Showing posts with label எரிமலை. Show all posts
Showing posts with label எரிமலை. Show all posts

Tuesday, June 9, 2009

எரிமலை

இதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்குப் புரியாது என்று நினைப்பதையெல்லாம் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிறு உதாரணம், பால் பொங்கி வரும் பொழுது என் அருகில் நின்று கொண்டிருந்த என் மூன்று வயது மகள் என்னிடம், "ஏன் பொங்கின பால் கீழ வருது?" என்றாள். வெப்பம், கொதிநிலை போன்ற விளக்கங்கள் அளித்து முடித்தவுடன் நான் உரையாடலைத் தொடருவதற்காக "ஏன் தூக்கிப் போட்ட பால்(Ball) கீழ வருது தெரியுமா?" என்றேன். தெரியாது என்றவுடன் gravity என்று சிறு விளக்கங்களும் கொடுத்தேன். சிறுது நேரத்தில் பார்க் சென்றோம். மேகத்திலிருந்து மழை வருகிறது என்று தெரிந்த அவள், வானத்தைப் பார்த்துக் கொண்டே என்னிடம் "மேகத்திலிருந்து மழை வருவது கூட gravity தானா ?" என்றாள். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. நாம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பஞ்சு போல் உறிஞ்சி கொண்டேயிருக்கிறார்கள்.


சொந்த கதைக்கான காரணம், குழந்தைகளுக்கு எரிமலைப் பற்றி சொன்னா என்ன புரியும் என்ற கேள்வியைத் தவிர்க்கத்தான். ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் அதன் அர்த்தங்களையும் அவர்கள் பதிய வைக்கிறார்கள் என்று கூறத்தான். எரிமலையை வீட்டில் செய்வதற்கான வழிமுறையை வலையில் தேடிய பொழுது கிடைத்தது. அதைப் பகிரவே இந்த பதிவு. பதியும் ஐடியா கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி :-)






தேவையான பொருட்கள் :


1. Baking soda - 2 tsp

2. Vinegar - 2 tsp

3. Food colouring (optional)


ஒரு கிண்ணத்தில் Baking soda போட்டு, அதில் red food colouring சேர்த்துக் கொள்ளவும். அதில் vinegar ஊற்றினால், பொங்கிக் கொண்டு வந்து கொட்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப மாவில் மலை போல் கிண்ணத்தில் சுற்று வைத்தால், அவர்கள் ஆர்வத்தைத் தூண்டிவது போல் இருக்கும். இதன் மூலம் volcano போன்ற vocabulary முதல் நிறைய தெரிந்து கொள்ளவர். பின் நான் http://video.google.com/videoplay?docid=5138291898525259472போன்ற வீடியோக்கள் காண்பித்தேன். சற்று பெரிய குழந்தைகளிடம் படம் வரைய சொல்லலாம். இது எரிமலையைப் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger