Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Thursday, December 3, 2009

விகடன் வரவேற்பறையில் அம்மாக்களின் வலைப்பூக்கள்

இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். அழகிய வலைப்பூக்களைத் தன் வரவேற்பறையில் அடையாளம் காட்டும் ஆனந்த விகடன், இன்று தன் வரவேற்பறையில் “அம்மாக்களின் வலைப்பூக்கள்” வலைப்பூவிற்கு இடம் கொடுத்துள்ளது.




வலைப்பூவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இவ்வலைத்தளத்தை வாசித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். இது அம்மாக்களுக்கு மேலும் நல்ல பதிவுகளைத் தர நல்லதொரு ஊக்கமாக அமையும் என்பது உண்மை.

Sunday, June 7, 2009

நன்றி: - மித்ரா

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. எங்கள் குட்டி தேவதைக்கு " மித்ரா " என்று பெயர் சூட்டி உள்ளோம் .

Thursday, May 28, 2009

வாழ்த்துகள் : வீணா !!

வீணா மற்றும் சிவாவிற்கு வாழ்த்துகள் -
குட்டி தேவதைக்கு மே 26 அன்று பெற்றோராகியிருக்கிறார்கள்!!

அம்மாக்கள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகள், Happy Motherhood Veena!

Tuesday, May 5, 2009

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.

பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.

அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்:)

Wednesday, December 31, 2008

ஹாப்பி நியூ இயர்

ஹாய் எல்லாரும் நியூ இயர் கேக் சாப்பிடறீங்களா, இது என்னோட ட்ரீட்




இந்த ரோஸஸ் கூட உங்களுக்குதான்



ம்ம்ம், அவன் என்ன செய்றான்.




ஹைய்யொ அந்தப் பொண்ணு என்ன ஏன் அப்புடி பாக்குது, எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்குது பாஸ்


என்ன மாதிரியே சிரிச்சிக்கிட்டே இருங்க எல்லாரும் கடைசி வரைக்கும்


இதுவரை நடந்த சோகங்கள் இனியும் தொடராமல், இனிவரும் வருடங்கள் எல்லாரும் சுபிட்சமாக இருக்க ஒரு குழந்தையின் வேண்டுதலும், புத்தாண்டு வாழ்த்தும்.




எல்லார்க்கும் என்னோட ஹாப்பி நியூ இயர், எல்லாரும் சமர்த்தா இருக்கணும் சரியா.
BYE BYE 2008
WELCOME 2009

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger