
அனைத்து தந்தைமார்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேன்! :)
அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்து யோசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை! ஏனென்றால் எல்லா பெண்களுக்குமே "அப்பா" என்பவர் ஒரு ஹீரோவாக, ரோல் மாடலாக, ஏன் உலகத்திலேயே சிறந்தவராதான் இருப்பாங்க! எப்படி சொல்றதுனு தெரியல.... என்னைப் பொறுத்தவரை என் அப்பாவைப் பற்றிக் கூற வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது! இது சற்று மிகையாகத் தோன்றினாலும் உண்மை!
என் அப்பாவின் வாழ்க்கை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த புத்தகம்! இது என் கருத்து ஆனால் இதனையே என் அப்பாவை அறிந்த பலர் கூறிக் கேட்டிருக்கிறேன்! எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அட்சயப் பாத்திரமாய் அன்பு பொழியும் திருக்குறள் காட்டும் வழி வாழும் ஒரு மெழுகுவர்த்தி மனிதர்! நீங்களும் பழகிப் பாருங்கள் நான் சொல்வது புரியும் :)
அதோ அந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் நான் இன்றும் என் தந்தை கை பிடித்து நடப்பேன்! என் மகனும் அவ்வாறே அவன் தந்தைக் கை பிடித்து நடக்கும் நாளுக்காக அந்த அழகைக் காண மனம் ஏங்குகிறது...... சரி ரூட் மாறுது!
நான் இன்று இவ்வளவு தன்னம்பிக்கையோட, துணிச்சலோட, எதோ கொஞ்சூண்டு அறிவாளியா, ஈரமான மனசோட, ஏதோ கொஞ்சூண்டு நல்லவளா இருக்கேனா அதுக்கு என் அப்பாதான் காரணம்!
என் அப்பா எனக்கு அளித்த சுதந்திரம் அவர் இரத்தம் இரண்டுமே இவையாவையும் எனக்கு அளித்தது! கி கி கி! பார்க்கக் கூட எங்க அப்பா மாதிரிதான் நான்! அரை சொட்டை டோப்பா, ஒட்டு மீசை வெச்சு பார்த்தா!!!! :)))
ஆனால் சோகம் என்னனா நான் முதுநிலைல தங்க மெடல் வாங்கினப்போ என் அப்பா தான் அதை வாங்கனும்னு நினைச்சேன்... அவங்களுக்கு வர முடியல சரி அவங்க இடத்துல நான் வைத்துப் பார்க்கும் இன்னொருவர் என் கணவர்... சரி அவங்களயாவது கூப்பிட்டு வாங்க சொல்லலாம்னு பார்த்தா நான் தான் வந்து வாங்கனுமாம் நான் வரலைனாதான் அவங்க வாங்கலாமாம் :( நாம தான் காலைல ரிகர்சல் அப்பவே பிரசண்ட் கொடுத்தாச்சே என்ன செய்ய!
நான் தான் போயி வாங்கினேன்! ஆனால் அதுலயும் ஒரு மகிழ்ச்சி என்னனா பொழிலன் என் வயிற்றில் 5மாத சிசு அப்போது! அவன் தான் வாங்கினதா நினைச்சுக்கிட்டேன்! :)
இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியும் என் அப்பா எனக்கு தந்தது! நல்ல வாழ்க்கை, கல்வி, வேலை, நல்ல பெயர், கணவர்னு எல்லாமே எனக்கு அப்பா கொடுத்த அருமையான பரிசுகள்!
பெற்றோர் இல்லாமல், உறவினர் ஆதரவும் இன்றி கண் தெரியாத சூழ்நிலையிலும் தன்னந்தனியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் தானும் படித்து பிறர் படிக்கவும் உதவி செய்து பட்டப்படிப்பை முடித்து கிடைத்த வங்கி வேலையையும் ஆதரவில்லாதப் பெண்ணுக்கு விட்டுக் கொடுத்து, கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில் இன்று உயரிய நிலையில் இருக்கும் என் அப்பா எங்களை எந்த சிரமும் கொடுக்காமல் மிக மகிழ்ச்சியாக வளர்த்து ஆளாக்கினார்! இன்றும் பொதுசேவை என்று தூக்கத்தினையும் கூட தியாகம் செய்து பிறருக்கு ஓடி உதவும் ஒரு மாமனிதர் அவர்! நான் அவரோட பொண்ணுனு சொல்லிக்கிறத விட ஒரு சிறந்த பெருமை என்ன இருக்க முடியும்?
எனக்கு திருமணம்னு சொல்லி ஒரு அழகான குருவிக்கூட்டுல என்னையும் இணைச்சு வெச்சாங்க எங்க அப்பா! என்னை எப்பவுமே மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளும் என் அப்பாவுக்கு நான் அம்மா மாதிரி!
இப்படி எப்பவுமே என்னை நெஞ்சில் சுமக்கும் அப்பாவைப் பற்றி முழுமையாலாம் எழுத முடியல!
இப்படிப்பட்ட பல அப்பாக்கள் இருக்காங்க... எல்லா அப்பாக்களுக்குமே என் வாழ்த்துகள்! :)))
என் அப்பாவைப் பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த முல்லைக்கு கோடி நன்றிகள்! :)))
Sunday, June 21, 2009
தந்தையர் தின வாழ்த்துகளுடன்!
Posted by ஆகாய நதி at 4:05 PM 9 comments
Labels: ஃபாதர்ஸ் டே 09
Friday, June 19, 2009
தந்தைக்கு
காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் காலம் இது. அதனால் நமக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுக்கும் பரிசு பொருட்கள் காசு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் செலவழித்து செய்ததாக இருந்தால், நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் என்பது என் நம்பிக்கை. வரயிருக்கும் தந்தையர் தினத்திற்கு குட்டீஸ் தன் தந்தைக்குப் பரிசு அளிக்க சில பெயிண்டிங் செயல்முறைகள்.
1. Bubble wrap painting :
தேவையான பொருட்கள் :
1. Bubble wrap
2. பெயிண்ட்
3. காகிதம்
Bubble wrap மீது குழந்தைகள் பெயிண்ட் செய்ய வேண்டும். அவர்கள் திருப்தி அடைந்தவுடன், காகிதத்தை பெயிண்ட செய்யப்பட்ட Bubble wrap மீது வைத்து மெதுவாக அழுத்த சொல்லவும். காகிதத்தில் பெயிண்ட் அழகாக ஒட்டியிருக்கும்ம். காய வைக்க வேண்டும்.
2. Marble painting:
தேவையான பொருட்கள் :
1. கோலி குண்டு
2. பெயிண்ட்
3. காகிதம்
4. செருப்பு டப்பா
கோலி குண்டை பெயிண்ட்டில் போட்டு, முழுவதும் பெயிண்ட் இருப்பது போல் உருட்ட வேண்டும். செருப்பு டப்பாவில் காகிதத்தை வைத்து, குண்டை காகிதத்தின் மேல் போட்டு டப்பாவை லேசாக ஆட்ட வேண்டும். குண்டு உருளும் இடத்தில் பெயிண்டால் கோடுகள் வரைந்து கொண்டே போகும்.
3. உப்பு/மண் பெயிண்டிங் :
தேவையான பொருட்கள் :
1. கோந்து
2. பெயிண்ட்
3. உப்பு அல்லது மண்
4. காகிதம்
கோந்தால் காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அதன் மேல் உப்பு அல்லது மண்ணைத் தூவவும். ஈரம் காயும் முன் பெயிண்ட்டால் அதன் மேல் ஒற்றி எடுக்கவும்.காய வைக்கவும்.
4. Monoprint :
தேவையான பொருட்கள் :
1. பாலீத்தின் காகிதம்
2. பெயிண்ட்
3. காகிதம்
குழந்தையை பாலீத்தின் அல்லது பெயிண்ட் ஒட்டாத காகிதத்தில் பெயிண்ட் பண்ண வேண்டும். முடித்தவுடன் அதன் மேல் வெள்ளை காகிதம் போட்டு, லேசாக அழுத்த வேண்டும். காகிதத்தைக் காய வைக்கவும்.
Posted by Dhiyana at 12:04 PM 2 comments
Labels: ஃபாதர்ஸ் டே 09, தீஷு, துறுதுறு கைகளுக்கு
Tuesday, June 16, 2009
அன்பு தோழிகளே !!

பதிவுலக நண்பர்களே!!
நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?
என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.
இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...
நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.
ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.
ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.
வாய்ப்புக்கு நன்றி முல்லை.
Posted by Anonymous at 2:24 PM 17 comments
Labels: கருத்து, புதிய முயற்சி, விஜி
தந்தை பாசம்
தந்தையர் தினத்தை முன்னிட்டு என் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பைக் கவிதையாக எழுத முயற்சித்த ஒரு பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன். என் தந்தையும் இப்படி தான் அன்பைப் பொழிந்தார். அன்புத் தந்தையர் அனைவருக்கும் "தந்தையர் தின" வாழ்த்துக்களை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன். 
உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!
என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...
உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...
நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...
உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...
என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...
சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...
Posted by அமுதா at 11:04 AM 10 comments
Labels: அமுதா, ஃபாதர்ஸ் டே 09
Tuesday, June 9, 2009
எரிமலை

Posted by Dhiyana at 3:00 PM 8 comments
Labels: எரிமலை, தீஷு, துறுதுறு கைகளுக்கு
Sunday, June 7, 2009
நன்றி: - மித்ரா
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. எங்கள் குட்டி தேவதைக்கு " மித்ரா " என்று பெயர் சூட்டி உள்ளோம் .
Posted by Veena Devi at 7:09 PM 11 comments
Labels: வாழ்த்துக்கள்
Monday, June 1, 2009
தந்தையர் தினம் - அறிவிப்பு!
ஹாய் அம்மாஸ்,
அன்னையர் தினத்தை கருத்தாகக் கொண்டு மிக அருமையான படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கும், அம்மாக்கள் வலைப்பூ வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரின் இடுகையும் மிகச் சிறப்பான பகிர்வாக இருந்தது! இந்தமாதம், தந்தையர் தினத்தைக் கொண்டு வருகிறது. அப்பாக்களுக்கும் நமது வாழ்வில் சரிபங்கு இருக்கிறது அம்மாவைப் போல! பள்ளிக்கும் ஹாஸ்டலுக்கும் கொண்டுவந்து விட்டு அழைத்துச் செல்வது முதல், யாராவது திட்டிவிட்டால் பரிந்துக்கொண்டு வந்து பாதுகாப்பது, நாம் கேட்பதற்கு முன்னரே நமக்கு பிடித்ததை வாங்கி அசத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது/எடுக்க உதவுவது என்று அப்பாக்கள் நமது வாழ்வில் நிறைந்து இருக்கிறார்கள்.
அதனால் இம்மாதம், நாம் தந்தையரைக் கொண்டாடுவோம்!
அன்னையர்தின அறிவிப்புஇடுகையில் சொல்லப் பட்ட guidelines-ஐ தொடர்வோம், இப்போதும்! அப்பாவிற்கு கடிதமோ, அல்லது புதிதாக அப்பாவாகி இருப்பவர்களுக்கு டிப்ஸோ அல்லது உங்கள் நினைவுகளையோ, உங்கள் குழந்தையின் அப்பாவிற்கு சொல்லவிரும்புவதையோ....உங்கள் கற்பனைகளே எல்லை! அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களுக்கும் அதே! லேபிள்: உங்கள் பெயர் மற்றும் ஃபாதர்ஸ் டே 09.
கோடை தணிந்து விடுமுறையும் முடிந்திருக்கும் இந்தமாதத்தில், வலைப்பூ உறுப்பினர் அம்மாக்கள், விடுமுறை சுவாரசியமான பயண அனுபவங்களை/சுற்றுலாதல குறிப்புகளை நமது வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளலாம். அதாவது, நமது அனுபவங்களில் பிறருக்கு உபயோகமாகயிருக்கும் என்று நினைப்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள், டிப்ஸ் போன்றவற்றை நமது வலைபூவில் பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.
நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், தந்தையர்தின இடுகைகள் மூலம்! :-)
Posted by சந்தனமுல்லை at 8:48 AM 6 comments
Labels: ஃபாதர்ஸ் டே 09, சந்தனமுல்லை, பொது

mombloggers@gmail.com
