Monday, June 29, 2009

'பிரா'ப்ளம் - ஒரு அறிமுக பார்வை

சில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.

இனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)

சின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.

இது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.

உங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:






இந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.

சரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்
சரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.



முதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா? கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.




13வயது முதல் திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.












பாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.



இது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.





இந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது..

இது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை...

7 comments:

pudugaithendral said...

மயில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பெண்கள் உள்ளாடையைப்பற்றி பொதுவில் பேசுவதில்லை என்பதால் நிறைய்ய பிரச்சனைகள். அழகாக இருக்கு உங்கள் உபயோகமான பதிவு.

உள்ளாடைகளின் பராமரிப்பு பற்றியும் பதிவிடுங்கள்

Veena Devi said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள் மயில்.

ஆகாய நதி said...

நாம் வெளியில் பேச தயங்கும் விஷயத்தை பற்றி தைரியமுடன் எழுதியமைக்கு முதலில் பாராட்டுகள் :)

நல்ல உபயோகமான பதிவு!

இந்த மார்பக புற்றுநோய் விஷயத்திலும் உள்ளாடைகளின் பங்கு நல்ல விதத்தில் அதனை தடுக்கும் படி அமைந்துள்ளது... இதனை பற்றியும் நீங்கள் எழுதிவிடுங்கள் தெரியாதவர்களுக்கும் தெரியும் :)

ஆகாய நதி said...

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் தானாக கொட்டி வடியும் போது ஆடை ஈரமாகாமல் இருக்க பேட்களும் பேட்களுடன் பிராவும் கிடைக்கிறது...

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு மயில்! விளக்கங்களுக்கு நன்றி!

Eswari said...

பெண்கள் சரியான பிரா அணிவதால் நெஞ்சுவலிய தவிர்க்கலாம் என்கிறார்களே? அது உண்மையா?

Anonymous said...

நன்றி புதுகைத் தென்றல்..உள்ளாடை பராமரிப்பு பற்றி எழுதுகிறேன்..

நன்றி வீணா.

நன்றி ஆகாய நதி,

நன்றி முல்லை,

நன்றி ஈஸ்வரி, நெஞ்சு வலி மட்டும் அல்ல, முதுகு வலி, மார்பு புற்றுநோய், இடுப்பு வலி கூட தவிர்க்கலாம்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger