Saturday, May 9, 2009

அன்னையர் தினத்துக்காக - ”நிலாக்காலம்” கோமதி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நிலாக்காலம்” கோமதி தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கோமதி! ”'அன்பென்றாலே அம்மா!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-


பொதுவாவே மாதா, பிதா, குரு, தெய்வம்னு தான் சொல்லுவாங்க
கடவுளையும் விட உசந்த ஸ்தானத்துல இருக்கிறது அம்மா தான். ஒரு தாயை விட சிறந்த உறவு வேற எதுவும் இல்லைனே சொல்லலாம். எல்லாருமே அம்மாவோட சிறப்பை பத்தி நிறைய எழுதிட்டாங்க ஆனால் என்னை பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்த அம்மாவை காட்டிலும் எங்க கூடவே இருந்து என்னை குளிப்பாட்டி, உணவூட்டி, பள்ளிக்கு தயார் செய்து, கதை சொல்லி, சுவாமி சுலோகன் சொல்லி கொடுத்து, பாட்டு பாடி தூங்க வச்சுனு என்னை வளர்த்த எங்க பாட்டியை நான் எங்க அம்மாவுக்கும் சமமா தான் மதிக்கிறேன்.


எங்க பாட்டி மத்த பாட்டிகளை விட ரொம்பவே வித்தியாசமானவங்க தன்னோட என்பது வயசுலயும் சுறுசுறுப்பா இருப்பாங்க தினமும் பேப்பர் படிப்பாங்க (uptodateaa இருப்பாங்க internet பற்றி கூட தெரியும்) தன்னோட வேலைகளை தானே செஞ்சுப்பாங்க. இப்படி பாட்டி பற்றி நிறைய சொல்லலாம். முக்கியமா என்னவருக்கும் எனக்குமான காதல் திருமணத்திற்கு முதன்முதலில் பச்சைக் கொடி காட்டினது என் பாட்டி தான். பாட்டிக்கு நிறைய படிக்கணும்னு ஆசை அந்தக் காலத்துலயே Double Double Promotion வாங்குனேன்னு சொல்லும் அதுவும் எப்படின்னா மூணாம் க்ளாஸ்லேருந்து அஞ்சாம் க்ளாஸ் அப்புறம் அஞ்சாம் க்ளாஸ்லேருந்து ஏழாம் க்ளாஸாம் இது எப்படி சாத்தியம்னு எனக்குத் தெரியலை. நாங்கள்ளாம் சும்மா கதை விடாத பாட்டினு சொல்லி வெறுப்பேத்துவோம். பாட்டிக்கு தமிழ் இலக்கியத்து மேல ஆர்வம் அதிகம் என்னோட ஆறாம் க்ளாஸ்ல ஆரம்பிச்சு நான் காலேஜ் படிக்குற வரைக்கும் உள்ள எல்லா தமிழ் புத்தகஙகளையும் படிச்சுடும். இதுல கொடுமை என்னன்னா படிச்சுட்டு கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சுடும் எனக்கும் பாட்டிக்கிட்ட தமிழ் படிச்சு ஒப்பிக்குறதுனா ரொம்ப பிடிக்கும்.

அடடா தாய்மையைப் பற்றி எழுதச் சொன்னா நான் என் பாட்டியைப் பற்றி ரொம்ப எழுதி அறுக்க ஆரம்பிச்சுட்டேன் போல. பாட்டி பற்றி எழுத ஆரம்பிச்சா எழுதிட்டே இருக்கலாம். சரி அதை விடுங்க நான் எதுக்கு இந்தத் தாய்மை தலைப்புல பாட்டியை பற்றி சொல்ல வந்தேன்னா என்னை பொருத்த வரை தாய்மை என்கிற உணர்வு இருக்குற எல்லாருமே தாய் தான்.

ஓரு பக்கம் நிறைய பெண்கள் குடும்பச் சூழ்நிலையால தான் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியிலும் அனாதை இல்லங்களிலும் கொண்டு போய் விடுறாங்க. இன்னொரு பக்கம் குழந்தை இப்போ வேண்டாம் அப்போ வேண்டாம்னு கருவிலேயே அழிக்குற பெண்களும் இருக்காங்க. அவங்களெல்லாம் தாய்மைங்றது ஒரு அற்புதமான விஷயம்ங்றதை புரிஞ்சுக்கனும். அது ஒரு வரம் அதுக்காக ஏங்கி காத்துக்கிட்டு இருக்கிற பெண்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. அதுனால நம் குழந்தைகளை அனாதைகளாக்கி, கருவிலேயே அழிக்கும் கொடுமையை இனிமேலாவது செய்யாமல் இருப்போம். அதே போல குழந்தை இல்லாதவங்களும் குழந்தை இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு காலத்தை வீணாக்காமல் அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

என் திருமண்த்திற்கு பிறகு எங்க பாட்டி கொள்ளு பேரன், பேத்தியை பார்க்கணும்னு வேண்டாத சாமி இல்லை ஆனால் கடைசி வரை அவங்களால பார்க்க முடியலையெங்கிற வருத்தம் எனக்கு இருந்தாலும் என் பாட்டி இறந்த அதே மாதத்தில் (சில தினங்களிலேயே) தான் நான் கருவுற்றிருக்கிறேன் என்பது தெரிந்ததும் தன்னுயிர் கொடுத்து எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி எனக்கு எப்பவுமே ஒரு தாய் தான்.

தாய்மையைப் போற்றுவோம். அன்னையர் தின வாழ்த்துகள்.

வாய்ப்புக் கொடுத்த முல்லைக்கும் என்னை எழுதத் தூண்டிய கவிதாவிற்கும் எனது நன்றி.

(இந்த அன்னையர் தின நன்னாளில், எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி அம்பிகாவிற்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.)

5 comments:

Anonymous said...

அன்னையர் தின வாழ்த்துகள்.

கவிதா | Kavitha said...

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !!

// என்னை எழுதத் தூண்டிய கவிதாவிற்கும் எனது நன்றி.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ் !! எதுக்கு இது எல்லாம்.. ?!! ம்ம்ம்.. ????

சூப்பரா எழுதி இருக்கீங்க.. !! நல்லா இருக்குங்க..!! வாழ்த்துக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

உலக அன்னையர்கள் அனைவருக்கும் ....

எம்மை பொதி போல் சுமந்து பக்குவமாய் பெற்றெடுத்து
பாசச் சோற்றை ஊட்டி ! பந்தங்களை சுட்டி !
பூமியில் காலூன்றி நடை பழக்கி !
வாழ்க்கை உனன்மையை புரிய வைத்த
என் அன்னைக்கும் ...


... என் மனமார்ந்ந்த " அன்னையர் தின வாழ்த்துக்கள் ... "


" வாழ்க வளமுடன்......"

Veena Devi said...

இந்த அன்னையர் தினத்தில், நம்ம அம்மாவை மட்டும் இல்லாம நம் கணவரின் ( அல்லது மனைவியின் அம்மாவையும் நேசிக்கவும் , புரிந்து கொள்ளவும் , நன்றி செலுத்தவும் இந்த நாளை பயன் படுத்தி கொள்வோம்... ஆனந்து அம்மகளுகும், அவர்களை அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger