Friday, June 26, 2009

புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்!

1. எமோஷனல் சப்போர்ட் - உங்கள் மனைவியுடன் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள். தாய் ஒரு அறையில் குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருப்பார். எல்லோரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டோ அல்லது ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டோ இருப்பார்கள். தான் ஒரு பால் கொடுக்கும் மிஷிந்தானோ என்று எண்ணும்படி விட்டுவிடாதீர்கள்!

2. அவர் விரும்பியதை செய்ய உதவுங்கள் - குழந்தை பிறந்த கொஞ்ச நாள் வரை உறவினர்களும், எண்ணற்ற அறிவுரைகளாலும் ,ஏகப்பட்ட அட்வைஸ்களாலும் சூழ்ந்துக் கொண்டிருப்பார்கள். சமயம் பார்த்து நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் கோணாதபடி. (சிலசமயங்களில் ஏதேனும் படிக்கவோ அல்லது தூங்கவோ விரும்பலாம்.)


3. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனால் தாயைத்தான் உடனே விமர்சிப்பார்கள். அவருக்கு ஆறுதலாக நடந்துக் கொள்ளுங்கள். தாய் குளிக்கும் நேரத்திற்கும், குழந்தை தும்முவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்தானே!

4. அவ்வப்போது சர்ப்ரைஸ் டின்னர் அல்லது குழந்தை தூங்கும் நேரம் சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள்!(she may need a break! )

5. 10 மாதங்களாக அவரது உடல் பல மாறுதல்கலை எதிர்கொண்டிருக்கும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு சில காலம் எடுக்கலாம். அதைக் குறித்த விமர்சனங்களிலிருந்து தடுத்து விடுங்கள். அதைக்குறித்த அவரது சோர்ந்த மனநிலைக்கு ஆறுதலாக இருங்கள்!

ஹேப்பி ஃபாதர்ஸ் டே!

15 comments:

ரவி said...

கண்ட கண்ட செய்திகளை கேட்டு மனது குழப்பமடையாமல் பார்த்துக்கொள்வதும் தேவை...

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் குழந்தை நல்ல உடல் நலனுடன் இருக்கும்...சளி சுரம் போன்ற தொல்லைகள் அடிக்கடி வராது...

அப்படியே சளி சுரம் போன்றவை வந்தாலும், உடனே மாத்திரை போடுவது ஊசி போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம். தானாக சரியாகும்படி விடலாம்..பிள்ளையின் இம்யூன் ஸிஸ்டம் சிறப்பாக அமைய இது உதவும்...

குழந்தைகளை தூக்கும்முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்வது முக்கியம்.

குழந்தையை பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையின் முகத்தில் வலுக்கட்டாய உம்மா தருவதை தடுக்கவேண்டும். அவர்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம்.

குழந்தையை தோளில் கிடத்தி முன்னும் பின்னும் கொஞ்சம் / என்ன ஒரு அரை மணி நேரம் நடந்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை திடீரென்று அழுதால் உடைகளை கழட்டி பரிசோதியுங்கள். இறுக்கமான உடைகள், அன்கம்பர்டபுளாக இருக்க வாய்ப்பு உண்டு.

அதிக குளிரும் சரி, அதிக சூடும் சரி, குழந்தைக்கு ஆகாது.

கச்சா முச்சா நாட்டு வைத்தியங்களை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திணிப்பதை தவிருங்கள். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கும் 100 வருடத்துக்கு முன் இருந்த குழந்தைக்கும் வேறுபாடு உள்ளது. அந்த ரப்பஸ்ட்நெஸ் இப்போது இல்லை. அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

கடைசியாக, குழந்தையை பெற்றபிறகு தாய் தனது உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பார். வேளைக்கு இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதில் சோம்பேறித்தனமும் வெறுப்பும் இருக்கும். நீங்கள் கட்டயப்படுத்தி அல்லது நல்ல விதமாக சொல்லி அந்த மாத்திரைகளை உட்கொள்ளச்செய்யவேண்டும்.

இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் மூட்டு வலி, கால் வலி கை வலி என்ற பல உபாதைகளுக்கு அவர்கள் ஆளாவார்கள்.

அப்பா டே விஷ்ஷஸ்...!!

ரவி said...

இந்த பதிவின் RSS பீடில் பிரச்சனை உள்ளது. Settings - Site Feed சென்று Full என்று மாற்றவும்...தேவை இல்லாத FeedBlitz URL இருந்தால் அதனை நீக்கிவிடவும்...

pudugaithendral said...

she may need a break//

இது கட்டாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

அருமை முல்லை

Deepa said...

Well done Mullai!
புது அப்பாக்களுக்கு நிச்சயம் சொல்ல வேண்டிய விஷயங்கள்.

ஆகாய நதி said...

சூப்பர் முல்லை... :)))

செந்தில்குமார் said...

அருமையான பதிவு முல்லை மேடம் !

இந்த விஷயத்த பத்தி ஒரு பதிவு போடனும்னு நெனச்சுட்டு இருந்தேன்...அது நெனப்போட மட்டும் இருந்துடிச்சு.. நீங்க அதை செயல்படுத்திட்டீங்க..

குடுகுடுப்பை said...

குழந்தைகளுக்கு பவுன்ஸர் போன்றவற்றை (உட்காந்து குதிக்கும்) அப்பாக்க்ளும் அம்மாக்களும் வாங்கிகொடுக்கவேண்டாம். குழந்தையின் காலை பலமாக்கிவிடும், முதுகெலும்பு பல்கீனமாகிவிடும்.

Deepa said...

ரவி சொல்லி இருப்பதும் மிக முக்கியமான குறிப்புகள்.
நன்றி ரவி.

குறிப்பாக,

//குழந்தையை பெற்றபிறகு தாய் தனது உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பார். வேளைக்கு இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதில் சோம்பேறித்தனமும் வெறுப்பும் இருக்கும். நீங்கள் கட்டயப்படுத்தி அல்லது நல்ல விதமாக சொல்லி அந்த மாத்திரைகளை உட்கொள்ளச்செய்யவேண்டும்.
//

இது 100% உண்மை!

Anonymous said...

//குழந்தையின் முகத்தில் வலுக்கட்டாய உம்மா தருவதை தடுக்கவேண்டும்//
பதிலாக கன்னத்தில் கன்னத்தை வைக்கலாம். அப்படிக் கொஞ்சத் தான் வேண்டுமென்றால்.
//குழந்தையை தோளில் கிடத்தி //
கொஞ்ச நாட்களுக்கு குழந்தையை நிமிர்த்தாமல் இருப்பது நலம்.
//இறுக்கமான உடைகள், அன்கம்பர்டபுளாக //
வீட்டிலிருக்கும் போது குழந்தையை ஒண்டுமில்லாமலேயே விடலாம். எப்பொழுதும் துணி கட்டுவதால் குழந்தையின் தொடை எலும்புகள் சொத்தியாகும்.
கண்டிப்பாக சூப்பியை வாய்க்குள் வைக்க கூடாது. அப்புறம். சுத்தியல் வைத்து அடித்தாலும் பல் உள்ளுக்க போகாது.

அப்பாவாகணும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Dhiyana said...

புது அப்பாக்களுக்கு நிச்சயம் பயன்படும்.

அமுதா said...

அருமையான பதிவு

லக்கிலுக் said...

யாராவது நாலு பெருசுங்க சேர்ந்து அப்பாக்களின் வலைப்பூ ஆரம்பிக்கலாமில்லையா? :-)

எங்களை மாதிரி பேச்சுலர்ஸ் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போமே?

pudugaithendral said...

யாராவது நாலு பெருசுங்க சேர்ந்து அப்பாக்களின் வலைப்பூ ஆரம்பிக்கலாமில்லையா?//

ஐடியா நல்லாத்தான் இருக்கு. செஞ்சாலும் நல்லா இருக்கும். யார் செய்யப்போறாங்க.

எங்களை மாதிரி பேச்சுலர்ஸ் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போமே?//

ஃப்யூச்சருக்கு உபயோகப்படும்னு சொல்லியிருந்தா பாராட்டியிருப்பேன்.

:))

சிங்கக்குட்டி said...

வெறும் ஹேப்பி ஃபாதர்ஸ் டே மட்டோடு இல்லாமல், என்னைப்போல புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ் கொடுத்ததற்கு மிக்க நன்றி .

Anonymous said...

அப்பாக்களின் வலைப்பூ ஆரம்பிக்கத் தேவையான முன்முயற்சிகளை நான் எடுக்கிறேன். விருப்பமுள்ள தகப்பன்சாமிகள் vijayagiri2882008@gmail.com என்ற முகவரிக்குத் தங்களது இசைவைத் தெரிவித்து மின்மடல் அனுப்புங்கள்.

அன்புடன்
விஜய்கோபால்சாமி

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger