Friday, March 20, 2009

மூன்று குட்டி பன்றிகள்


இங்கே நானும் உங்களுடன் உங்களுக்காக கதை சொல்ல வந்திருக்கிறேன்.

ஒரு ஊரில் மூன்று குட்டி பன்றிகள் இருந்தது.ஓய்வு நேரங்களில்,நன்றாக சாப்பிட்டு தூங்குவது இவைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
இப்படியே நாட்கள் கடந்தது.இன்னும் சிறிது நாட்களில் குளிர் காலம் வந்துவிடும் என்பதால் மூன்றுமே தங்களுக்கென வீட்டைக் கட்டிக் கொள்ள விரும்பியது.
உடனே முதல் பன்றி,வைக்கோல் வைத்து வீட்டைக் கட்டி முடித்தது.
இரண்டாவது பன்றி,குச்சிகளை வைத்து கட்டி முடித்தது.மூன்றாவது பன்றியோ செங்கல் வைத்து வீட்டை கட்டி முடித்தது.மூன்று பண்ர்டிகளுக்கும் ஒரே சந்தோசம் தங்களுக்கென ஒரு வீடு இருப்பதை எண்ணி.
ஓரிரு நாட்கள் கழித்து அந்தப் பக்கமாக ஒரு நரி வந்ததாம்.அது முதல் பன்றியின் வீட்டுக் கதவைத் தட்டியதம்.உடனே பன்றி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டது தட்டுவது யாரென்று.அதனால் கதவைத் திறக்கமுடியாது என்றதாம்.அப்போது நரி சொன்னதாம்,
நீ கதைத் திறக்கவில்லை என்றால் நான் உன்வீட்டை ஊதியே இடித்துவிடுவேன்.பிறகு உன்னை சாப்பிட்டும் விடுவேன் என்றதாம்.உடனே பன்றியோ,சற்றும் பயப்படாமலம்,
உன்னால் முடிந்தால் செய்துபார் என்றதாம்.
நரி சொன்னதுபோல் வீட்டை ஊதியே இடித்துவிட்டதம்.ஆனால், பன்றியோ பயந்துகொண்டு வேகமாக இரண்டாம் பன்றியின் வீட்டுக்க ஓடியதாம்.அங்கே சென்றதும் இந்த நரி அங்கேயும் வந்து முன்னதாக சொன்னதுபோல் இங்கேயும் சொன்னதம்.இவர்களும்
உன்னால் முடியாது,முடிந்தால் செய்து பார் என்றார்களாம்.அதுவும் சொன்னதுபோல் வீட்டை இடுத்துவிட்டதாம்இடித்தும் இந்த இரண்டு பன்றிகள் பயந்து ஒடுவைதைக் கண்டு சிரித்துக் கொண்டே ஆணவத்துடன் பின்னாலேயே
நடந்து போனதாம்.அந்த இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் தாளிட்டுக் கொண்டதுகளாம்.அப்போது ஒன்றும் தெரியாத அந்த மூன்றாவது பன்றியிடம் நடந்தவற்றிப் பற்றி இவ்விரண்டும் கூறியதாம்.அந்த நேரத்தில்,நரி இங்கும் வந்து அதேபோலவே சொல்லி மிரட்டியதாம்.உடனே மூன்றாவது பன்றியோ,
அவ்விரண்டு பன்றிகள் சொன்னதுபோலவே சொன்னதாம்.
உடனே நரி ஊ...ஊ....வென வேகமாக ஊதிப் பார்த்ததாம்.ஆனால் பாவம்இப்படி செய்து செய்து அதற்கு இருதயம் பலவீனமாகிப் போய் இறந்தே போனதாம்.மூன்று பன்றிகளும் உயிர் தப்பியதை எண்ணி பெருமூச்சு விட்டனவாம்.

moral of the story ஐ நீங்களே சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் குழந்தைக்கு சொல்லி விடுங்களேன் ப்ளீஸ்.

7 comments:

Thamiz Priyan said...

நல்ல அறிவுரைக் கதை!

அரசூரான் said...

நான் படித்த நரியும் பன்றியும் கதையில்

அந்த நரி சோம்பேரி நரியாம்... குளிர் காலத்துக்காக உணவு சேமித்து வைக்க வில்லையாம். உண்ண உணவு தேவை பட்டதால் முதல் ப.கு-விடம் கேட்டதாம்... அது இல்லை என்று சொன்னவுடன் வீட்டை ஊதி தள்ளிவிட்டு உணவை சாப்பிட்டு விட்டதாம்...

மறு நாள் இரண்டாவது ப.கு-விடம் அதே போல் நடந்தது. வீட்டை இழந்த இரண்டு ப.கு-வும் இப்போது மூன்றாவது ப.கு-வின் வீட்டில்.

மூன்றாவது வீட்டுக்கு வந்த நரி ஊதி பார்த்து கலைத்து விட்டது. இருந்தாலும் அதன் பசியும் நரியின் ஏமாற்று புத்தியும் புதிய திட்டம் தீட்டியது... எப்படியும் உள்ளே நுழைந்து உணவை சாப்பிட்டு விட வேண்டும் என்று. அது ஜன்னலுக்கு அருகில் வந்து அந்த ப.கு-விடம் சொன்னது. உன் வீடு வெளியில் இவ்வளவு அழகாக இருக்கிறதே... உள்ளே இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா, நான் வந்து பார்க்கலாம, உங்கள் உணவை நான் தொட மாட்டேன் என்றும் உறுதியளித்தது.

நரியின் சூழ்ச்சி தெரிந்த ப.கு-கள் நரிக்கு நல்ல பாடம் புகட்ட விரும்பின. ஓ அப்படியா... சரி நீ உள்ளே வரலாம் ஆனால் மேலே உள்ள புகை போக்கி வழியாகத்தான் நீ வர முடியும் என்றது. நரியும் சரி என்றது.

நரி மேலே ஏற சென்றபோது ப.கு அடுப்பில் நன்றாக தீயை மூட்டி எரிய விட்டது... புகை போக்கியில் வழுக்கி அடுப்பில் விழுந்து சூடு பட்ட நரி உயிர் பிழைத்தால் போதும் என்று ஓ என ஊளையிட்ட படி ஓடியது

அமுதா said...

இந்த கதை தான் அடிக்கடி எங்கள் வீட்டில் நாடகமாக நடத்தப்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கதை

யூர்கன் க்ருகியர் said...

நல்ல கதை!

Anonymous said...

குழந்தைகளுக்கு பிடித்த கதை

goma said...

http://valluvam-rohini.blogspot.com/2007/12/blog-post_1696.html

இந்த லின்க் சென்று பார்க்கவும்.மஙையர்மலரில் வெளியான கட்டுரை.
அம்மாக்களின் வலைப்பூவுக்கு பிடித்தமான பதிவு

மூன்று பன்றிகளின் கதை நானும் வாசித்த நினை இருக்கிறது.இது போல் நிறைய வெளியிடுங்கள்

ஆகாய நதி said...

நல்ல கதை... நான் அறியாத கதையும் கூட... பொழிலனுக்கு கூறிவிட்டேன் :) நன்றி!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger