Tuesday, July 19, 2011

Sweet Moments -4

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;


ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது ! "எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.


"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,


"எம்பொண்ணாக்கும்! "


ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.//

அழகான பகிர்வு. வாழ்த்துக்கள்.

vijiraja said...

so cute

சுபத்ரா said...

சின்ன வயசுல எனக்கும் எங்க மிஸ் இப்படிச் சொல்லித் தர, அம்மா அப்பா காலைத் தொட்டு வணங்கனும்னு ஆசையா இருந்தது. அடுத்த நாள் காலையில அம்மா படியில் அமர்ந்து தேனீர் ஆற்றிக் கொண்டிருக்கும் போது அவரது அருகில் நின்ற நான் அவர் அறியாத வண்ணம் காலைத் தொட்டு வணங்கிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து என் அம்மா என்னைப் பார்த்து, “நீ அம்மா காலைத் தொட்டுக் கும்பிட்டல..? நான் பார்த்தேன்” என்று சொல்ல வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது. எங்க மிஸ் தான் சொன்னாங்க மா.. நானா செய்யல என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டேன் :)

ச்ச... அழகான நியாபகத்தைக் கிளறிவிட்ட பதிவு.

அப்புறம், குட்டி பாப்பா க்கு என்னோட பெஸ்ட் விஷ்ஷஸ்..

KUNTHAVAI said...

:)

arul said...

arumai nice sharing

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger