
(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,
மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!
ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!
அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.
நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!
நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! :-)
Happy Mother's day!
நினைவெல்லாம் நிவேதா - 7
13 years ago

mombloggers@gmail.com

6 comments:
நல்ல தலைப்பு! சுவாரஸ்யமான இடுகைகளை எதிர்பார்க்கின்றோம்.
வாய்ப்பிற்கு நன்றி!
நல்ல யோசனை முல்லை.
நல்ல முயற்சி, யோசனை.
வாய்ப்பிற்கும், இந்த வலைப்பூக்களின் வளர்ப்பிற்கும் நன்றிகள் முல்லை
Nice idea Mullai!
First Time reader.. Really Inspired :-)
Post a Comment