Showing posts with label புதிய முயற்சி. Show all posts
Showing posts with label புதிய முயற்சி. Show all posts

Tuesday, June 16, 2009

அன்பு தோழிகளே !!


பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

வாய்ப்புக்கு நன்றி முல்லை.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger