Monday, May 11, 2009

powerful கற்றாழை

பெண்களின் பிரசவ காலத்தில் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.அந்த மாற்றங்களில் ஒன்றுதான் constipation.இது எல்லாருக்கும் இருக்கும் என்றில்லை.சிலருக்கு இருக்கலாம்,பலருக்கு இல்லாமலிருக்கலாம்.அவரவரின் உடல்நிலையைப் பொறுத்தே அமையும்.

constipation வந்தால் இறுதியில் அது piles இல் கொண்டு போய் விட்டு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.பிரசவம் வரை இது பற்றி நாம் மருத்துவரின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளலாம்,அதாவது அவர்கள் தரும் மருந்துகளை உட்கொள்ளலாம்.ஆனால் பிரசவத்தின் பின்னர் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் அருமருந்தான கற்றாழையை சாப்பிடலாம்.கற்றாழையை தொடர்ந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாபிடுவதால் piles என்னும் இம்சையை அறவே ஒழித்துக் கட்டலாம்.

உட்கொள்ளும் முறை:

கற்றளையை செடியில் இருந்து விரல் நீளத்திற்கு அறுத்தெடுத்து பின்னர் அதிலிருக்கும் பச்சை நிற தொலை கத்தியால் சீவி விட்டு உள்ளே இருக்கும் நுங்கு போன்ற நிறமில்லா சதையை உட்கொள்ளலாம்.

பி.கு:

பச்சை நிறம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது.கொஞ்சம் ஒட்டி இருந்தாலும் அதை சாபிடும்போது அநியாயத்திற்குக் கசக்கும்.

உள்ளே இருக்கும் சதையில் எவ்விதமான சுவையும் இருக்காது.அதனால் பயம் தவிர்த்து சாப்பிடலாம்.

15 comments:

Anonymous said...

இதற்கு பத்தியம்(உணவு கட்டுப்பாடு) ஏதாவது இருக்கிறதா?
தயவு செய்து எழுத்து பிழைகளை தவிற்க்கவும்!

pudugaithendral said...

பெண்களுக்கே இருக்கும் ப்ரச்சனையான வெள்ளை படுதலுக்கும் கற்றாழை சிறந்த மருந்து.

7 முறை நீரில் கழுவி உண்ண வேண்டும். அப்போதுதான் அந்த வழவழப்பு + கசப்புத் தன்மை கொஞ்சம் போகும்.

pudugaithendral said...

100ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

கற்றாழையில் நல்ல குறிப்பு குடுத்திருக்கிங்க.சின்ன வயசுல அதன் அருமை தெரியாமல் அலட்சியப்படுத்திருக்கேன் ஆனா இப்ப நினைக்கும்போது ரொம்ப ஏக்கமா இருக்கு.அதுல நிறைய மருத்துவம் இருக்கு.

Sasirekha Ramachandran said...

பத்தியம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.எப்போதும்போல் சாப்பிடலாம்.

Sasirekha Ramachandran said...

//நீரில் கழுவி உண்ண வேண்டும். அப்போதுதான் அந்த வழவழப்பு + கசப்புத் தன்மை கொஞ்சம் போகும்.//

yes yes.இதை எழுத மறந்து விட்டேன்!!!நினைவுபடுத்தியதற்கு நன்றி!!!

Sasirekha Ramachandran said...

//சின்ன வயசுல அதன் அருமை தெரியாமல் அலட்சியப்படுத்திருக்கேன் ஆனா இப்ப நினைக்கும்போது ரொம்ப ஏக்கமா இருக்கு.//

எப்பவுமே இப்படிதான்.எதை அலட்சியப் படுத்துவோமோ அதுதான் அதிலுள்ள நன்மையைக் காட்டி நம்மை நாக்கைக் கடித்து புருவத்தை உயர்த்த வைக்கும்.எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு!!

Unknown said...

நெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ அம்முனி...!!!!


ஆனா ஒன்னு...!! கத்தாழ சாப்புடும்போது நல்லா மென்னு சாப்புடோனும்...!!! இல்லீனா வயத்த வலிக்கும்...!!!!

Sasirekha Ramachandran said...

இதுவேறயா???ஆனா அப்பிடியே மிழுங்கறதும் கஷ்டம்தான்.

ஆகாய நதி said...

இந்த கற்றாழை மகத்துவம் தெரிந்திருந்தாலும் எனக்கு அது கிடைக்கவில்லை :(

என்னைப் போல் constipation-ல் பாதித்து கர்ப்பகாலத்தில் சிரமப்பட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்...

100வது பதிவிற்கு வாழ்த்துகள்!

Thamiz Priyan said...

கற்றாழையில் இம்புட்டு மேட்டர் இருக்கா... குறிப்பில் வச்சுக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா கழுவிட்டு மிக்ஸியில் போட்டு அடிச்சு சாப்பிடலாம்.. அதுகூட தயிர் சேர்க்கலாம்ன்னு நினைக்கிறேன் கேட்டு சொல்றேன் அம்மாட்ட முன்ன ஒரு சமயம் இப்படி சாப்பிட்டிருக்கேன் மறந்துடுச்சு..

Unknown said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா கழுவிட்டு மிக்ஸியில் போட்டு அடிச்சு சாப்பிடலாம்.. அதுகூட தயிர் சேர்க்கலாம்ன்னு நினைக்கிறேன் கேட்டு சொல்றேன் அம்மாட்ட முன்ன ஒரு சமயம் இப்படி சாப்பிட்டிருக்கேன் மறந்துடுச்சு.. //ஐயோ ... ammuni appudi செஞ்சுபோடாதீங்கோ...!!!! கொழ ...கொழ .. கொழன்னு முழுன்கவே முடியாதுங்கம்முனி .....!!! நெம்ப பேருக்கு ஜெல்லு மாதிரி இருந்தா புடிக்காது ...!!!!


நா சொல்ல்ற மாதிரி செஞ்சு பாருங்கோ...!!!


கத்தாலைய நல்லா பச்ச தோல சீவிபோட்டு..... , சின்ன சின்ன பீசா கட பண்ணி வெச்சுபோடுங்கோ...!!! அப்பறமா... சக்கரைய மிக்ஸியில போட்டு லேசா பவுடர் பண்ணி , கத்தால மேல தூவி கலக்கி வெச்சுபோடுங்கோ...!! ஒரு 15 நிமிஷம் ஊருனதுக்கு அப்புறமா சாப்புடுங்கோ.... கொஞ்சம் சுவீட்டா இருக்கும்..... !!!

padmaeswari said...

Katralai-ya face-ku thadavinda kopalam, kattikal eduvum varadu. face nalla irukum.

padmaeswari said...

katralaiya face-la thadavina vanda kopalangal, kattigal elam odi poyedum. face nalla irukum

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger