Sunday, July 5, 2009

வேண்டாமே சிசேரியன்!!

சிசேரியன் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு நார்மலாகப் பிறக்கும் குழந்தைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம்.
பிற்காலத்தில் அக்குழந்தைகளை டையாபடிஸ், ஆஸ்த்துமா, லுக்கேமியா ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாம். ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு இது.
சிசேரியனில குழந்தை திடிரென்று பிறந்து விடுவதால் வெளி உலகம் உடனே பழக முடியாமல் வரும் ஸ்ட்ரெஸால் தான் white blood cells-ல் உள்ள DNA மாற்றத்தை சந்திக்கிறது. அதனால் நோய் எதிப்பு சக்திக் குறைகிறது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எதிலேயும் பின்விளைவுகள் உண்டு.

இயற்கையாக பிறக்கும் குழந்தைகள் மெதுவாக ஒரு அழுத்தத்தை உணர்ந்து பின் வெளி உலகை அனுபவிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் என்பது மிகவும் குறைவு. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம். நம் மருத்துவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தில் இல்லாமல் சமுக சிந்தனையுடன் பணியாற்றி, சிசேரியனுக்கு வலியுறுத்தும் பெண்களையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

10 comments:

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி அமுதா கிருஷ்ணா!

Unknown said...

அருமை...!! இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு...!!!


நல்லது...!! என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...!!!

Deepa said...

அமுதா!

நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். நன்மை கருதித் தான் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் பொதுவாக எல்லாப் பெண்களுமே சுகப்பிரசவத்தைத் தான் விரும்புவார்கள் இல்லையா?
பெரும்பாலான பெண்களுக்குப் பலவித காரணங்களால் சிசேரியன் ஆகிறது.


ஆனால் அவர்கள் குழந்தை பெற்று நலமுடன் வளர்த்தும் வருகிறார்கள். அவர்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே. ஆனால் குழந்தைகளுக்கும் என்றால் மன உளைச்சல் ஏற்படாதா? ஏதோ எனக்குத் தோன்றியது!
Btw, எனக்கு நார்மல் டெலிவரி தான் ஆயிற்று.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தீபா,,இப்பொழுதெல்லாம் நிறையப் பெண்கள் சிசேரியன் செய்ய சொல்லி அவசரப் படுத்துகிறார்களாம்.
நல்ல நேரம், அது இது என்று சொல்லி...பல மருத்துவர்களும் பணத்திற்காக சிசேரியன் செய்கிறார்கள்..அவர்களுக்குதான் சொல்ல விரும்பினேன். எனக்கு முதல் குழந்தை நார்மல், இரண்டாவது சிசேரியன் !!!!

அமுதா கிருஷ்ணா said...

ப்ளீஸ் இந்த ப்ளாக்கை படிக்கவும்...
www.thamilworld.com

அமுதா said...

அவசியம் ஏற்பட்டால் ஒழிய சிசேரியன் செய்யக்கூடாது என்பதில் டாக்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அம்மாக்களும் சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது. இயற்கை வழி இருக்க அவசியமின்றி செயற்கை வழி சென்றால் பிரச்னையே!!! பகிர்வுக்கு நன்றி

Vidhya Chandrasekaran said...

பகிர்வுக்கு நன்றி அமுதா. தீபா சொல்வதைப் போல் வேறு வழியே இல்லையென்றால் என்ன செய்வது. எனக்கு கொடுத்த பிரசவ தேதியிலிருந்து இரு வாரங்களுக்கு முன்பே ஆபரேஷன் செய்துவிட்டார்கள். குழந்தை உள்ளே தண்ணி குடிக்க ஆரம்பித்ததால். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருவரின் உயிரை காப்பாற்ற ஆபரேஷன் தவிர வேறு வழியில்லயே.

Deepa said...

//அவசியம் ஏற்பட்டால் ஒழிய சிசேரியன் செய்யக்கூடாது என்பதில் டாக்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அம்மாக்களும் சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது.//

இக்கருத்தைக் கண்டிப்பாக வரவேற்கிறேன். நானும் வலி அதிகமான போது எனக்குச் சிசேரியன் செய்து விடுங்கள் என்று கத்தினேன்! ஆனால் அதற்குள் என் மகள் பிறந்து விட்டாள்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

vijiraja said...

//அவசியம் ஏற்பட்டால் ஒழிய சிசேரியன் செய்யக்கூடாது என்பதில் டாக்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அம்மாக்களும் சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது.//

நானும் இதை ஆமோதிக்கிறேன். பிரசவ வலி குறித்து பயம் இருந்தால் முன்னமே டாக்டரிடம் கலந்து ஆலோசித்து epidural எடுத்துகொள்ளலாம். இது பிரசவ வலி தெரியாமல் இருக்க உதவும்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger