Wednesday, May 26, 2010

அறிமுகம்

வணக்கம். நான் அன்னா. எனது blog இலேயே உருப்படியாக இன்னும் ஒன்றும் எழுதவில்லை, இந்த லட்சணத்தில் எதோ ஆர்வக் கோளாற்றில் (என்று தான் நினைக்கின்றேன் :)) இங்கும் எழுதலாமா என முல்லையிடம் கேட்டேன். பார்ப்போம் எப்பிடிப் போகப்போகின்ற‌தென்று.


என் மகன், அகரனிற்கு இப்போது 21 மாதங்கள். ந‌ம்ப‌முடிய‌வில்லை இன்னும் 3 மாத‌ங்க‌ளில் 2 வ‌ய‌தாக‌ப்போகின்ற‌தென்று. நான் எப்போதுமே பிள்ளை வ‌ள‌ர்ப்பு ச‌ரியான‌ scariest job என்று சொல்லிக்கொண்டிருந்த‌னான். ஒரு உயிருக்கு 100% பொறுப்பாக‌ இருப்ப‌தென்ப‌து ஒருவ‌கையில் terrifying feeling. என்ன‌ பிழை விடுவ‌மோ, பிழை விட்டால் அதைத் தெரிந்து உட‌ன் திருத்திக் கொள்ள‌ அவ‌காச‌ம் அநேக‌மாக‌ இருக்காதே. அப்பிழையின் விளைவை நாம் அறிந்து கொள்ளும் போது பிள்ளை வளர்ந்தவனாகி விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கிறதே இப்படி மனதில் ஒரே போராட்டம். அது இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அகரன் பிறக்க முன்னும் இப்பவும் இயலுமானளவு parenting books, magazines வாசிக்கிறனான், seminars க்கும் நேரம் கிடைக்கும் போது போறனான் to keep us updated on child development and parenting knowledge. May be I am too paranoid. Not sure. எனது அம்மாவும், சிலசமயம் எனது better half வும் கூட நக்கலாக "இவளெல்லாம் புத்தகம் படிச்சு, parenting ல் ப‌ட்ட‌ப்படிப்பு முடித்துத்தான் பிள்ளை வ‌ளர்ப்பாள், எமது பெற்றோர்கள் வளர்க்காத பிள்ளையா?" என்பார்க‌ள். என‌க்க‌தில் முழுதாக‌ உட‌ன்பாடில்லை. ஏனெனில் நாம் வ‌ள‌ரும் போதோ, எம‌து பெற்றோர்க‌ள் வ‌ளரும் போதோ இருந்த‌ உல‌கத்திற்கும் இப்போதிருக்கும் உல‌க‌த்திற்கும் எவ்வ‌ள‌வோ வித்தியாச‌மிருக்குது. ஒரு வயதுப் பிள்ளைக்கே இப்போது கணனியை உபயோகிக்கத்தெரியும். உல‌க‌ம் மிக‌ மிக‌ வேக‌மாக‌ மாறிக்கொண்டிருக்குது. இன்னும் இருப‌து வ‌ருட‌ங்க‌ளில் எம‌து பிள்ளைக‌ள் த‌ம் கால்க‌ளில் நின்று த‌ம் வாழ்க்கையை lead பண்ணத்தொட‌ங்கும் போது உல‌க‌ம் எப்ப‌டி இருக்குமென‌ க‌ற்ப‌னை செய்வ‌தே க‌டின‌மாயுள்ளது. ஆனால் நாம் எம் பிள்ளைகளை, கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இருக்கும் உலகத்தில் மிக successful ஆன அதே நேரம் ச‌ந்தோசமான, fulfilled and moral life ஜ முன்னெடுக்க இப்போதிருந்து தயார் படுத்த வேண்டுமென்பதை நினைக்க, அதைச் செய்ய முடியுமா என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது.

அகரனை ஒரு equality-minded humanistic and curious child, free from any stereotypes ஆக‌ வளர்ப்பதே எமது குறிக்கோள். இவ்வலைப்பக்கத்தில் பிள்ளை வளர்ப்பில் நான் செய்வதை, நான் வாசிப்பதில் ஏதாவது சுவாரசியமானதை, மற்றும் பிள்ளை வளர்ப்பு பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது என்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்த முல்லைக்கு என் நன்றிகள்.

3 comments:

சந்தனமுல்லை said...

அம்மாக்கள் வலைப்பூவிற்கு வரவேற்கிறோம் அன்னா! :-)
அழகான அறிமுகத்திற்கும், குழந்தை வளர்ப்பு குறித்த குழப்பங்களையும், தெளிவுகளையும் பகிர்வதற்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொடருங்கள் அன்னா.. :)

குந்தவை said...

Welcome... Anna.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger