Tuesday, July 14, 2009

என் செல்லங்கள் பிறந்த போது..

என் செல்லங்கள் இந்த உலகை எட்டி பார்த்த அந்த இனிய தருணம் ரெண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.குறை மாதத்தில்(34-வது வாரம்) பிறந்த ரெட்டை குழந்தைகள் வெறும் 1.75 kg மட்டுமே எடை இருந்தார்கள்.ஐந்து நாட்கள் வரை incubation-ல் வைத்திருந்து ரூம்-க்கு கொண்டு வந்தோம்.

எனக்கு சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறந்ததால் தையல் போட்ட இடத்தில் வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.இதனால் ஒவ்வொரு முறையும் எழுந்து செல்லங்கள் பசி போக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் எனக்கு.குளிப்பதற்கு அம்மாவின் உதவி கண்டிப்பாக தேவை பட்டது.மேலும் இரவில் குழந்தைகள் மாற்றி மாற்றி எழுந்து பாவம் அம்மா எனக்காக,எங்களுக்காக ரொம்பவும் சிரமம் பட்டார்கள்.

தினமும் நர்ஸ் வந்து குழந்தைகளை சுடு நீரில் துடைத்து துணி மாற்றி கொடுத்துவிடுவார்.எனக்கு என் கண்மணிகளை(they were very tiny) சரியாக எடுக்க கூட தெரிந்திருக்கவில்லை...போல்யோ ட்ராப்ஸ் கொடுக்கபட்டது.

ரூம்-க்கு கொண்டு வந்த அன்றே உடல் மஞ்சள் நிறம்மாக மாறவும் ரொம்பவும் பயந்து போய் டாக்டரிடம் கேட்டதும் காலை நேர வெயில்லில்(7-8) காட்ட சொன்னார்.சரியானதும் தான் நிம்மதி ஆனது.

ஒரு வழியாக எங்களை வீட்டுக்கு போக சொன்னார்கள்.குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை குளிக்க வைக்க வேண்டாம் என்றும் பவுடர்,லோஷன் எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொன்னார்கள்.என்னவர் காரை ஒட்ட அப்பாவும்,நானும் குழந்தைகளை பின் சீட்டில் ஜாக்கிரதையாக வைத்து கொண்டு குனியமுத்தூர் போய் சேர்ந்தோம்.அம்மா வீட்டில் இருந்து தேவையானவை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து arrange செய்து வைத்திருந்தார்.

When I was about to enter into house,I felt it like I am on a new journey now, leaving my old self behind, the old immature me who at one point in time couldn’t take care of my own self bonk. Having twins has changed my life, yes, but I am going to enjoy every moment of it and would not give it up for anything.

About a month back we celebrated our kids second birthday on June 5th.We all have come a long way since my delivery but still have to go a long long long way.I thank almighty for blessing me with two lovely sweet and cute angels and really feeling proud as a mother of 2 year old wonderful girls..I've promised myself to spend more time with them,teach them life's good things,empower them with knowledge for self-sustainment and be for them whenever they need me.



8 comments:

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!.

I've promised myself to spend more time with them.

நல்ல விடயம்.

vijiraja said...
This comment has been removed by the author.
vijiraja said...

நெகிழ்ந்தோம் தங்களுடைய பகிர்வே படித்து....
engal chella magaluku நான்கு மாதம் முடிந்து உள்ளது...தினமும் எங்களுடைய அருமையான செல்ல குழந்தயய் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி வருகிறோம். . எங்களால் இயன்ற வரையில் எல்லா நற்பண்புகளையும் நல்ல விஷயங்களையும் எங்கள் குழந்தய்கு கற்பித்து அவளுக்கு நல்ல ஒரு வாழ்வை தர விரும்பிகிறோம்.

Thamiz Priyan said...

அந்த கணங்களை வர்ணிக்க இயலாது என்று நினைக்கிறேன்.. கடைசியில் ஆங்கிலத்திற்கு மாறிட்டீங்களே.. :(

Ungalranga said...

ஆண்டவா.

அடுத்த முறை பொண்ணா பொறக்க வெச்சுடு.ப்ளீஸ்..

என்னதான் இவங்க உணருறாங்கனு தெரிஞ்சிக்க ஒரே க்யூரிஸா இருக்கு..

ப்ளீஸ்..



நல்ல பதிவுங்க..

குழந்தைகள் பிறந்த போதே அம்மாவும் பிறக்கிறாள்னு சொன்னது சரியா இருக்கு..


வாழ்த்துக்கள்>>

குட்டீஸ கேட்டதா சொல்லுங்க..!!

Anonymous said...

உங்க பதிவை பதித்ததும் மீண்டும் அந்த நாட்கள் நினைவு வந்தது.. அப்போது எவ்வளவு வலி தாங்கினாலும் இப்போது நினைத்தால் கொஞ்சம் பெருமையாகவும் நெறைய சந்தோசமாகவும் இருக்கு...

அப்பறம் கோவையா நீங்கள்? எந்த மருத்துவமனையில் பிறந்தார்கள்? எனக்கும் சின்னவள் 35 வாரத்தில் பிறந்து விட்டாள். குட்டிஸ்க்கு என் வாழ்த்துகள்...

ஆகாய நதி said...

My best wishes! :)

Kiruthika said...

அனைவருக்கும் என் நன்றிகள்..இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உங்கள் ஆசிகள் இன்றும் என்றும் வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.குழந்தைகள் பிறந்தது கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில். நாங்கள் இப்போது இருப்பது சிங்கப்பூரில்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger