Sunday, May 10, 2009

அன்னையர் தினத்துக்காக - திருமுருகன்!

திருமுருகன், Keep walking எனும் ஆங்கில வலைப்பூவில் எழுதிவருகிறார். நமது வலைப்பூ வார்ப்புருவை வடிவமைத்தவர். மிக அழகாக header-ஐ விரும்பியபடி செய்துக்கொடுத்தார். Header-ல் இருக்கும் வரைபடங்களை, அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களின் குழந்தைகளிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை முன்வைத்தவர். ”அன்னையர் தினத்துக்காக ஃபேமஸ் பதிவர்கள்கிட்டே அவஙக அம்மா பத்தியோ அல்லது அன்னையர் தினத்தைப் பற்றியோ எழுதச் சொல்லிக் கேளுங்க” என்று ஐடியா சொன்னவரையே எழுதச் சொன்னதும் வெகு விரைவில் மடலில் அனுப்பியிருந்தார். நன்றி திருமுருகன். தங்கள் அன்னைக்கு வாழ்த்துகள்! அவரது அன்னையர் தினப் பதிவு இதோ:

நான் ஸ்கூல்ல படிக்கும் போது மதர்ஸ் டே-ன்னு ஒரு கதை படிச்சு இருக்கேன். ஒரு குடும்பமே மதர்ஸ் டே-வை முன்னிட்டு ஒரு பிக்னிக் போலாம்னு பிளான் பண்ணி கிளம்புவாங்க. அம்மா சீக்கிரமே எந்திரிச்சு எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் ரெடி பண்ணிட்டு, எல்லா குழந்தைகளையும் எழுப்பி, குளிப்பாட்டி, சீவி சிங்காரிச்சு விட்டுட்டு ரெடி ஆகி பாத்தா, பிக்னிக் வேன்-ல ஒருத்தருக்கு மட்டும் எடம் பத்தாது (ஏன்னு கேக்காதீங்க, அந்த மாதிரி ஆயிடும்). சரி, யாரை வீட்ல விட்டுட்டு போலாம்னு இங்கி-பிங்கி-பாங்கி போட்டு பாப்பாங்க. எல்லாரும் நான் வீட்-ல இருக்க மாட்டேன்னு சொல்லிடுவாங்க. கடைசியா அம்மா நான் வீட்லயே இருந்துக்கிறேம்பாங்க. சரி-ன்னு அவங்களை விட்டுட்டு மிச்ச எல்லாரும் ஜாலியா போய்டுவாங்க.


எங்க (எல்லா) அம்மாவும் இப்படித்தான். ரெண்டு வருஷதுக்கு முன்னாடி ஒரு நாள் தங்கச்சி போன் பண்ணினா. 'அண்ணா, மதர்ஸ் டே வருது, நாம ஒரு (கிரீடிங்) கார்டு வாங்கி நம்ப அம்மாவுக்கு குடுக்கலாமே'-ன்னு சொன்னா. அம்மாவுக்கு கார்டா? சேச்சே, எதுக்குன்னு நினைச்சேன், அப்புறம் "உங்களை அம்மாவா அடைஞ்சுது வரம்-னா, நாங்க எவ்ளோ நாள் தவம் செஞ்சு அந்த கடனை தீக்கபோறோம்னு தெரியலன்னு" ஆரம்பிச்சு தத்தக்க, பித்தக்க கவிதை ஒன்னு எழுதி குடுத்தோம். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கொஞ்சம் கேவலமா இருந்துச்சு.


ஏன்னா இப்ப தனியா வேற நாட்ல இருக்கும் போது தான் அவங்க அருமை தெரியுது. பெங்களூர்-ல வேலை செஞ்சுட்டு இருக்கும் போது பஸ்ல கூட்டமா இருக்குமேன்னு சொல்லி சொல்லி, நெறைய பண்டிகை நாள்களில் அம்மாவை பாக்க நான் போனதே இல்லை. எங்க அம்மாவுக்கு வருசத்துக்கு ஒரு மதர்ஸ் டே விஷ்ஷஸ் எல்லாம் ரொம்பவே too little. அவங்களை நல்லா பாத்துக்குற மாதிரி நாங்க அவங்க கூட இருக்கணும், அந்த வாய்ப்பு கெடைக்கும்-னு நம்பறேன்.


இப்பதான் கொஞ்ச நாளா இந்த வலைப்பூவை (நன்றி: கைப்புள்ள , சந்தனமுல்லை ) பாக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு, நெறைய இளம் அம்மாக்களுக்கு உங்க பதிவுகள் எல்லாம் உபயோகமா இருக்கும்-னு நம்பறேன், அதனால எல்லாரும் நெறைய எழுதுங்க (சொல்லிட்டாருயா கவர்னரு!!!), எல்லாருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.


--திருமுருகன் --

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அன்னையருக்கு வாழ்த்துகள்

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

சென்ஷி said...

அழகான வார்ப்புரு.. குழந்தைகளின் சித்திரப்படைப்பில் மேலும் மிளிர்கிறது.

வலைப்பூவினருக்கும் சகபதிவர்களுக்கும் மற்றும் திருமுருகன் அவர்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க திருமுருகன்.

முல்லை மற்றும் குழுவினர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. குழுப்பதிவின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger