Sunday, November 15, 2009

மிகவும் ரசித்த குழந்தைகள் திரைப்படங்கள்

நானும் அகிலும் பொழுது போக்குவதற்க்கு நிறைய படங்கள் பார்த்திருக்கின்றோம். அவனுக்கு டையலாக் புரியாது, நான் எடுத்து சொல்லிக் கொண்டே பார்ப்பேன். என்னுடைய ஆர்வகோளாறுதான் காரணம், அகிலுக்கு மூன்று வயது ஆகுமுன்னரே ஒரு ஐந்து ஆறு படங்கள் பார்த்தோம். ஒரு பாப்கார்ன் பேக்கட்டுடன் உட்கார்ந்தால் பொழுது போவதே தெரியாது, படங்களை சி.டி தேய்ந்து போகும் வரை பார்ப்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது.

இதோ நாங்கள் ரசித்த படங்கள் - பாகம் 1:

1. ஐஸ்ஏஜ்: மூன்று பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கும், குழந்தைகளோடு நாமும் சேர்ந்து ரசித்து சிரிக்கும் அளவிற்க்கு நல்ல வசனங்கள். தொலைந்து போன ஒரு குழந்தையை அதனுடய அப்பாவிடம் சேர்க்கும் வேலையை செய்யும் ஒரு யானை, அதனுடன் ஒரு அப்பாவி ஸ்லாத், கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் ஒரு சிங்கம்புலி. இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு, சண்டை, சிரிப்பு காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு அணில் ஒரு கொட்டையை வைத்துக் கொண்டும் போடும் ஆட்டம் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். கடைசில் குழந்தையை அப்பாவிடம் சேர்க்கும் போது குழந்தை கண்களோடு சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும்.


இரண்டாவது பாகம் - இன்னொரு பெண்யானை சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி, மூன்றாவதில் ஒரு டைனசார் குடும்பம். மூன்றாவது பாகத்தை சத்யம் தியேட்டரி 3 டியில் பார்த்தது கூட அகிலுக்கும் மிகவும் பிடித்த அனுபவம். முதலாவது போல வராது என்றாலும், இதையும் கூட ரசிக்கலாம்.

படம் பார்த்த பிறகு குழந்தைக்கு நட்பு, அன்பு செலுத்துவது போன்ற நல்ல குணங்களைப் பற்றி பேசி எடுத்து சொல்லலாம்.

2. ரேட்டடூயி:

சமையல் தெரியாத லிங்கிகுவினியின் தலையில் ஏறிக் கொண்டு எலி சமைக்கும் படம். கடைசியில அவன் தான் ஹோட்டல் முதலாள்யின் மகன் என தெரிந்து கொள்ளும் எலி, அவனிடம் கூற அவனே முதலாளி ஆகி விடுவான். ஆனால் அவனுக்கு சமைக்கும் திறமை இல்லை, எலிதான் சமைக்கிறது என்று தெரியாத ஒரு உணவு விமர்சகர் அவனை வறுத்து எடுக்க, எலி அவருக்கு பிடித்த உணவினை அவருடைய அம்மாவைப் போல சமைக்க, உண்மை தெரிந்து தன் கருத்தை மாற்றிக் கொள்ளும்படி இருக்கும். விடாமுயற்சி, உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம், கஷ்டம் வரும் போது தோழனுக்காக உதவுவது என பல நல்ல காட்சிகளையும் கருத்துக்களையும் கொண்ட படம்.

3. எ பக்ஸ் லைஃப்: நம்ம எறும்பு, வெட்டுக்கிளி கதைதான் - எறும்புகளை ஒரு வெட்டுகிளி கூட்டம் மிரட்டி அது சேகரித்து வைத்திருக்கும் உணவினை எடுத்து செல்லும் வாடிக்கையை நிறுத்த ஒரு எறும்பின் முயற்சியின் கதை. தன்னம்பிக்கையின் பவரை எடுத்து சொல்லும் படம். அகிலுக்கு ரொம்ப பிடித்த படம், எத்தனை தரம் பார்த்தோம் என்று எங்களுக்கே தெரியாது.4. வால்-ஈ: இதுவும் நாங்கள் தியேட்டரி போய் பார்த்த படம். அகிலுக்கு என்னால் தியேட்டரில் வீட்டில் சொல்லுவது போல என்னால் கதை சொல்ல முடியவில்லை, ஆனாலும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் படம் பார்த்தது. தனிமையின் கொடுமையை முதலில் காண்பிப்பது ரொம்ப நன்றாக இருக்கும், அகிலிடம் அவ்வப்போது சொல்லுவேன், அகில் நமக்கு ஃப்ரண்ட்ஸ் யாரும் இல்லை என்றால் நாம வால் ஈ மாதிரிதான் யாரும் இல்லாம கஷ்டபடுவோம் என்று. ஒரு தோழி கிடைத்தவுடன் அது அடிக்கும் லூட்டி, அதை காப்பாற்றுவதற்க்காக பறக்கும் தட்டிற்க்கு போய் செய்யும் அழிச்சாட்டியங்கள் என ரசிக்கும் வகையாக இருக்கும்.


அதில் வரும் குள்ள கை குள்ள கால் மனிதர்களை காட்டி, நாமும் சாப்பிடலை, ஒழுங்கா சாப்பிடலை என்றால் இப்படிதான் ஆகிவிடுவோம் என்று சொன்னதற்க்கு எஃபக்ட் அகிலிடம் ரொம்ப நாளுக்கு இருந்தது.

5. ஆலாடின்: இது அகிலுக்கு ரொம்ப பிடித்தது என்று சொல்லமுடியாது, ஆனாலும் அவ்வப்போது பார்க்கும். வால்ட் டிஸ்னியின் கிளாசிக் படம், குழந்தைகள் பட வரிசையில் இதை விடுவது கொஞ்சம் டூ மச். அதில் வரும் ஹோல் நியு வேர்ல்ட் பாட்டு அகிலுக்கு ரொம்பபப பிடிக்கும். படம் பார்த்த வுடன் அகிலின் கேள்வி, "அம்மா அந்த மாதிரி கார்பெட் எங்கே விக்கும்?" அது எல்லாம் விக்காதுடா, என்றால் "இல்லை அம்மா, சிட்டி சென்டரில் விக்கும், நல்லா கேட்டு பார்க்கலாம் அம்மா" என்று சொல்லிவிட்டது.
எதையும் நாம் வாயால் சொல்லி புரியவைப்பதைவிட, இது மாதிரி படங்களில் விஷ்வலாக பார்க்கும் போது பலன் அதிகமாக இருக்கும் என்பது என் அனுபவத்தில் கண்டது, நீங்கள் இந்த படங்களை பார்த்ததில்லை என்றால்
கண்டிப்பாக உங்கள் குட்டியுடன் உட்கார்ந்து பாருங்கள். டி.வியில் போடுவதைவிட நாமே டிவிடி எடுத்து பார்ப்பது நலம், ஏனென்றால் அடிக்கடி போது விளம்பரங்கள் படத்தின் எசென்ஸை கெடுத்துவிடும் அபாயம் அதிகம், மேலும் புரியாத இடங்களை நாமே சப்டைட்டிலுடன் பார்ப்பதற்க்கும் வசதியாக இருக்கும் :)

அடுத்த பதிவில அடுத்த ஐந்து படங்களை சொல்லறோம். அதுவரைக்கும் இந்த படங்களை பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க :)

ஜெயா.


7 comments:

சந்தனமுல்லை said...

வாவ்..நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன் இதைப்பற்றி! நல்ல இடுகை..அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

நாங்கள் தொடர்ந்து பார்ப்பதில்லை..ஆனால் பார்த்தவை,

1. george of the jungle - இது பார்த்து பார்த்து நைந்து போய் விட்டது.:))

2. jungle book - வாடகைக்கு வாங்கி பார்த்தோம்..கடைசியில் ஒப்வ்வொரு தடவையும் வாடகைக்கு எடுப்பதைவிட வாங்குவதே பெட்டர் என்று தோன்றிவிட்டது. இதுவும் தின்ம் கொஞ்சமாவது பார்த்துவிடுவோம்.

3. Bugs Life - பப்பு அவ்வளவாக சுவாரசியம் காட்டவில்லை.

4. பீட்டர் பேன் - ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தது...பைரேட்ஸ் பாக ஆரம்பித்தபின் ரசிக்கவில்லை.

5. Baby's day out - சூப்பர் டூப்பர் ஹிட் எங்கள் வீட்டில்

Jaleela Kamal said...

இதில் எனக்கு ரொம்ப பிடித்தது Baby's day out தான்

அருமையான பகிர்வு

பித்தனின் வாக்கு said...

GOOD COMMENT ON GOOD MOVIES. THANKS.

அமுதா said...

நல்ல பகிர்வு. நன்றி. தொடருங்கள்

Dhiyana said...

என்னப்பா.. Shrek காணோம்?

ஜெயா said...

முல்லை, "george of the jungle" பார்த்ததில்லை, பார்க்கிறோம்... உண்மையில் bugs life தவிர நீங்கள் எழுதியுள்ள படங்கள் எதையுமே பார்த்ததில்லை.. லிஸ்ட்டில் எழுதி வைத்துக் கொள்ளுகிறோம்.

நன்றி அமுதா, பித்தன்.

ஷெரெக்கும் பார்த்த்தில்லை தீஷூ, அது என்னமோ குழந்தைகள் படம் போல எனக்கு தோன்றுவதில்லை... பெரியவர்கள் படம் போல இருப்பதாக தோன்றும், ஆகவே அதை கண்டுகொள்ளவில்லை.

ஜெயா.

Anonymous said...

சமிபத்தில்தான் இந்த் வலைப்பூவை அறீந்தேன்.அருமை.மவுனமாகவேவாழ்ந்த மேரி மாதா செய்தி வித்தியாசமாக இருந்தது.தென் தமிழக கடலோர மீனவ மக்க்ள்,மதுரை மீனாட்சி பக்தர்கள்.போர்ச்சுகிசியர்கள்,அவர்கலை கிறீத்துவர்கராக மதம் மாற்றீயபோது அவர்கள் வைத்த ஒரே கோரிக்க்கை, கும்பிட பெண்தெய்வம்வேண்டும். அதற்கு அப்போதைய போப் மறூக்க,இவர்கள் மீண்டும் இந்து மதம் போவோம் என சொல்ல், பின் போப் அனுமதிக்க மேரி மாதா இந்தியா வந்தாள். ஆதர்ரம். மண்ப்பாடு ச்ர்ச் 100 வது ஆண்டு மலர்
தகவல்:குலசை. ஆ. கந்தசாமி, கும்பகோனம்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger