Tuesday, July 28, 2009

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே...!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) - அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து - மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

9 comments:

பழமைபேசி said...

தலைப்பு சுத்தமாப் புரியலைங்க...

அன்புடன் அருணா said...

இங்கேயே தொடரட்டும் பப்பு!சிறந்த குழந்தைகளின் எல்லாவித வளர்ச்சிக்கும் உதவும் பள்ளியாகவே தெரிகிறது!

Soma said...

Hi, we are also from Madipakkam Area & we are looking for school for our kid in velacheri, madipakkam, nanganallur, Mount etc. Can you tell me which school have you chosen??? Iam not able to get that from any of your posts? Thx.

வல்லிசிம்ஹன் said...

மாண்டிசொரி முறைதான் குழந்தைகளுக்கு ஏற்றது முல்லை.
பப்புவிடம் அவள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று அவ்வப்போது கேட்டுக் கொள்ளவும்.
நன்றாக இருப்பாள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!


இந்த ஒரு விஷயத்துக்காகவே இது போன்ற மாண்டிசோரி முறைப் பள்ளிகளை தேர்ந்தெடுக்கலாம் போல

Deepa said...

நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க முல்லை. நானும் நேஹாவுக்கு மாண்டிஸோரி வகைப் பள்ளயையே தேர்வு செய்யலாமென்று நினைக்கிறேன்.

//ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them//

Same blood! :-)

அமுதா said...

நல்ல பகிர்வு

மங்களூர் சிவா said...

//ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them//

ஹி ஹி நான் படிச்ச கவர்மெண்ட் ஸ்கூல்ல அந்த பிரச்சனையே இருந்ததில்லை. நம்மல்லாம் எப்படா ஷூ போடுவோம்னு தான் கவலையே காலேஜ் படிக்கிறப்பதான் வாங்கினேன்.

ஆகாய நதி said...

பப்புவோட ஆக்டிவிடிஸ் பார்த்த அனுபவத்தில் நான் என் மனதில் பப்பு படிக்கும் பள்ளியைதான் தேர்வு செய்து வைத்திருக்கிறேன் பொழிலனுக்காக.... எனக்கு நிறைய(???) கால அவகாசம் இருப்பதால் இன்னும் வீட்டிலிருந்து அந்த பள்ளி எவ்வளவு தூரம், போக்குவரத்து வசதி எல்லாவற்றையும் பற்றி பிரிதொரு காலம் உங்களிடம் பேசலாம் என்று எண்ணம்... :))

கணவரிடம் கூட இன்னும் இது பற்றி பேசவில்லை... இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளதே... அப்போது வந்து கொஸ்டின் நிறையா கேட்டு உங்களை டார்ச்சர் பண்ணுவேன்... ஹி ஹி ஹி :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger