Tuesday, November 17, 2009

குழந்தையின் வயிற்று வலிஅழுகையை நிறுத்த வழி?

எங்கள் அனன்யா ஒன்றரை மாத குழந்தை. அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு அழுகிறாள். வயிற்றில் கேஸ் தொந்தரவினாலும் கூட, டாய்லெட் போகும் போதும் கூட கஷ்டப்படுகிறாள் என தோன்றுகிறது. பால் கொடுத்துவிட்டு முடிந்த வரை ஏப்பம் விட முயற்சி செய்வேன், சில சமயம் வரும் பல சமயம் ஏப்பம் வருவதில்லை. மூச்சா போகும் போது கூட சில சமயம் கஷ்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன், தூங்கும் போது அழுகையுடன் எழுந்து, கொஞ்ச நேரம் அழுது விட்டு மூச்சா போகிறாள்.

எனக்கு தெரிந்த வைத்தியமாக வயிற்றில் விளக்கெண்ணய் வைத்து தேய்த்து விடுகிறேன், ஓமத்தை இடித்த சாறை தாய்பாலில் கலந்து கொடுக்கின்றேன், தினமும் அல்ல, வாரத்தில் இரண்டு நாட்கள், அல்லது அழும் நாட்களில்... கிரைப் வாட்டர் ஏதும் கொடுக்கவில்லை இது வரைக்கும். காலிக் பெயின் மருந்து ஏதேனும் கொடுத்தால் பலன் இருக்குமா?

சுலபமாக ஜீரணம் ஆவதற்க்கும், வயிற்றில் இருக்கும் கேஸ்ஸை வெளியேற்றவும் வேறு ஏதேனும் வைத்தியம் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்களேன்.

ஜெயா.


10 comments:

புருனோ Bruno said...

குழந்தை மருத்துவரிடம் காட்டி பரிசோதிக்கவும்

ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தவிர தண்ணீர் கூட அளிக்க தேவையில்லை

Anonymous said...

டாக்டரிடம் காட்ட வேண்டும்.

ஒருவேளை தாய்ப்பால் இல்லாத சமயங்களில் குழந்தை காற்றை உறிஞ்சிகிறதோ என்னவோ. அப்படி இருந்தால் சிறிது நேரம் நீங்களே குழந்தையை குப்புற படுக்கவைக்கலாம். சில நாட்களில் குழந்தை ஒரு பிரச்னையும் இல்லாமால் அருமையாக இருப்பாள். நீங்கள் distress ஆகாமல் இருங்கள்.

Vidhoosh said...
This comment has been removed by the author.
ஜெயா said...

டாக்டரிடம் சொன்னால், அவர் அது அப்படித்தான் அழும் என்கிற ரேஞ்சில் தான் பதில் சொல்லுகின்றார். நமக்குத்தான் மனசு கேட்க மாட்டேங்குது...

ஜெயா.

ஜெயா said...

நன்றி வித்யா,

நேற்று தேவலை, இன்று மத்தியானத்திலிருந்து கொஞ்சம் அழுகை. காலையில் போனதோடு சரி, அதற்க்கப்புறம் டாய்லெட் போகவில்லை.. அதனால்தான் அழுது கொண்டு இருக்கின்றதா என்று தெரியவில்லை.

மெயில் அனுப்பி இருக்கின்றேன் என்னுடைய நம்பரை.

ஜெயா.

Veena Devi said...

ஆம் . மித்ரா வுக்கும் 45 நாள் ஆன போது இந்த பிரச்னை இருந்தது. டாக்டர் Neopeptine என்று ட்ராப்ஸ் எழுதி குடுத்தார். அனல் அதற்கும் ஒன்றும் கேட்க வில்லை. பால் குடித்ததும் ஏப்பம் வரும் வரை முதுகில் லேசாக தடி குடுக்கவும் . நேராக படுக்க வைக்காமல் ஒரு பக்கம் திருப்பி படுக்க வைத்தாலும் கொஞ்சமாம் வாயு தொல்லை குறையும். கொஞ்ச நாட்களில் , ஜீரண சக்தி அதிகம் ஆக ஆக தன்னால் சரி ஆகி விடும்.கவலை வேண்டாம். மித்ரா வுக்கு ௧௧ நாட்களில் பிரச்னை தீர்ந்து விட்டது.

அன்புடன்

வீணா

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு நன்றி.

ஜெயா said...

ஹிமாலயாஸின் போன்னிசான் என்னும் கிரைப் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. ஒரு தோழியின் பரிந்துரையின் பேரில கொடுத்து பார்த்தில் வயிற்றுவலி தொல்லை பெரிதும் குறைந்து விட்டது. வாயு மற்றும் டாய்லெட் சீராக வெளிவந்து கொண்டும் இருக்கின்றது.

ஆலோசனை சொன்ன அனைவருக்கும் ரொம்ப நன்றி.

ஜெயா.

நான்தான் said...

எனது குழந்தை இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது, காரணம் இல்லாமல் அவ்வப்போது அழும் போது, மிதமான சூட்டில் நீரை அவனது வயிற்றின் மீது ஊற்றுவோம். உடனே அழுகையை நிறுத்தி விடுவான். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

chandrika said...

upto 6 month mother milk is enough for your baby.dont give hot water.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger