Sunday, November 14, 2010
Thursday, April 15, 2010
Summer camp @ Blogdom!
ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.
2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )
1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்) mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.
2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.
2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.
3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.
4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.
5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.
குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும் நன்றிகள்!!
Posted by சந்தனமுல்லை at 2:23 PM 2 comments
Labels: அறிமுகம், அறிவிப்பு, குழந்தை வளர்ப்பு, சந்தனமுல்லை, சுற்றமும் நட்பும்
Thursday, November 12, 2009
அகில், அனன்யா, ஜெயா - மூன்று அறுந்த வால்கள்
அகில் - நான்கரை வயது அறுந்த வால். அனன்யா - பிறந்து 40 நாட்கள் ஆன குட்டி வால். நான் ஜெயா பிறந்து ரொம்ப நாளாகிய அறுந்த வால் :) நாங்கள் மூவரும் அடிக்கும் கொட்டம் தாங்காமல் அலறுபவர் பலர்.... உன்னைப் போல உன் குழந்தைகளை வளர்க்காதே என்ற அறிவுரையை அள்ளி வீசியவர் ஏராளம்.
எங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்கள், அடிக்கும் லூட்டிகள், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை. ஏற்க்கனவே அகிலின் குறும்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
இந்த அம்மாக்களின் பதிவில் என்னுடைய குழந்தை வளர்ர்ப்பு பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி எழுத ஆரம்பிக்கின்றேன்...
ஜெயா.
Posted by ஜெயா at 3:45 PM 5 comments
Labels: அகில் அனன்யா, அறிமுகம், ஜெயா
Monday, June 29, 2009
'பிரா'ப்ளம் - ஒரு அறிமுக பார்வை
சில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.
இனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)
சின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.
இது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.
உங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:
இந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.
சரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்
சரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.
முதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா? கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.
13வயது முதல் திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.
பாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.
இது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.
இந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது.. இது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை...
Posted by Anonymous at 10:31 PM 7 comments
Labels: அடிப்படை, அம்மாக்களுக்கு, அறிமுகம், ஆரோக்கியம், விஜி
Tuesday, June 23, 2009
என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்
அன்புள்ள தோழிகளே,
அம்மாக்களின் வலைபூகள் இணையத்தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதில் வரும் பகிர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து உள்ளீர்கள். அதனால் என்னுடைய பகிர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு முன் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து என்னை அறிமுக படுத்திகொள்கிறேன்.
என் பெயர் விஜிராஜா. என் கணவர் பெயர் ராஜா. எங்களக்கு முன்று மாத கண்மணி எங்கள் மகள். அவளுக்கு நாங்கள் நிதலாக்க்ஷயா என்று பெயர் சூட்டிஉள்ளோம். நான் மனிதவளத்துறையில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிஉள்ளேன். தொலைபேசி நிறுவனம், மற்றும் கார் நிறுவனத்தில் மனிதவளத்துறையில் பணியாற்றி உள்ளேன்.
இங்கே என்னுடைய அனுபவங்களிலேருந்து நிகழ்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். இங்கே என்னையும் உங்களில் ஒருவராக ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி,
விஜிராஜா
Posted by vijiraja at 2:07 AM 10 comments
Labels: அறிமுகம்
Friday, May 1, 2009
யூத் புல் விகடனில் நம் பதிவு
நம்ம அம்மாக்களின் வலைப்பூவின் பதிவு யூத் புல் விகடனில் வந்திருக்கு ....
உற்சாகமா இருக்கு. இது இன்னும் எழுத உற்சாகப்படுத்தும்.
Posted by Anonymous at 8:49 AM 12 comments
Saturday, November 29, 2008
அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!
இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!
என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?
இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!
நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!
Posted by சந்தனமுல்லை at 6:48 PM 6 comments
Labels: guidelines, அறிமுகம், பொது, வரவேற்பு