Saturday, July 4, 2009

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி...

முல்லையின் பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு..

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நாம் யோசிக்க வேண்டிய
விடயங்கள் நிறைய்ய.. சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. பள்ளி நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறதா? மிக அருகில் இல்லாவிட்டாலும்
கூட நியாயமான தூரம் அதிக பட்சமாக 5 கிமீ வரை இருந்தால்
பரவாயில்லை.

2. 100% ரிசல்ட் தரும் பள்ளி என்பதாலோ, பெயர் பெற்ற பள்ளி
என்பதாலோ அந்த பள்ளியில் பிள்ளையை சேர்க்க நினைக்க
வேண்டாம்.

3. அவர்கள் பெயரை தக்க வைக்கவும், 100 சதவிகித ரிசல்ட்
தரும் மாணாக்கர்களுக்காகவும் தான் பள்ளி நடத்துகிறார்கள்.

4. அனைத்து மாணவரும் 100% சதவிகிதம் எடுப்பது கஷ்டம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். சில பிள்ளைகளால்
அதிக மதிப்பெண் எடுக்க இயலாது(thanks to the mechale system :( )

5. படிப்பு படிப்பு என்று பாடப்புத்தகத்தை மட்டுமே கவனிக்கும்
பள்ளியில் பிள்ளையைய் சேர்க்க வேண்டாம். விளையாட்டு,
இசை, யோகா,போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரும்
பள்ளியா என்று பார்ப்பது அவசியம்.

6. ஆசிரியைகள் எப்படி? கண்டிப்பாக இருக்கிறார்களா?
கனிவாக நடத்துகிறார்களா என்பதை கவனித்து, விசாரிக்க
வேண்டும்.

7.வகுப்பறைகள் காற்றோட்டமிக்கதாக இருக்கிறதா?
வகுப்பில் எத்தனை மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்பதையும்
பார்க்க வேண்டும்.

8. பொதுவாக நாம் பார்க்க தயங்கும் ஒருஇடம் அது
பள்ளியின் கழிப்பறை. கழிப்பறை வசதி சரியாக இருக்கிறதா?
என பார்ப்பது மிக மிக அவசியம்.

9. பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என
பார்க்க வேண்டும்.

10. கற்பது என்பதை ஒரு சுமையாக ஆக்காமல்
கூடிய மட்டும் இனிமையாக ஆக்கும் பள்ளியா
என்பது பார்க்கப் படவேண்டிய விடயம்.

என் பிள்ளைகள் 7 வருடங்கள் கொழும்புவில்
பிரிட்டீஷ் கல்வி முறையில் படித்தவர்கள்.
அங்கே ஹோம் வொர்க் கிடையாது, எல்லாம்
ப்ராஜக்ட் சிஸ்டம். படிப்பு ஸ்ட்ரெஸ் தரக்கூடியதாக
இல்லாமல் பிராக்டிகலாக கற்றவர்கள்.

ஆஷிஷாவது 3 வருடங்கள் இந்திய பாடத்திட்டத்தில்
படித்திருந்தான். அம்ருதாவுக்கோ ஆரம்பமே அங்குதான்.
ஆரம்பக்கல்வி மாண்டிசோரி முறை + ப்ரீ ஸ்கூல் முறைக்
கல்வியின் கலவையாக இருக்கும்.

இங்கே ஹைதைக்கு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றதும்
உடனடியாக முடிவெடுத்துவிடாமல், நண்பர்கள் சேர்த்திருக்கிறார்கள்
என்பதற்காக அங்கே ஓடாமல் 1மாதம் முழுதும் இருந்து
தினமும் 4 ஸ்கூல் சென்று தேடி மனதுக்கு பிடித்தால்
மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம்.

சில பள்ளிகள் பள்ளி விடும் நேரம் சென்று எப்படி
வேனில் ஏற்றுகிறார்கள்? ஆயாக்கள் பொறுப்பாக
இருக்கிறார்களா? என பார்த்தோம்.

பெயர் பெற்ற சில பள்ளியில் பெற்றோரை மதிக்கவேயில்லை.
உட்கார வைத்துக்கூட பேசாமல், நிற்க வைத்தே பேசி
அனுப்பிய பள்ளிகளை தவிர்த்தோம்.

டொனேஷன்கொடுக்க நிர்பந்தித்த பள்ளியை
முடிந்த வரை தவிர்த்தோம்.

ஆஷிஷும் அம்ருதாவும் ஒரே பள்ளிக்குச் செல்ல
வேண்டும். அப்போதுதான் விடுமுறை பரிட்சை
போன்றவை ஒரே நேரத்தில் இருக்கும், தயார்
செய்வதும் எளிது என்பதிலும் கண்டிப்பாக இருந்தோம்.

இப்போது படிக்கும் பள்ளி என் எதிர் பார்ப்புகளுக்குத்
தகுந்த பள்ளி. பள்ளியில் யோகா, தபலா, நடனம்,
பாட்டு ஆகியவை டைம்டேபிளில் கட்டாயம் உண்டு.

ஃப்ரெண்ட்லியான ப்ரின்சிபல், இன்னொரு தாயாய்
பார்த்துக்கொள்ளும் ஆசிரியைகள், பிரச்சனை ஏதும்
வந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

நீச்சல் கட்டாய பாடம். இங்கே மற்ற பள்ளிகளில்
சனிக்கிழமை கூட பள்ளி உண்டு. பாடம் நடக்கும்.
ஆனால் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ
சனிக்கிழமை extra curricular activities.
9-12 மணி வரை. ஒவ்வொரு குழந்தையும்
2 பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பியானோ,நீச்சல், கிரிக்கட், டென்னீஸ்,
நடனம், கராத்தே, சமையற்கலை, ஓவியம்,
கைவண்ணம் என கொஞ்சம் பெரிய லிஸ்ட்.


வகுப்பில் அதிகம் போனால் 28 மாணவர்கள்தான்.

C.B.S.C வழிக்கல்வி. ஆனால் காலாண்டு, அரையாண்டு,
முழுப்பரிட்சை கிடையாது.

CONTINUOUS COMPREHENSIVE ASSESSMENT (C.C.A)
எனும் திட்டப்படி மாதாந்திர தேர்வுகள்
நடைபெறும். 15,40,40 மார்க்குக்கு தேர்வுகள்.
5 மார்க் practical/viva/oral projects
ஒவ்வொரு பாடத்துக்கும் இப்படி தேர்வு நடைபெறும்.
GRADING SYSTEM தான்.

வருட இறுதியில் ஒவர் ஆல் அசெச்மெண்டில்

Punctuality(submission of completed assignments on time,)
communication skills (participation in class discussions),
listening skills(concentration and attention span),
thinking skills (out of the box thinking and reference work),
social skills (Discipline)
இவைகளுக்கு தலா 20 மார்க்குகள் கிடைக்கும்.

இவ்வளவு +கள் சொல்கிறேன். அதனால் Fees
அதிகமோ என நினைக்க வேண்டாம். எட்டாவது
படிக்கும் என் மகனுக்கு வருடத்திற்கு 17,000. இதில்
பாடப்புத்தகங்கள்,நோட்டுக்கள்,லேபிள், ப்ரவ்ன் ஷீட்,
டயரி,BADGE, BELT சேர்த்துதான் Fees.
(கணிணி பயன்பாடு, நீச்சல், நியூஸ் பேப்பர் ஆகியவற்றிற்கு
தனி கட்டணமில்லை) ஆந்திர பிரதேச அரசால்
C.B.S.C வழிக்கல்வி பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
தொகையில் 40% குறைவாகத்தான் இந்தப் பள்ளியில்
Fees என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் கட்டண
உயர்வு உண்டு.

பிள்ளைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு போய்
வருகிறார்கள். டென்ஷனில்லாமல் கற்கிறார்கள்.
இப்படி ஒரு பள்ளிக்காகத்தான் தேடி அலைந்தேன்.

சென்ற வருடம் புதுகையில் அப்பாவுக்குத்
தெரிந்தவர்கள் ஹைதைக்கு மாற்றலாகி வந்த
பொழுது எந்த பள்ளியில் சேர்க்கலாம்? என்று
கேட்க என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை
கை காட்டினேன். அவர்களுக்கும் திருப்தி.

21 comments:

Ungalranga said...

நல்ல பதிவு..

நிச்சயம் இப்படிப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தோடு, வாழ்வில் சிறக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை புதுகை! கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகளை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!

Muruganandan M.K. said...

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பதிவு

அன்புடன் அருணா said...

மிக நல்ல பதிவு....மிக நல்ல பள்ளி....

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு தென்றல்.

Eswari said...

Model exam எழுத கல்லுரி நிர்வாகம் தடை செய்ததற்க்காக ஒரு 2 -ம் ஆண்டு பொறியல் கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். எந்த பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் முதலில் கல்வி என்றல் என்ன என்பதை சொல்லிதர வேண்டும்.

pudugaithendral said...

நன்றி ரங்கன்

pudugaithendral said...

கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகளை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்!//

பாரட்டிற்கு நன்றி முல்லை

pudugaithendral said...

மிக்க நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

pudugaithendral said...

நன்றி அருணா

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

முதலில் கல்வி என்றல் என்ன என்பதை சொல்லிதர வேண்டும்.//

உண்மை ஈஸ்வரி

வல்லிசிம்ஹன் said...

நிறையவே ஆராய்ச்சி செய்து ,நல்ல பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் தென்றல்.
குழந்தைகள் அருமையாக வளரட்டும்.

நாகராஜன் said...

அருமையான பயனுள்ள தகவல்கள் புதுகை. நன்றி.

Anonymous said...

Sounds Great school for kutties..all the best..
Hope lot more goodies will come for amma's blog.

If time permits write about teaching method(especially pronunciation,reading etc) at early age..

VS Balajee
F/o Nisha & Ananya

pudugaithendral said...

நன்றி வல்லிம்மா,

பிள்ளைகள் நோகாமல் வருத்தப்படாமல் கல்வி கற்க வேண்டுமென்று நினைத்தோம்

pudugaithendral said...

நன்றி ராசுக்குட்டி

pudugaithendral said...

கண்டிப்பாய் எழுத நினைத்திருக்கிறேன் பாலாஜி. வருகைக்கு நன்றி

ஆகாய நதி said...

Gud post :) Thank u Thendral :)

MSATHIA said...

பள்ளியின் பேரு என்னங்க. அதையும் சொல்லுங்க.

Anonymous said...

எந்த பள்ளி என சொல்லவே இல்லையே

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger