Tuesday, August 18, 2009

The mixed-up chameleon - புத்தகம்



The mixed-up chameleon - Eric Carle

வயது : 3-6
மொழி : ஆங்கிலம் & இந்தி
விலை : ரூ 175


எரிக்-இன் புத்தகங்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான், The very hungry caterpillar ஒன்றே போதும்! வழக்கம்போல எளிய கதை. தன் தோற்றத்தைக் குறித்தும், தனது சுவாரசியமற்ற வாழ்க்கையைக் குறித்தும் அதிருப்தியடைகிற ஒரு பச்சோந்தியே மெயின் கேரக்டர். தன்னால் நிறங்களை மாற்றிக்கொண்டு வாழ முடியுமென்று அறிந்திருக்கிறது. நாவை நீட்டி பூச்சிகளைப் பிடித்து உணவுண்கிறது. அதனால் பெரிதும் பயனில்லை என்று நினைக்கிறது.

ஒரு நாள் ஜூவிற்குச் செல்கிறது. அங்கு பல விலங்குகளைப் பார்க்கிறது. அந்த விலங்குகளின் உடலமைப்போல தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று எண்ணுகிறது. அப்படி எண்ணியதும் அது விருப்பப்படியே நடந்தும் விடுகிறது. ஃபெளமிங்கோவின் கால்களும், ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், நரியைப் போன்ற வாலும் கிடைக்கப் பெறுகிறது. இப்படி எல்லாமுமாக இருக்கும் நேரத்தில் ஒரு பூச்சி பறந்துச் செல்வதைப் பார்க்கிறது.மாற்றங்கொண்ட தோற்றத்தால் பச்சோந்தியால் பூச்சியைப் பிடிக்க இயலவில்லை. பூச்சியை பிடிக்க வேண்டுமானால் அது பழையத் தோற்றத்துக்கு திரும்ப வேண்டுமென்பதை அறிந்து பழைய பச்சோந்தியாக மாற விரும்புகிறது. அதன் விருப்பமும் நிறைவேறுகிறது.




வண்ணமிகு படங்களுடன், கொஞ்சமே கொஞ்சம் எழுத்துகள் இருக்கிற புத்தகங்களையே தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். அந்த வகையில், படங்களே இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம். பலவகையான விலங்குகளின் தனிச்சிறப்பம்சங்களை அழகாக விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் நாமாக, நமதுத் தனித்தன்மையுடன் இருப்பதன் அவசியத்தையும், அழகையும் சொல்லாமல் சொல்கிறது. மற்றுமொரு கலக்கலான புத்தகம் எரிக்கிடமிருந்து!


வெளிநாட்டு பதிப்பு - போர்டு புத்தகம் எழுநூறு ரூபாய்கள் வரை. ஆனால், இதன் இந்திய பதிப்பு கரடி டேல்ஸ் மற்றும் அமரசித்ர கதாவிலிருந்துக் கிடைக்கிறது, ரூ 175-க்கு. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கதையின் வரிகள்.

சென்னைவாசிகளுக்கு : பெசன்ட் நகரில் words&worth என்று ஒரு கடை இருக்கிறது. சிறிய கடைதான். மிககுறைந்த விலையில் நல்ல புத்தகங்கள்,இந்திய பதிப்பில் கிடைக்கிறது.

Words & Worth
2nd Avenue, Indira nagar,
Besant nagar,
chennai.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ இது புத்தகமாவும் வந்திருக்கா.. இந்த chameleon , caterpillar விசயத்தை அனிமேசனாக கார்டூனுக்கு நடுவில் அடிக்கடி காட்டிப்பார்த்திருக்கேன்... ரொம்ப நல்ல கருத்து.. :)

சந்தனமுல்லை said...

புத்தகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இப்போது அனிமேசன் சிடியாகவும் புத்தகத்தோடு வருகிறது.

அமுதா said...

words&worth நல்ல புத்தகங்கள்... தகவலுக்கு நன்றி

Anonymous said...

First visit! Nice look! Design too laudable! Cheers Moms!!

Osai Chella

Anonymous said...

ammakalinpathivukal.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading ammakalinpathivukal.blogspot.com every day.
quick cash loans
online payday loan

virutcham said...

எனது முதல் விசிட். எனக்கு இது நல்ல அறிமுகம். நல்ல தகவல்கள்.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது
http://www.virutcham.com/category/kids/
பாருங்க.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger