Saturday, November 29, 2008

அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!

இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!

என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?

இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!

நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!

6 comments:

பிரேம்குமார் said...

அப்பாக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் :)

பிரேம்குமார் said...

அப்பாக்களுக்கும் அப்படின்னு போட வேண்டியத தப்பா போட்டேன் ;)

ஆகாய நதி said...

நான் இப்போது பல கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான இணையதளங்களையும் மேய்ந்து வருகிறேன். இந்த வலைப்பூ மூலம் நாம் அனைவரும் படித்து அனுபவித்து தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு :)

Parameswari said...

very nice and very useful to all mums.

THE PEDIATRICIAN said...

நல்ல பதிவு , வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

பெற்றோர்களின் கவனத்திற்கு : Child Sexual Abuse

http://avargal-unmaigal.blogspot.com/2011/01/child-sexual-abuse.html

If you like you can pass this tamil article to your Group

Thanks

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger