Wednesday, November 11, 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை - செல்வனூரான் அவர்களின் பதிவிலிருந்து!

தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பதிவிலிருந்து "

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
"

மீதியை இங்கே அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை வாசியுங்களேன்! நல்ல இடுகைக்கு நன்றி தங்கராசு செல்வேந்திரன்!

6 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி முல்லை

கல்யாணி சுரேஷ் said...

உபயோகமுள்ள பதிவு. நன்றி.

pudugaithendral said...

நன்றி முல்லை

தங்கராசு நாகேந்திரன் said...

நன்றி சந்தனமுல்லை அவர்களே,
இந்த கட்டுரை ஹிண்டு நாளிதழில் இனுமெல்லா சசிகலா என்பவர் எழுதியது எனவே பாராட்டுக்கள் அவரையே சாரும். இந்த கட்டுரைப் பற்றி நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கூட இன்றைய ஹிந்து நாளிதழில் ஒரு கவிதை எழுதியுள்ளார்
கட்டுரையைப் படித்ததும் மனம் கனத்துப் போய் உங்களைப் போலவே எண்ணம் கொண்டு இது பலரையும் அடைய வேண்டும் என்ற உந்துதலில் இந்த பதிவை எழுதினேன் எனது நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இது பற்றி பதிவு எழுதிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பற்பல.

suvaiyaana suvai said...

useful!!

Dhiyana said...

நான் பேப்பரில் படிச்சேன் முல்லை. என்ன தான் பேசினாலும் இன்னும் சிறிது நாட்களில் என் குழந்தையும் இதே மாதிரி பள்ளிக்குத்தானே போகப்போகிறது?

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger