அகில் - நான்கரை வயது அறுந்த வால். அனன்யா - பிறந்து 40 நாட்கள் ஆன குட்டி வால். நான் ஜெயா பிறந்து ரொம்ப நாளாகிய அறுந்த வால் :) நாங்கள் மூவரும் அடிக்கும் கொட்டம் தாங்காமல் அலறுபவர் பலர்.... உன்னைப் போல உன் குழந்தைகளை வளர்க்காதே என்ற அறிவுரையை அள்ளி வீசியவர் ஏராளம்.
எங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்கள், அடிக்கும் லூட்டிகள், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை. ஏற்க்கனவே அகிலின் குறும்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
இந்த அம்மாக்களின் பதிவில் என்னுடைய குழந்தை வளர்ர்ப்பு பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி எழுத ஆரம்பிக்கின்றேன்...
ஜெயா.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
5 comments:
happy childrens day too all the sweet little angels.
வரவேற்கிறோம்...வாழ்த்துகள்!! :-)
வாழ்த்துக்கள் !!!
:))
அம்மாக்கள் வலைப்பதிவில் எங்களை போன்ற குட்டீஸ்களுக்கு கொஞ்சமாய் அட்வைசும் அம்மாக்களுக்கு நெறைய அட்வைசும் கொடுக்கமாறு பணிவு + அன்புடன் மிரட்டிக்கொள்கிறோம் :))))))
//நீங்க வந்ததில ரொம்ப சந்தோஷம். நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க!//
சரியான ரேடியெஸ்ல சுத்தப்பட்ட தோசை
உப்பியிருக்கும் பூரி
நெய் மிதக்கும் பொங்கல்
தேங்காய் சட்னி
[எல்லாத்துக்குமே ஒரே சைட் டிஷ் போதும் அம்மாக்களை கஸ்டப்படுத்தப்பிடாது - காலையில நாலு நல்லவார்த்தை கேட்டீங்கன்னு இது!]
நன்றி முல்லை. ஆயில்யன், வாழ்த்துகளுக்கு நன்றி. கண்டிப்பாக, நான் எப்போதும் குழந்தைகள் கட்சிதான். இந்த அம்மாக்களை கொட்டம் தாங்கமுடியாது, அவர்களை குழந்தைகள் சார்பில் மிரட்டலாம் வாங்க.
ஜெயா.
Post a Comment