Monday, July 6, 2009

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய சிறந்த நண்பர்கள்:

குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப் பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள் மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும். அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால் அவர்களுக்கு செவி கொடுப்போம்.

2. அமுதாகவே இருந்தாலும் அளவிற்கு மீறினால் ஆபத்துதான்:

குழந்தை தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை கூட ஓரளவிற்கு தான் சாப்பிடும். அந்த சுய கட்டுப்பாடு வருவது வயற்றில் இருந்து அல்ல. மூளையில் இருந்து வருகிறது. இது சாப்பாடு விஷயத்திற்கு மட்டும் அல்ல. மணிக்கணக்காக வேலை, படிப்பு, நெட், என்று எதாவதில் அளவிற்கு அதிகமாக கவனம் செலுத்துகிறவர்கள் ஆபத்தில் கால் வைக்கிறார்கள் என்பதை குழந்தைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. வீடு- வெளியே என்ற வித்தியாசம் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும்:

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தை அதன் பிறகு வீட்டு பாடம் செய்து விட்டு விளையாட்டு, அம்மா, அப்பாவுடன் கொஞ்சல் என்று கவனத்தை திருப்பிவிடுகின்றது.
இது பெற்றோருக்கு புரிவதில்லை.அலுவலகப் பணி அழுத்தத்தை வீட்டில் கோவமாக காண்பித்து விடுகிறோம்

4. நன்கு விளையாடுங்கள் மனம் விட்டு சிரி்யுங்கள்:

நமக்கு பொருளற்றதாக தோன்றும் விளையாட்டுகள் தான் அவர்களை மணிக்கண்க்கில் மகிழ்ச்சியாக வைத்து உள்ளன. எந் நேரமும் பணி என்று இருந்தால் எப்படி சிரிப்பு வரும்.

5.ஒரு விஷயம் எப்படிச் செயல் படுகிறது என்று தெரியாவிட்டால், அதை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்துப் போடுங்கள், எல்லாம் புரிந்துவிடும்:

எந்த பொம்மையையும் ஒரு நாளில் உடைத்து விடும் குழந்தையைக் கடிந்து கொள்கிறோம். உண்மையில் அது எப்படி இயங்குகிறது என்று ஆராய்கிறார்கள்.
இந்த உத்தியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு விஷயத்தை பிரித்து ஆராய்ந்தால் தீர்வு நிச்சயம்.

6. வாழ்க்கையில் விதிமுறைகள் வேண்டாமே:
ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டுதான் ஆட வேண்டுமா?? நின்று கொண்டு ஆடுகிறார்கள்.பேப்பரில் தான் எழுத வேண்டுமா?? சுவரில், தரையில் எழுதுகிறார்கள்.
பெரியவர்கள் தங்கள் வேலைகளை ஒரேமாதிரி செய்வதால் சோர்வு அடைகிறார்கள். சின்ன மாற்றத்தை செய்து பார்ப்பது இல்லை.

பெண்ணே நீ என்ற புத்தகத்தில் என்.சொக்கன் எழுதி நான் படித்தது..


8 comments:

சந்தனமுல்லை said...

நல்ல பாயிண்ட்ஸ் அமுதா! //நமக்கு பொருளற்றதாக தோன்றும் விளையாட்டுகள் தான் அவர்களை மணிக்கண்க்கில் மகிழ்ச்சியாக வைத்து உள்ளன// இதை நான் அனுபவித்திருக்கிறேன்! :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பகிர்வு.

Deepa said...

அருமையான பதிவு. நன்றி அமுதா.

Anonymous said...

Good write-up..Add more !

Some times we impose time to kids to do act fast(like eat,drink and move..) as we need to rush towards off..it is very difficult be calm !! My kutties need my/our help to eat (in time !!) Write on this..

VS Balajee
F/o Nisha and Ananya

ஆகாய நதி said...

Super points :) Thank u!

Sanjai Gandhi said...

இதெல்லாம் இருக்கட்டும்.. பதிவு எழுதினா தமிழ்மணத்துக்கு அனுப்பனும்னு யார் கிட்ட கத்துக்கப் போற்ங்க? :)

Eswari said...

//ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டுதான் ஆட வேண்டுமா?? நின்று கொண்டு ஆடுகிறார்கள்.பேப்பரில் தான் எழுத வேண்டுமா?? சுவரில், தரையில் எழுதுகிறார்கள்//
nice points.

அமுதா கிருஷ்ணா said...

”இதெல்லாம் இருக்கட்டும்.. பதிவு எழுதினா தமிழ்மணத்துக்கு அனுப்பனும்னு யார் கிட்ட கத்துக்கப் போறீங்க”

தமிழ்மணத்திற்கு அனுப்பினேனே....

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger