாதப் பெண்ணுக்கு விட்டுக் கொடுத்து, கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில் இன்று உயரிய நிலையில் இருக்கும் என் அப்பா எங்களை எந்த சிரமும் கொடுக்காமல் மிக மகிழ்ச்சியாக வளர்த்து ஆளாக்கினார்! இன்றும் பொதுசேவை என்று தூக்கத்தினையும் கூட தியாகம் செய்து பிறருக்கு ஓடி உதவும் ஒரு மாமனிதர் அவர்! நான் அவரோட பொண்ணுனு சொல்லிக்கிறத விட ஒரு சிறந்த பெருமை என்ன இருக்க முடியும்?

எனக்கு திருமணம்னு சொல்லி ஒரு அழகான குருவிக்கூட்டுல என்னையும் இணைச்சு வெச்சாங்க எங்க அப்பா! என்னை எப்பவுமே மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளும் என் அப்பாவுக்கு நான் அம்மா மாதிரி!

இப்படி எப்பவுமே என்னை நெஞ்சில் சுமக்கும் அப்பாவைப் பற்றி முழுமையாலாம் எழுத முடியல!

இப்படிப்பட்ட பல அப்பாக்கள் இருக்காங்க... எல்லா அப்பாக்களுக்குமே என் வாழ்த்துகள்! :)))

என் அப்பாவைப் பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த முல்லைக்கு கோடி நன்றிகள்! :)))

9 comments:

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள் ...

இராயர் said...

very nice
all the best

Unknown said...

அருமையான பதிவு.....!!! உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...!!!!

ஆகாய நதி said...

நன்றி ஜமால்! :)

ஆகாய நதி said...

//
very nice
all the best
//

நன்றிங்க! :)

ஆகாய நதி said...

நன்றி மேடி! :)

ஆகாய நதி said...

நன்றி புதுகை தென்றல்! :)

சப்ராஸ் அபூ பக்கர் said...

என்னோட பதிவுலையும் ஒரு கவிதை கிறுக்கி இருக்கேன்... முடியும்னா வாங்க......

வாழ்த்துக்கள்.....தொடருங்கள்......

ஆகாய நதி said...

நன்றி அபூபக்கர்! நிச்சயம் வந்து பார்க்கிறேன்... :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger