Showing posts with label சந்தனமுல்லை. Show all posts
Showing posts with label சந்தனமுல்லை. Show all posts

Wednesday, October 16, 2013

தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை

பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். "குளோரியாவின் வீடுபப்புவை விட எனக்கு மிகவும் பிடிக்கும்மேலும்,ஆயாவுக்காக செய்திகளும்,சீரியல்களும்(ஒன்றிரண்டு), வீட்டுக்கு வரும் உறவினர்களுக்காக அவ்வப்போது பாடல் சேனல்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும்ஒருசில துள்ளல் பாடல்களுக்கு பப்புவும் குதியாட்டம் போடுவாள்பிறகுஅவளது விளையாட்டை தொடர்ந்து விளையாடச் சென்றுவிடுவாள்ஆனால்அதெல்லாம் அந்த வயதில் பப்புவை அவ்வளவாக டிஸ்டர்ப் செய்யவில்லை.அவளது விளையாட்டின் மீது தான் கவனம் இருக்கும்.


அப்போதெல்லாம் பப்புவை கேர் டேக்கர் வைத்துதான் கவனித்துக்கொண்டேன்அவருக்கோ மதியத்தில் வரும் சீரியல்கள் பார்ப்பதில் வெகுவிருப்பம்மதியம் பப்பு பள்ளியிலிருந்து வந்ததும்,சீரியலை பார்த்துக்கொண்டே உணவூட்டுவார் என்று தெரியும்ஆனாலும்,சீரியல்கள் பார்ப்பதை தடை செய்யவெல்லாம் நினைத்ததில்லை.தொலைக்காட்சியைபப்பு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதும் காரணம்.


ஏதோ ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன்பக்கத்துவீட்டு பெண் வீட்டுக்கு வந்தார்அவரை பார்த்ததும் பப்பு "அவங்க கெட்டவங்கஆச்சி?"என்றாள்எனக்கோ அதிர்ச்சி.அவரது காதில் விழுந்துவிடக்கூடாதே என்றும் பதட்டம்இத்தனைக்கும்அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். "இல்லையேஏன் அப்படி சொல்றேஎன்றதும், "அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க.முடி வைச்சிருக்காங்க‌ டீவியில வர்ற மாதிரியே இருக்காங்கஎன்றாள்.விசாரித்ததும் உண்மை புலப்பட்டது. "உதிரிப்பூக்கள்"என்றொரு மதிய நேரத்து சீரியல்அதில்குழந்தையை கடத்துவதோ அல்லது ஏதோவொன்று...அதில் வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை நேர்ப்படுத்தி (ஸ்ட்ரெய்ட்டன்),முகத்தில் மேக்கப்போடு வருமாம்.
பக்கத்துவீட்டுப் பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி விரித்து விட்டிருந்ததையும்லிப்ஸ்டிக் போட்டிருந்ததையும்அந்த வில்லி கேரக்டரையும் பப்பு தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள்ஒருவரை பார்த்ததும் "கெட்டவர்என்ற எண்ணத்தை தோற்றத்தை பார்த்து சொல்ல,தொலைக்காட்சி ஒரு சிறுகுழந்தைக்கும் கூட கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சிஅதைவிடமேக்கப்போடு அல்லது கொஞ்சம் மாடர்னாக தோற்றத்தில் இருந்தாலும் அவர்களை ஸ்டீரியோடைப் செய்வதுபோல் "அவர் நல்லவர் அல்லஎன்ற எண்ணத்தை தோற்றுவிப்பது அபாயகரமானதாக இருந்தது.


சீரியலை தொடர்ந்து பார்க்காவிட்டாலும்அது பப்புவை ஈர்த்திருக்கிறது.முக்கியமாககுழந்தைகள் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அவர்களை ஈர்க்கிறதுஇதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்பப்புகண்ணகி கதையை அறிந்துக்கொண்டபோதுகண்ணகி மதுரையை எரித்தது அவளுக்கு அறவே பிடிக்கவேயில்லை. "என்னை மாதிரி குழந்தைங்களும் செத்து போயிருப்பாங்களாஎன்பதே அவளது கவலையாக இருந்ததுசில வருடங்களுக்கு முன்ஜப்பானில் சுனாமி தாக்கியபோது, 'ஸ்கூல்ல ஆன்ட்டிகுழந்தைங்களோட இருந்தாலும் அலை அடித்துகொண்டு போய்விடுமாகுழந்தைகள் என்ன ஆவார்கள்எப்படி காப்பாற்றப்படுவார்கள்என்பதே அவளை வருத்தியெடுக்கும் கேள்விகளாக இருந்தனஇதில்,சீரியல்களும் பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு விதை விதைப்பதை அனுமதிக்க முடியவில்லைஅதுமட்டுமல்லசில சமயங்களில்,தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி இருந்தது.


தொலைக்காட்சியை அப்புறப்படுத்தியதற்கு இவை மட்டுமே காரணமில்லைநான் வேலையிலிருந்து வர தாமதமானால்,தொலைக்காட்சி நிறுத்துவாரற்று ஓடிக் கொண்டேயிருக்கும்சுட்டி டீவிதான். "பப்புதான் நிறுத்த விடமாட்டேங்குதுஎன்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார் ஆயாஎன்னையும் நிறுத்த அனுமதிப்பதில்லை.விடுமுறை நாட்களில்உறவினர்கள் வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை கட்டுபடுத்தவே முடியாதுஇவையெல்லாம் சேர்த்தே அந்த தைரியமான‌ முடிவை நோக்கி தள்ளின. :‍)


இப்போது கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.


ஆரம்பத்தில்நிறைய நேரம் இருப்பது போல் இருந்ததுமுக்கியமாக வீடு அமைதியாக இருந்ததுநிறைய பேச்சுகளும்,உரையாடல்களும் இருந்தன.முன்பும் இப்படிதான் என்றாலும்தொலைக்காட்சியே சுத்தமாக இல்லாமல் இருந்து பார்த்தால் நான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளலாம்.


தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டு அவ்வப்போது தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல்சாப்பிடும் நேரத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்என்ன சாப்பிடுகிறோம் என்று ருசித்து சாப்பிட முடிந்தது.எண்ணங்களை/நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக நடைபெற்றதுவார நாட்களில் கதை கேட்டுக்கொண்டும் வாரயிறுதிகளில் சிறுவர்மணியின் தொடர்கதை/கதைகளை வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான் சாப்பிட்டாள்கடந்த சில மாதங்கள் வரை தொடர்ந்ததுஇது. (மாயமோதிரம் முடிந்துவிட்டது!)


கைவசம் நிறைய நேரம் இருந்ததால்புத்தகங்கள் வாசித்தோம்வெளியே சுற்றினோம்மாடிக்குச் சென்று நிலவை,வானத்தை,நட்சத்திரங்களை ரசித்தோம்விரைவாக படுக்கைக்குச் சென்று விடுவதால் தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லைமுக்கியமாக குழந்தைகளுக்கு 12 வயது ஆகும்வரையாவது எட்டு மணி நேர தூக்கம் மிக முக்கியம்பப்புவை தூங்கும்போது எப்போதுமே பாதியில் எழுப்பியதேயில்லைஇதில்ஆயா ரொம்ப கண்டிப்பானவர்அவளாகவே எழுந்தால் உண்டு.அதனை இப்போதுவரை கடைபிடித்து வருகிறோம்அதனாலேயே,அதிகாலையில் சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால் "நீயா எழுந்தா போகலாம்என்று சொல்லிவிடுவதுவெளியூருக்குச் சென்றாலும் இயன்றவரை இதையே கடைபிடிக்கிறோம்.


ஆனாலும்தொலைக்காட்சிதான் இல்லையேதவிரகுழந்தைகளுக்கான படங்களை பார்க்கிறோம்பொதுவாகஇணையத்தில் விமர்சனம் பார்த்துவிடுவேன்இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை செல்வதுண்டுகடைசியாகநாங்கள் பார்த்தது மான்ஸ்டர் யுனிவர்சிடியும்,பாக் மில்கா படமும்அதன்பிறகு ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம் கிடைக்கவில்லைஅதோடுஹார்டு டிஸ்கில்,குழந்தைகளுக்கான கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும் உள்ளதுபப்புவுக்கு பார்த்த படத்தையே பல தடவைகள் பார்க்க வேண்டும்சில சமயங்கள் நானும் உடன் இருக்க வேண்டும்படத்தில் அவளுக்கு பிடித்த இடங்களில் அவளோடு சிரித்து அல்லது அவளை திரும்பி பார்த்து புன்னகைத்து என்று கம்பெனி தர வேண்டும்அதோடுகம்ப்யூட்டர் விளையாட்டுகளும் உண்டு

இவையெல்லாமேஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் வரை தொடரும்ஆனால்தினமும் அல்லவாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறைதொலைகாட்சியை தடுக்க முடிந்த அளவுக்கு கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லைவாரயிறுதிகளில்தான் தினம் ஒரு மணிநேரம் ஐபேட் என்ற ஏற்பாடுஆனாலும் அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை.டெம்பிள்ரன்னின் ஓட்டத்தை பொறுத்து அதைத் தாண்டியும் செல்வதுண்டு.ஆனால்பலமாதங்கள் வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம்எனவே ஐபேட் பப்புவின் நேரத்தை விழுங்குவதில்லை.


ஹார்ட் டிஸ்கில்குழந்தைகளுக்கான படங்கள் பார்ப்பதை நாங்களே விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம்தொலைகாட்சியைப் போல் அதில் கமர்சியல்களோ அல்லது தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ வருவதில்லைமுக்கியமாகவிளம்பரங்களின் மாயவலைக்குள் இதுவரை விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே இருக்கிறது. (எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை!!)


நானும் பப்புவோடு படம் பார்ப்பதோடு சரி.பெரிதாகஆர்வமில்லாததால்,சினிமாவை பார்ப்பதில்லைஎனவேநானும் பெரிதாக மிஸ் செய்வதில்லை.தொலைகாட்சி இல்லாததால்எதையும் இழந்ததாகவும் நினைக்கவில்லை.சொல்லப்போனால்நிம்மதியாக இருக்கிறதுஇப்போதுஎங்கள் வீட்டைப்பார்த்துபப்புவின் நண்பர்கள் வீடுகளிலும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்அவர்களும்இங்கு வந்தால் கம்ப்யூட்டரை,தொலைக்காட்சியை தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்.


இப்படியெல்லாம் இருப்பதால்பப்பு ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத மகாத்மா என்றெல்லாம் பொருளல்லபப்புவுக்கு சோட்டா பீம் ரொம்ப‌ பிடிக்கும்ஊருக்குச் சென்றால் சோட்டாபீம்தான்ஒன்றிரண்டு நாட்கள்தானே என்று பெரிதாக கண்டுகொள்வதில்லைஅதோடுவீட்டில் இருக்கும் நேரமும் குறைவுஅவளது இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால்'பார்க்கவே விடுவதில்லைஎன்ற எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை.சிலசமயம்யூடியுப்பில் சோட்டாபீமும் பார்ப்பாள்ஆனால்யூட்யூபில் வசதி என்னவென்றால்நேரத்தை விழுங்காதுஅரைமணிநேரம் என்றால் அவ்வளவுதான்.


இப்போதுஇதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட அவள் கம்ப்யூட்டரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்ஆனால்என்ன பார்க்கலாம் என்பது நம் கையில் உள்ளதுதொலைக்காட்சியில் அப்படி இல்லைநாம்/குழந்தைகள் என்ன பார்க்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்யும் வகையில் இருப்பதுதான் வசதிடீவியில் வருவதையெல்லாம் காணலாம் என்பதையோ அல்லது நம் நேரத்தை வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்க முடியவில்லைமேலும்பப்புவுக்கு எந்த சினிமா நடிகர்களையும் இதுவரை தெரியாதுஅவளுக்குத் தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான்அதுவும் பெயரளவில்அவர் எப்படியிருப்பார் என்று கூட தெரியாதுகடைசியாக இருந்த ஒரு கேர் டேக்கர் 'வடிவேலு இப்படி சொன்னார்அப்படி செய்தார்வடிவேலு ஜோக் சொல்லி உணவூட்டுவார்மற்றபடிபோஸ்டரில் கூட யாரையும் கண்டுபிடிக்க தெரியாதுஒருமுறை, 'உனக்கு தனுஷ் பிடிக்குமாசூர்யா பிடிக்குமாஎன்று யாரோ கேட்டார்கள்பப்பு ஒரே ஙே! :‍))))


ஏதாவது ஹாபி கிளாசுக்குச் சென்றால்வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற அம்மாக்களோடு பேசுவதுண்டுசிலருக்குஇப்படி தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது உவப்பாக இருப்பதில்லைநேஷனல் ஜ்யாகிரபி போன்ற சேனல்கள் இருந்தால் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்,மேலும்தொலைகாட்சி பார்ப்பதால்மொழியை ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும் என்றும் சொல்வார்கள்எனக்குதானே தெரியும்இங்கு என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி இருந்தாலும் ஓடுவது என்னவோ சுட்டி டீவியாகவோ அல்லது நிக்காகவோ தான் இருக்கும் என்று!


எனவேஇப்போதுவரை இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.இதைத்தாண்டி, 'தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாம்அம்மாவை நச்சரிக்கலாம்என்று பப்புவுக்கு தெரியவில்லையா அல்லது இருப்பதே போதும் என்று புரிந்து ஏற்றுக்கொண்டாளா என்றும் தெரியவில்லை.சமீபத்தில்தான் தெரிய வந்ததுஇப்போதெல்லாம் வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன் டீவிக்கள்தானாமே!! அந்த செலவும் மிச்சம் என்று எண்ணிக்கொண்டேன்.


ஆரம்பத்தில்ஆயாவுக்குத்தான் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்ததுநாள் முழுக்க தனியாக இருப்பது கஷ்டம்தானேஆனால்ஆயா பப்புவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டார்செய்தி சேனல்களுக்குப் பதில் செய்தித்தாள்கள் வாசித்தார்கதை புத்தகங்கள் வாசித்தார்பப்புவோடு லாப்டாப்பில் டாம் ஜெர்ரி பார்த்தார்முக்கியமான நேரத்தில் புதிய தலைமுறை செய்திகளை பார்த்தார்ஆங் சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்த போது பார்க்க வேண்டும் என்று ஆயாவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்ததுநான் பப்புவை சற்றே பெரியவளாக இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு வந்ததுதொலைக்காட்சியை மிஸ் செய்தது இது போன்ற சமயங்களில்தான்.


ஆனால்இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியாதுவீட்டில் நடைமுறையில் இருப்பதை அனுபவமாக பகிர்ந்துக்கொண்டுள்ளேன்உங்களின் அனுபவங்களையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்பகிர்ந்துக் கொள்ளுங்களேன்! 

- சந்தனமுல்லை 

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். முதல் இடுகையாக தொலைக்காட்சி பற்றி தன் அனுபங்களை சந்தனமுல்லை எழுதியுள்ளார். என் பதிவில் பதிந்து இருந்தேன். இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன்.

Saturday, April 17, 2010

குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!

மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
:-)

இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.
)

அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)

1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்

2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்

3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.

4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!


5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!

குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!


என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)

Thursday, April 15, 2010

Summer camp @ Blogdom!



ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.

2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )


1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்)
mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.

2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.

3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.

4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.

5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது
mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.

குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும்
நன்றிகள்!!

Thursday, April 8, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஓரு நாள் அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

(ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!)

Wednesday, November 11, 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை - செல்வனூரான் அவர்களின் பதிவிலிருந்து!

தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பதிவிலிருந்து "

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
"

மீதியை இங்கே அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை வாசியுங்களேன்! நல்ல இடுகைக்கு நன்றி தங்கராசு செல்வேந்திரன்!

Wednesday, August 19, 2009

The happy Hedgehog - புத்தகம்



The happy Hedgehog

வயது : 5 - 12 வயதுவரை
மொழி : ஆங்கிலம்


இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தேர்வு செய்தேன், எந்தவொரு அபிப்ராயமுமில்லாமல். சமீப நாட்களாக பப்பு முள்ளம்பன்றி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அங்கிருந்த டீடெய்ல் மட்டும் பார்த்து வாங்கிவிட்டேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.


மிக்கோ என்பது அந்த முள்ளம்பன்றியின் பெயர். பூச்சி நண்பர்களும், நறுமணமுள்ள பூக்கள் நிரம்பியதுமான ஒரு அழகான தோட்டத்தில் வசித்து வந்தான். எல்லாச் செடிகளும் அவனுக்குப் பரிச்சயம். மூலிகைகளையுங்கூட அறிந்திருந்தான். மிக்கோவின் தாத்தா, இவனை இப்படியேவிட்டால் பகல் கனவு கண்டுக்கொண்டு எதையும் வாழ்வில் சாதிக்கமாட்டானென்று எண்ணினார். தோட்டத்தை விட்டு வெளியே சென்று மற்ற மிருகங்களைப் பார்த்து அவைகளைப் போல் சாமர்த்தியமாக, வேகமாக, பலமுள்ளவனாக இருப்பது எப்படியென்று கற்றுக்கொள் என்று அனுப்பிவிட்டார். வேகமாக ஓட பயிற்சியெடுக்கும் ஒரு ஆமை, புத்தகத்தை வைத்து மனப்பாடம் செய்யும் முயல், பாரமான கல்லைத் தூக்கி பயிற்சியெடுக்கும் கீரியை சந்திக்கிறான் மிக்கோ. ஆனால் இவர்களில் யாருமே அந்தந்த வேலையை செய்வதால் மகிழ்ச்சியடைவதில்லை என்று அறிந்துக்கொள்கிறான். தனக்கு அந்த தோட்டத்தில் வாழ்வதே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உணர்ந்து தோட்டத்திற்கு வந்துவிடுகிறான்.




இந்தக் கதை பப்புவின் வயதுக்கு அதிகம் என்றாலும் புத்தகத்தின் படங்களும்
சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியும் பப்புவிற்கு பிடித்திருந்தது. அடிக்கடி ரிப்பீட்டு செய்ய வேண்டும் இந்தக்கதையை. பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!

Tuesday, August 18, 2009

The mixed-up chameleon - புத்தகம்



The mixed-up chameleon - Eric Carle

வயது : 3-6
மொழி : ஆங்கிலம் & இந்தி
விலை : ரூ 175


எரிக்-இன் புத்தகங்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான், The very hungry caterpillar ஒன்றே போதும்! வழக்கம்போல எளிய கதை. தன் தோற்றத்தைக் குறித்தும், தனது சுவாரசியமற்ற வாழ்க்கையைக் குறித்தும் அதிருப்தியடைகிற ஒரு பச்சோந்தியே மெயின் கேரக்டர். தன்னால் நிறங்களை மாற்றிக்கொண்டு வாழ முடியுமென்று அறிந்திருக்கிறது. நாவை நீட்டி பூச்சிகளைப் பிடித்து உணவுண்கிறது. அதனால் பெரிதும் பயனில்லை என்று நினைக்கிறது.

ஒரு நாள் ஜூவிற்குச் செல்கிறது. அங்கு பல விலங்குகளைப் பார்க்கிறது. அந்த விலங்குகளின் உடலமைப்போல தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று எண்ணுகிறது. அப்படி எண்ணியதும் அது விருப்பப்படியே நடந்தும் விடுகிறது. ஃபெளமிங்கோவின் கால்களும், ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், நரியைப் போன்ற வாலும் கிடைக்கப் பெறுகிறது. இப்படி எல்லாமுமாக இருக்கும் நேரத்தில் ஒரு பூச்சி பறந்துச் செல்வதைப் பார்க்கிறது.மாற்றங்கொண்ட தோற்றத்தால் பச்சோந்தியால் பூச்சியைப் பிடிக்க இயலவில்லை. பூச்சியை பிடிக்க வேண்டுமானால் அது பழையத் தோற்றத்துக்கு திரும்ப வேண்டுமென்பதை அறிந்து பழைய பச்சோந்தியாக மாற விரும்புகிறது. அதன் விருப்பமும் நிறைவேறுகிறது.




வண்ணமிகு படங்களுடன், கொஞ்சமே கொஞ்சம் எழுத்துகள் இருக்கிற புத்தகங்களையே தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். அந்த வகையில், படங்களே இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம். பலவகையான விலங்குகளின் தனிச்சிறப்பம்சங்களை அழகாக விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் நாமாக, நமதுத் தனித்தன்மையுடன் இருப்பதன் அவசியத்தையும், அழகையும் சொல்லாமல் சொல்கிறது. மற்றுமொரு கலக்கலான புத்தகம் எரிக்கிடமிருந்து!


வெளிநாட்டு பதிப்பு - போர்டு புத்தகம் எழுநூறு ரூபாய்கள் வரை. ஆனால், இதன் இந்திய பதிப்பு கரடி டேல்ஸ் மற்றும் அமரசித்ர கதாவிலிருந்துக் கிடைக்கிறது, ரூ 175-க்கு. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கதையின் வரிகள்.

சென்னைவாசிகளுக்கு : பெசன்ட் நகரில் words&worth என்று ஒரு கடை இருக்கிறது. சிறிய கடைதான். மிககுறைந்த விலையில் நல்ல புத்தகங்கள்,இந்திய பதிப்பில் கிடைக்கிறது.

Words & Worth
2nd Avenue, Indira nagar,
Besant nagar,
chennai.

Monday, August 17, 2009

Grizzly Dad - புத்தக விமர்சனம்



கதை : Grizzly Dad
மொழி : ஆங்கிலம்
வயது : 3-8 வயது வரை


ஒரு நாள் காலையில் அப்பா எழுவதற்கு மனமில்லாமல் எழுகிறார். எழும்போதே மூட் அவுட்!திரும்ப படுக்கைக்குச் சென்று விடுகிறார். குட்டிப்பையன் அப்பாவின் பொறுப்பில். அம்மா தங்கைகளைக் கூட்டிக்கொண்டு தங்கைகளை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார். குட்டிப்பையன் அப்பாவை எழுப்புகையில், தன் அப்பா ஒரு பெரிய கரடியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான்!!அப்பா-கரடிக்கு முகம் கழுவ, ரெடியாக உதவி செய்கிறான். காலை உணவை இருவரும் அருந்துகிறார்கள். அப்பா, கரடியாக இருப்பதால் எல்லாவற்றையும் மேலே கீழே கொட்டி வீட்டை வீட்டை நாசமாக்குகிறார். பின்னர் சிறுவனும் அப்பா-கரடியும் சினிமாவுக்குப் போகிறார்கள், பின்னர் பார்க்கில் சென்று ஸ்கேட்டிங் பழகுகிறார்கள், கரடிக்கு ஸ்கேட்டிங் தெரியாததால் சிறுவன் கற்றுத் தருகிறான். கரடி சிறுவனுக்கு மரம் ஏறவும், ஒன்றுமே செய்யாமல் மரக்கிளையில் எபபடி இருப்பது என்றும் சொல்லித் தருகிறது. பின்னர் வீட்டுக்கு வந்து இருவரும் சாண்ட்விச் செய்து சாப்பிடுகிறார்கள். கரடி சிறுவனை கட்டியணைத்துக்கொள்கிறது. அந்த நொடியில் கரடி திரும்ப அப்பாவாகிவிடுகிறது! அம்மாவும் தங்கைகளும் வீடு வந்து சேர்கிறார்கள். வீடு குப்பையாக இருப்பதை பார்க்கும் அம்மா, இது வீடா அல்லது பன்றிகளின் கூடாரமா என்று கேட்கும் போது இருவரும் சுத்தம் செய்யக் கிளம்புகிறார்கள். அப்போது இருவருக்கும் பன்றிக்குட்டியின் வால் முளைத்து இருக்கிறது!! :-)




உணர்ச்சிகளை பற்றிய ஒரு எளிதான கதை. கதையில், பப்புவை மிகக் கவர்ந்த அம்சம் படங்கள். அப்பாவுக்குக் கோபம் இருந்தாலும், அதைச் சிறுவனிடம் வெளிக்காட்டாமல் இருவரும் ஒரு நாளை எப்படி செலவழிக்கிறார்கள் என்றும் சொல்கிறது, சிறுவனின் பார்வையில்!!

Monday, August 10, 2009

I can...

"As a man thinketh; so is he " - பைபிள்.

”வெள்ளத்தனைய மலர்நீட்டம்” - திருக்குறள்.

நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன! நம்மைப் பற்றி நாம் கொள்ளும் எண்ணங்களே நமக்கான இடத்தைத் தீர்மானிக்கின்றன! சிநேகிதியின் இந்தக்கட்டுரை நம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!!நன்றி சிநேகிதி!!

Tuesday, July 28, 2009

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே...!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) - அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து - மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

Thursday, July 2, 2009

என் குழந்தைக்கான பள்ளி - அறிவிப்பு!

தந்தையர் தினத்தை கருத்தாகக் கொண்டு இடுகையிட்டு கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள்! பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள்!பள்ளிக்கூடம்/டே கேர்/ப்ளே ஸ்கூல்கள் இவற்றை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு கேள்விகள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் - இந்த மாதம் இவற்றைக் குறித்து நாம் அனைவரும் பேசுவோமா?!

குழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது? என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம்? அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம்? உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன? நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏதோவொன்று உங்களுக்குள் தோன்றியிருக்கும் அல்லவா, இந்த பள்ளியில் நமது மகள்/மகன் சேர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நன்றாக வளருவார்கள் என்று..அதை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் உபயோகப்படும்.

உங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லையெனில் என்ன மாதிரி பள்ளி/டே கேர்/ப்ளே ஸ்கூல்-ஐ தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்! என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து...எல்லாவற்றையும் பேசுவோம்!அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களும் பங்களிக்கலாம்.
லேபிள்கள் உங்கள் பெயர் மற்றும் என் குழந்தைக்கான பள்ளி!


பி.கு: அடுத்த மாதத்திற்கான தீம்கள் வரவேற்கப்படுகின்றன!

Friday, June 26, 2009

புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்!

1. எமோஷனல் சப்போர்ட் - உங்கள் மனைவியுடன் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள். தாய் ஒரு அறையில் குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருப்பார். எல்லோரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டோ அல்லது ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டோ இருப்பார்கள். தான் ஒரு பால் கொடுக்கும் மிஷிந்தானோ என்று எண்ணும்படி விட்டுவிடாதீர்கள்!

2. அவர் விரும்பியதை செய்ய உதவுங்கள் - குழந்தை பிறந்த கொஞ்ச நாள் வரை உறவினர்களும், எண்ணற்ற அறிவுரைகளாலும் ,ஏகப்பட்ட அட்வைஸ்களாலும் சூழ்ந்துக் கொண்டிருப்பார்கள். சமயம் பார்த்து நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் கோணாதபடி. (சிலசமயங்களில் ஏதேனும் படிக்கவோ அல்லது தூங்கவோ விரும்பலாம்.)


3. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனால் தாயைத்தான் உடனே விமர்சிப்பார்கள். அவருக்கு ஆறுதலாக நடந்துக் கொள்ளுங்கள். தாய் குளிக்கும் நேரத்திற்கும், குழந்தை தும்முவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்தானே!

4. அவ்வப்போது சர்ப்ரைஸ் டின்னர் அல்லது குழந்தை தூங்கும் நேரம் சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள்!(she may need a break! )

5. 10 மாதங்களாக அவரது உடல் பல மாறுதல்கலை எதிர்கொண்டிருக்கும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு சில காலம் எடுக்கலாம். அதைக் குறித்த விமர்சனங்களிலிருந்து தடுத்து விடுங்கள். அதைக்குறித்த அவரது சோர்ந்த மனநிலைக்கு ஆறுதலாக இருங்கள்!

ஹேப்பி ஃபாதர்ஸ் டே!

Monday, June 1, 2009

தந்தையர் தினம் - அறிவிப்பு!

ஹாய் அம்மாஸ்,
அன்னையர் தினத்தை கருத்தாகக் கொண்டு மிக அருமையான படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கும், அம்மாக்கள் வலைப்பூ வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரின் இடுகையும் மிகச் சிறப்பான பகிர்வாக இருந்தது! இந்தமாதம், தந்தையர் தினத்தைக் கொண்டு வருகிறது. அப்பாக்களுக்கும் நமது வாழ்வில் சரிபங்கு இருக்கிறது அம்மாவைப் போல! பள்ளிக்கும் ஹாஸ்டலுக்கும் கொண்டுவந்து விட்டு அழைத்துச் செல்வது முதல், யாராவது திட்டிவிட்டால் பரிந்துக்கொண்டு வந்து பாதுகாப்பது, நாம் கேட்பதற்கு முன்னரே நமக்கு பிடித்ததை வாங்கி அசத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது/எடுக்க உதவுவது என்று அப்பாக்கள் நமது வாழ்வில் நிறைந்து இருக்கிறார்கள்.
அதனால் இம்மாதம், நாம் தந்தையரைக் கொண்டாடுவோம்!


அன்னையர்தின அறிவிப்புஇடுகையில் சொல்லப் பட்ட guidelines-ஐ தொடர்வோம், இப்போதும்! அப்பாவிற்கு கடிதமோ, அல்லது புதிதாக அப்பாவாகி இருப்பவர்களுக்கு டிப்ஸோ அல்லது உங்கள் நினைவுகளையோ, உங்கள் குழந்தையின் அப்பாவிற்கு சொல்லவிரும்புவதையோ....உங்கள் கற்பனைகளே எல்லை! அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களுக்கும் அதே! லேபிள்: உங்கள் பெயர் மற்றும் ஃபாதர்ஸ் டே 09.

கோடை தணிந்து விடுமுறையும் முடிந்திருக்கும் இந்தமாதத்தில், வலைப்பூ உறுப்பினர் அம்மாக்கள், விடுமுறை சுவாரசியமான பயண அனுபவங்களை/சுற்றுலாதல குறிப்புகளை நமது வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளலாம். அதாவது, நமது அனுபவங்களில் பிறருக்கு உபயோகமாகயிருக்கும் என்று நினைப்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள், டிப்ஸ் போன்றவற்றை நமது வலைபூவில் பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், தந்தையர்தின இடுகைகள் மூலம்! :-)

Saturday, May 9, 2009

பிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்

நல்ல பயனுள்ள பதிவு ஆகாயநதி! உபயோகமான குறிப்புகள், மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, சொன்னவேகத்தில் பதிவிட்டதற்கு! :-) மேலும் சில குறிப்புகள் :

1. due date சொல்லியிருக்கும் நாளிலிருந்து +/-15 நாட்கள் எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மனதளவிலும்! எ.கா (20ஆம் தேதி எனில், 15 நாட்களுக்கு முன்பும் பிறக்க சாத்தியங்களுண்டு ) ஆகாயநதி சொன்னதுபோல் உடலில் எங்கிருந்து வேண்டுமானாலும் வலி தொடங்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வந்தாலோ, உள்ளாடையில் ஈரமாக உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையை
அணுகுவது நலம். பனிக்குடம் உடைவதாகக் கூட இருக்கலாம். (suspect..suspect..suspect!)

2. உங்கள் மகப்பேறு மருத்துவரின் தொலைப்பேசி-யை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமும்,இரவில் வலி வந்தால் அவருக்குத் தெரியப்படுத்துவது பற்றி, மருத்துவமனை procedures பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். (எ.க-ஆக, நான் கன்சல்ட் செய்த மருத்துவர் கிளினிக்கில் கன்சல்ட் செய்வார். பேஷண்டுகளுக்கு இசபெல் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்)

3. நாட்கள் நெருங்க நெருங்க மனதில் பயம் வரும். அது இயல்புதான். ஆனால் நம்பிக்கையோடு இருகக் வேண்டும். மருத்துவரை முழுவதுமாக நம்ப வேண்டும். துணைக்கு ஒருவர் எப்போதும் கூட இருப்பது நல்லது. குழந்தையின் அசைவுகளை கவனிக்க வேண்டும். நீண்ட நேரம் அசைவுகள் இல்லாமலிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் நலம்.

4. தொப்புள் கொடியை சேகரிக்க திட்டமிட்டிருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும். (life cell)

5. ஒரு பையை தயாராக வைத்திருத்தல் நலம். சுத்தமான துண்டு, குழந்தை நாப்கின்கள் ஒரு பேக், ஒரு சோப், காட்டன் ரோல், நர்ஸிங் நைட்டி. நர்சிங் உள்ளாடைகள், உங்களுக்குத் தனியாக துண்டு, டெட்டால் ஒரு பாட்டில், பிளாஸ்க்/தம்ளர். மொபைல் சார்ஜர், டார்ச் லைட்/மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, பாத்ரூம் செருப்பு. படிக்க ஏதாவதொரு புத்தகம்/parenting book.

6. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் பிரசவத்திற்குச் செல்வதாயிருந்தால் எல்லா prescriptions, ஸ்கேன் ரெக்கார்ட் களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன மருந்துகள் உட்கொண்டது, தற்போது என்ன உட்கொள்கிறீர்கள், செய்த சோதனைகள் என்று எலலவற்றையும் ஒரு பைலில் வைத்துக் கொள்ளுங்கள். ஹார்மோன் பிரச்சினைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்!

7. சில மருத்துவமனைகளில், முன்னேற்பாடாக பதிவு செய்வது வழக்கமாக இருக்கலாம், ஏசி அறைகள் தேவைப்படும் பட்சத்தில்! (சென்னை இசபெல் மருத்துவமனையில் செய்ய வேண்டியிருந்தது)மேலும், மருத்துவக் காப்பீடுகள் இருந்தால், செல்லும் மருத்துவமனை அதில் வருகிறதாவென பார்த்துக்கொள்ளுதல் நலம். அப்படி இல்லாத நேரத்தில், அதற்கான ஏற்பாடுகளை அவர்களது கஸ்டமர் கேரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வது நல்லது.

Happy Motherhood!

Wednesday, May 6, 2009

கோடைமுகாம் @ வீடு!!

மேமாதமும் வந்துவிட்டது. கொளுத்தும் கோடை. குட்டீசை சம்மர் கேம்ப் அனுப்புவது சாத்தியப்படாத (கொண்டு போய் விடுவது, கூட்டி வருவது, தேவையான பொருட்களை வாங்கி தருவது அல்லது விதவிதமான பெயர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கொடுத்துச் சேர்ப்பது முதலான பல காரணங்கள்) பட்சத்தில் துறுதுறு கைகளை வீட்டிலேயே பிசியாக வைக்க ஒரு சில விளையாட்டுகள்/ஆக்டிவிட்டீஸ்:

1. சதுரங்கம்/சுடோகு கற்றுக் கொடுத்து பழக்கலாம்.
2. அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் - பிடித்த விளையாட்டு, பிடித்த கலர்கள், பறவைகள்,
தலைவர்கள், புத்தகங்கள் போன்றவை.
3. படங்கள் வரைதல்
4. போர்டு விளையாட்டுகள்(snakes & ladders மாதிரி)
5. தோட்டம் அமைத்தல் ( ஒரு கோடை விடுமுறையில் kitchen garden அமைத்தோம், வெண்டைக்காய், ஏதோ ஒரு வகைக் கீரை, தக்காளி பயிரிட்டோம்.)
6. ஆங்கில எழுத்துகளை அட்டைகளில் வெட்டி ஒட்டி சீட்டுக் கட்டு தயாரித்து, வார்த்தைகள் அமைத்து விளையாடுதல்.
7. Handicrafts/கொலாஜ் செய்தல்
8. பட்டம் விடுதல்
9. புதிதாக ஏதேனும் விளையாட்டை கண்டுபிடிக்கச் சொல்லலாம்.
10. செய்திதாள் படித்தபின்,முக்கிய செய்தியாக அவர்களுக்குத் தோன்றுவதை வெட்டி ஒரு நோட்டுப்புத்தகத்தில் ஒட்டச்சொல்லலாம். கூடவே அவர்களுக்குத் தோன்றும் குறிப்புகளையும் எழுதச் சொல்லலாம்.

விடுமுறை இனிதாக அமையட்டும்! வாழ்த்துகள்!

அன்னையர் தின வாழ்த்துகளுடன்...

சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்த நாட்கள் அவை. வாரயிறுதியில் ஆம்பூருக்கு பயணம். ஏலகிரி எக்ஸ்பிரஸ் - பெயர்தான் எக்ஸ்பிரஸே தவிர பாஸ்ஞ்சர் போலத்தான். ஆனால் அது ஒரு மினி ரங்கநாதன் தெரு மாதிரிதான். வளையல் வியாபாரத்திலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை எல்லாமே தங்கள் இடம் தேடி வரும். காட்பாடி தாண்டினால் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ஊர்க்காரர்கள் மட்டுமே!இரண்டு வரிசைகள் தாண்டி ஓரிரு தலைகள் தென்பட்டன. வீட்டுக்கு செல்ல இன்னும் அரைமணிநேரம்தான் என்றெண்ணியபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலின் சீரான வேகம். தாண்டிச் செல்லும் காற்று. வீட்டில் பெரிம்மா எனக்காக சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலும், சிக்கன் ஃபிரையும் செய்துவைத்து விட்டு காத்திருப்பதாக மெஸேஜ். ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஏதாவதொன்று புதிதாக வீட்டில் இருக்கும்..எனக்கு அறிமுகப்படுத்த புது புத்தகம், பகிர்ந்துக் கொள்ள சுவையான நிகழ்வுகள் என்று என்னை அசத்துவதில் பெரிம்மாவுக்கு நிகர் பெரிம்மாதான்!! இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.

“அக்கா, நல்லாருக்கீங்களா?” - அவள்தான்!

பரிச்சயப்பட்ட முகமாக, ஆனால் யாரென்றுத் தெரியவில்லை.

“நல்லாருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” - பேச்சுவாக்கில் தெரிந்துவிடும் என்றெண்ணியபடியே!

“நல்லாருக்கேன் அக்கா, மேடம், தம்பில்லாம் எப்படி இருக்காங்க?”

”நல்லாருக்காங்க, மெட்ராஸ்லேர்ந்தா வர்றீங்க” - யாருன்னு கேட்டுடலாமா இல்லை இன்னும் பேசினால் தெரிந்துவிடுமா என்ற தயக்கத்தில்!

”ஆமாக்கா, நான் நர்ஸிங் முடிச்சுட்டு மெட்ராஸ்லதான் வேலை செய்றேன்” - அந்த பெண்.

ஓ..கண்டுபிடித்துவிட்டேன்..பெயர் தெரியாவிட்டாலும்!

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இரு வரிசைகளில் ஒழுங்கு கலையாமல் உயரகிரமமாக சீருடை அணிந்துச் செல்லும் சிறுமிகள்! முன்னும் பின்னும் அவர்களைக் கவனிக்க இரு பெரியவர்கள்! எங்கள் ஊரில் இருந்த ஹோம் அது. பெற்றோர் இல்லாமல் உறவினர் உதவியுடனோ அல்லது பெற்றோரில் ஒருவர் உதவியுடனோ ஹோமில் சேர்க்கப் பட்டவர்கள்! சுருக்கமாகச் சொன்னால் வீட்டிலேயே வைத்து பராமரிக்க இயலாமல் ஹோமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். எங்கள் ஊரில் மூன்று பெரிய பள்ளிகள். மேனேஜ்மெண்ட் பள்ளிகள். அதில் கிறிஸ்துவ பள்ளியைச் சார்ந்த ஹோம் அது!

நான் பள்ளிக்கு செல்லும் நேரமும் அவர்கள் செல்லும் நேரமும் இண்டர்செக்ட் ஆகும். பார்த்துக் கொண்டே கடந்துச் செல்வேன். ஒரு நாள் பெரிம்மாவிடம் கேட்டேன்,

“ஏன் அவங்கள்லாம் லைனா போறாங்க, வீட்டிலேர்ந்தே அப்படி வருவாங்களா?”

பெரிம்மா சொன்னார்கள், "ஆமா ஆச்சி, அவங்கள்லாம் ஒண்ணா ஒரே வீட்டிலே இருப்பாங்க, ஒண்ணா கிளம்புவாங்க"!

அதன்பின் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. (இப்போது பெரிம்மாவுக்கு இந்நிகழ்வு நினைவில் இல்லாமலிருக்கலாம்.) ஆனால் எனக்குள் சந்தேகம் மட்டும்..எப்படி அத்தனை பேரும் ஒரே வீட்டில் இருப்பார்கள்...எப்படி குளிப்பார்கள்..சரியான நேரத்திற்கு பள்ளி செல்கிறார்கள்!



எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை தினத்தில் நாங்கள் அங்கே சென்று இறங்கினோம், ஆயா, நான், குட்டி,பெரிம்மா மற்றும் சாந்தா அத்தை. ஐந்து பெரிய தனித்தனி வீடுகள். ஒரு சமையலறை. பல பெரிய அக்காக்கள் காய் வெட்டிக் கொண்டிருந்தனர். இரு சமையற்கார அத்தைகள். ஒரு வார்டன். எல்லா சிறுமிகளும் அவரவர் நண்பர் குழுக்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சேப்பல். மரங்களுடனும் ஒரு குட்டி மைதானத்துடனும் அமைந்த ஒரு சின்னஞ்சிறு உலகம். நான் இதுவரை பார்த்திராத உலகம். பதின்மூன்று வருடங்களாக அதே ஊரிலிருந்தும் நான் அறிந்திராத உலகம். ஆதரவற்றவர்கள் என்று கதைகளில் படித்திருந்தாலும் கற்பனை செய்திருந்தாலும்!! ஒரே அறையில் பத்துச் சிறுமிகள்,ஆளுக்கொரு ட்ரங்குப் பெட்டி, ஒருவருக்கொருவர் ஆதரவாய்!

பெரியவர்கள் எல்லோரும் அலுவலக அறைக்களுக்குள் சென்றுவிட நானும் தம்பியும் மட்டும் மைதானத்தில். கூச்சலும் கொண்டாட்டமுமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக எங்களை சூழ்ந்துக் கொள்ளத்துவங்கினர். எங்களுக்கிடையே இருந்த பனிச்சுவர் உடைக்கப் பட்டது. ஒன்றாக விளையாட்டில் ஐக்கியமானோம்! பின் நான் பனிரெண்டாம் வகுப்பு செல்லும் வரையில் அவ்வவ்போது விடுமுறைகளில் ஒரு நாள் ஹோமுக்குச் செல்வது, அவர்களுடன் பொழுதைக் செலவிடுவது என்பது பழக்கமானது. என் பள்ளித் தோழிகளையும் அந்த ஹோம் விடுமுறைதினத்தில் சந்தித்திருக்கிறது. அந்த ஹோம் எனக்கு பல தோழிகளை கொடுத்தது. இனிமையான தருணங்களை தந்தது. அந்தத் தோழிகளில் ஒருவரைத்தான் நான் ரயிலில் சந்தித்தது. அவர்பெயர் தபித்தா, பத்தாம்வகுப்பிற்குப் பின் நர்சிங் டிப்ளமா முடித்து சென்னையில் வேலை செய்கிறார். ஆம்பூரை அடுத்த ஒரு கிராமம் அவரின் அத்தை வீடு. நெடுநாள் கழித்து தோழியைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கு!

பிறந்தநாளுக்கு பப்புவை அருகிலிருந்த ஹோமுக்கு அழைத்துச் சென்று, அரைநாள் அங்கு செலவழித்ததிலிருந்து, பப்பு அவ்வப்போது “ஹோமுக்கு போகலாம்,ஆச்சி, ஹோமுக்கு போகலாமா” என்கிறாள். யோசித்துப் பார்க்கிறேன், ஒருவேளை பெரிம்மா எங்களை அழைத்துப் போகாமலிருந்தாலோ அல்லது நாங்கள் பார்க்காமல் அவர்களாகவோ உதவியைச் செய்திருந்தாலோ, எனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. பரிதாபப்படுவதோடோ அல்லது இயன்றபோது ஒரு தொகையைக் கொடுத்துவிட்டோ குற்றவுணர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால், நாமும் அவர்களோடு நேரம் செலவழிக்கவேண்டுமென்ற எண்ணத்தைத் தானாக என்னுள் எழ வைத்தது பெரிம்மாதான். எததனையோ விஷயங்களில், நான் பெரிம்மாவைப் போல் இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் பப்புவும், என் பெரிம்மாவைப் போல இருக்க வேண்டுமென நினைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று! ( This is one of those values which I would like to pass it on to pappu! )


வாழ்க்கையின் values, ஒரே நாளில் நன்னெறிக்கதைகள் மூலமாக கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!

Happy Mother's day, Perimma & Amma and this post is for you!!

Monday, May 4, 2009

அன்புயிர் சன்னோ...

*நன்றி முனைவர்.ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு. அவரின் பதிவிலிருந்து காப்பி செய்துள்ளேன், இன்னும் ஷன்னோக்கள் உருவாக்கப்படக்கூடாதென்ற எண்ணத்தில்!அவரது பதிவிற்கான சுட்டி!


அன்புயிர் சன்னோ, அன்பும் இனிமையும் நிறைந்த சுட்டிப்பெண்ணே இன்று காலை செய்தித்தாளில் உனது மரணம் பற்றி படிதேன்.மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாய், இது போல் இன்னும் பலருக்கு நிகழலாம் உன்னால் என்ன செய்ய முடியும் இது வாடிக்கையாகிவிட்டது. நீ இறப்பதற்கு முன் அந்த கடைசி விநாடிகளில் தேவதைக் கதைகளில் வருகின்ற குழந்தைகளை நேசிக்கும் அந்த தேவதையை நீ சந்தித்திருப்பாய் என்று எண்ணுகிறேன். நீ மிக பணிவாக மண்டியிட்டு கிடந்தபோது உன் முகத்தில் அரும்பிய வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தவள், தாங்கிக்கொள்ளும் வலிமையை கொடுத்தவள், வலியை நிறுத்தும் அந்த இரண்டு சொட்டு மந்திர நீரைக்கொடுத்தவள் அந்தக்காவல் தேவதையே. அந்த தேவதை வந்தாளா? நீ மருத்துவ மனையில் இருந்தபோது இரவு முழுவதும் உன்னுடன் தங்கினாள் இல்லையா?

இன்று காலை உன்னைப் பற்றி படித்ததிலிருந்து எங்கு நோக்கினும் உன் கண்களைக் காண்கிறேன் என் இரண்டு மகன்களைப் பார்க்கும்போது கூட. ஒரு வேளை நான் உன் கண்களில் அச்சத்தை மட்டும் காண்கிறேனோ எனத் தோன்றுகிறது. ஆனால் சுட்டெரிக்கும் வெய்யிலில் இரண்டு மணி நேரம் நீ முட்டி போட்டு குனிந்திருந்த போது உன் முதுகின் மீது சுமத்தப்பட்ட அந்த ஏழு செஙற்களை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் , மக்களோடு பேசும்போதும் செய்தித்தாள்களைப் படிக்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அவற்றை நான் காண்கிறேன்.

தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதை விட கட்டுப்பாடாக இருக்கக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிற பெற்றோர்கள்தான் அந்த முதல் செங்கல். அநீதியை எதிர்த்துப் போராடத் தெரியாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உன் வகுப்புத் தோழர்கள்தான் அந்த இரண்டாவது செங்கல். குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதை விட அதிகமாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணராத உன் ஆசிரியர்கள்தான் மூன்றாவது செங்கல். நெடுங்கணக்கை மனப்பாடம் செய்ய இயலவில்லை என்பதற்காக தலை நகரப் பள்ளி ஒன்றில் ஒரு சிறு குழந்தை சித்திர வதைக்கு ஆளாகி இறந்து போனதைக் கண்டுகொள்ளாத ஆனால் கட்சியின் நலனுக்காக அற்ப விசையங்களுக்கெல்லாம் வேலை நிருத்தம் செய்கிற அரசியல்வாதிகள்தான் அந்த நான்காவது செங்கல்.

ஒரு ஆசிரியர் கொடுக்கின்ற உடல் ரீதியான தண்டனையைக் குற்றமாகக் கருதாத - ஏனென்றால் அவர்களே வன் முறையில் நம்பிக்கை உடயவர்கள்- காவலர்களே ஐந்தாவது செங்கல். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஏழைகளை நாட்டின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கும் (ஏழைக் குழந்தைகளின் பள்ளியை அல்ல) மேட்டுக் குடியினரே ஆறாவது செங்கல். அந்த கடைசி செங்கல் எதுவென்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு வெறுப்பாக இருக்கிறது சன்னோ. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுத்து, அதிலிருந்து வெளி நடப்பு செய்யும் துணிவைத் தராத உன் காவல் தேவதைதான் அந்த ஏழாவது செங்கல்.


இப்படி ஒரு கேடு உனக்கு நேரும் என நீ அஞ்சியிருக்க வேண்டும். உன் பணிவே உன் உயிருக்கு உலை வைக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டாய். என்னருமை சன்னோ உன் இறப்பால் நான் வருந்துகிறேன். பெரியவர்களின் முட்டாள் தனத்தால் நீ சாக நேர்ந்ததை எண்ணி துக்கப்படுகிறேன். உன் மரணத்தை ஒன்றுமில்லை என்று ஆகிவிடாது. நம் இந்தியக் கல்வி முறையில் ஏதோ ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. அது உறுவாவதற்குத் துணை புரிந்த அந்த ஏழு செங்கற்களில் ஏதோ அடிப்படையில் ஒரு கேடு இருக்கிறது என்பதை உன் மரணம் எஙளுக்கு உணர்த்தும்.

ஒரு வேளை உன் நினைவாக மக்கள் அவ்வேழு செங்கற்களைத் தூள் தூளாக நொறுக்கத் தொடங்கலாம். ஏனெனில் அந்த ஏழு கற்கள் சென்ற வெள்ளிக்கிழமை உன் முதுகில் இரூந்தது மட்டுமல்ல கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் கொண்ட, அழுவதற்கு அச்சப்படும் உன்னைப் போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் முதுகின் மீது அதே கற்கள் மீண்டும் மீண்டும் ஏறுகின்றன. ஒரு வேளை நீ பட்ட துன்பத்தின் காரணமாக ஏதாவது புதிதாக உருவாகலாம்.அக்கரையுள்ள பெற்றோர்கள், அக்கரையுள்ள ஆசிரியர்கள், அகரையுள்ள அரசியல்வாதிகள், அக்கரையுள்ள காவலர்கள், ஏழைகளுக்காக கரிசனம் கொள்ளும் செல்வந்தர்கள் ஆகியோர்களால் ஒரு புதிய பள்ளி முறை உருவாகலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்பதற்காகத் தங்களையே குறைபட்டுக்கொள்ள மாட்டார்கள். மாறாகத் தஙளால் என்ன செய்ய முடிகிறதோ அதிலே பெருமை காண்பார்கள். தங்களுக்காக தங்களின் வகுப்புத் தோழர்களுக்காக அன்புடன் தங்கள் கைகளை உயரே தூக்கிப் பிடிப்பார்கள். என் அன்பு சன்னோ உனை நான் தவறவிட்டுவிட்டேன்.(கட்டுரையாளர் செபஸ்டியன் டேராடூனில் உள்ள லத்திகா ராய் நிறுவனத்தின் குழந்தை மருத்துவர்) நன்றி: இந்து நளிதழ் (26.04.09),மொழி பெயர்ப்பில் உதவிய அ.முதுகுன்றன், எழுதத்தூண்டிய அ.மங்கை. கற்றல் அது குழந்தைகளுக்கு இன்னும் தாங்கொணாத சுமையாகவே உள்ளது என்பதையே சன்னோ என்னும் சிருமியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. மாற்று கல்வி குறித்து சிந்திப்போம்.

Friday, May 1, 2009

அம்மாக்கள் தினம் - அறிவிப்பு!


(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,

மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!

ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!

அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.

நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! :-)

Happy Mother's day!

Friday, April 24, 2009

நமது வலைப்பூ - சில யோசனைகள்!

நமது குழுப்பதிவை மேலும் சுவாரசியமாக்க ஒருசில எளிய யோசனைகள்!

1. இடுகைகளில் லேபிள்கள் relevant-ஆக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே இருக்கும் குறிச்சொற்களையே திரும்ப பயன்படுத்த முயல்வோம். எ.கா - வயது வரம்பு, புத்தகங்கள்,பாடல்கள், கதைகள் என்று இயன்ற வரை பொதுப்படையானதாக, தேடுவதற்கு எளிதானவையாக இருக்கட்டும்.

2. மேலும், இடுகைகளின் குறிச்சொற்களோடு, இடுபவரின் பெயரையும் ஒரு குறிசொல்லாக பயன்படுத்துவோம். (ஆகாயநதி மற்றும் அமித்து அம்மா-வின் இடுகைகள் அவ்வாறே இருக்கக் காணலாம்.) இது சடுதியில் இனம்காண உதவியாயிருக்கும்.

3. நமது இடுகைகள் அம்மாக்கள் பற்றியதும், குழந்தைகள் பற்றியதாய் மட்டும் இருக்கட்டும்.
அது அனுபவங்களாகவோ, விவாதமாகவோ இருக்கலாம். பிற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியாயிருப்பின், சுட்டியை இணைத்து வைப்போம்.

4. தொடர்ந்து எழுதுவதை மனதிற் கொள்வோம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு இடுகையாவது இடவேண்டுமென மனதிற் கொள்வோம். நமக்கு நாமே உதவி செய்துக் கொள்கிறோம், இந்த வலைப்பதிவின் மூலம்...ஒருவரிடமிருந்து மற்றொருவர் என! நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இருக்கிறோம், நாமனைவரும் நண்பர்களே என்று உணர்வோம். தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்போம்!

5. வாழ்த்துகள், அறிவிப்பு பற்றிய இடுகைகளாக இருப்பின், ஏற்கெனவே அதைப் பற்றிய இடுகை இருக்கிறதாவென அறிந்தபின் இடலாம். இதன்மூலம், பல இடுகைகள் ஒரே அறிவிப்பைக் குறித்து இடுவதைத் தவிர்க்கலாம்.

6. நமது குழுப்பதிவின் இடுகைகளைப் பற்றிய முன்னோட்டங்கள்/முன்னுரை அல்லது சுட்டிகளை நமது சொந்த வலைப்பூவிலும் இடலாம். அதனால் இன்னும் பலரை சென்றடைய வாய்ப்புகள் பெருகும்.

மேற்சொன்னவற்றை முன்பாகவே வரையறுத்திருக்கலாமெனினும், குழப்பங்களை தவிர்க்க இது தேவையானதாகப் படுகிறது. இன்னும் சொல்வதற்கு யோசனைகள் இருப்பின் தெரிவிக்கவும். குழுப்பதிவை மேன்மையானதாக்குவோம்! ஒத்துழைப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! ஹூர்ரே..!!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger