வணக்கம்.... வணக்கம். நான் குந்தவை. என்னை பற்றி சொல்லுவதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லைங்க. ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி?).
இந்த அம்மாக்களின் வலைபூவில் என்னுடைய முதல் பதிவு இது, அதனால் ஒரு கதை சொல்லி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது சிறுவர்களுக்கான கதை என்றாலும் நாமும் இதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வது நல்லது என்பதால் பதிவிடுகிறேன்.
Peace begins with Justice.
ஒரு ஏழை பால் வியாபாரி தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டதால், கிராமத்தினர் அனைவரும் வந்து அந்த இரண்டுபேருக்கும் சொத்தை சமமாக பிரித்து கொடுத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு பசு மாட்டை எப்படி பிரித்து கொடுப்பது என்று பிரச்சனை வந்தது. யாருக்கும் வழி தெரியவில்லை. கடைசியாக பசு மாட்டின் முன் பகுதி தம்பிக்கும் பின் பகுதி அண்ணனுக்கும் என்று முடிவு செய்தார்கள்.
பசியால் அந்த பசு மாடு கத்தும் போதெல்லாம்.... முன் பகுதியை சொந்தம்கொண்டாடிய தம்பி அதற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் இருந்தான். பின் பகுதியை சொந்தம்கொண்டாடிய அண்ணனோ மேனி நோகாமல் பால் கறந்து ஜாலியாக இருந்தான். அதைப்பார்த்த தம்பிக்கு கோபம் வந்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை.
அண்ணனும் இந்த பிரச்சனைக்கு நியாயமான வழியை சிந்திக்காததால் கோபமடைந்த தம்பி அந்த பசு மாட்டுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். அப்புறம் என்ன..... அண்ணன் பால் கறக்க போனால் பெரும் உதை தான் கிடைத்தது.
வேறு வழியில்லாததால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் அண்ணன் பால் கறந்து கொள்ளலாம், தம்பி சாப்பாடு போடவேண்டும் என்றும், அடுத்த வாரம் தம்பி பால் கறந்து கொள்ள அண்ணன் சாப்பாடு போட வேண்டும் என்று நியாயமாக ஒரு தீர்ப்பை தேர்ந்தெடுக்க இருவருள்ளும் அமைதி திரும்பியது.
நல்லாயிருந்தாலும் சொல்லுங்க... 'இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்குன்னு' நினைத்தாலும் சொல்லுங்க. சொல்லைன்னா இது மாதிரி கொடுமைகள் தொடரும்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
14 comments:
ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி]]
நல்ல தாய் சொன்னீர்கள் நல்லதாய்.
வாங்க ஜமால். எதோ நீங்க ஒருத்தராவது ஒத்துகிட்டீங்களே :) ரெம்ப நன்றி.
அன்பு குந்தவைக்கு
நன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்
அன்பு குந்தவைக்கு
நன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்
priyangaludan priya
//அன்பு குந்தவைக்கு
நன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்
வாங்க பிரியா. கண்டிப்பா அடுத்த பதிவை உபயோகமா எழுதுறேன்.
//ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி?).//
nam kulandaigalidam naam karka vendiyathu eeraalam
Welcome Kundhavai!
//ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி]]
//Well said.
//nam kulandaigalidam naam karka vendiyathu eeraalam
கண்டிப்பா கார்த்திக். அம்மா, அப்பா சொல்லித்தந்ததும் இப்ப தான் புரிய கூட ஆரம்பிக்கும்.
//Welcome Kundhavai!
வந்துட்டேன் தீபா.
வரும் பதிவுகளில் நான் புரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முயர்ச்சிசெய்கிறேன் .
வாங்க குந்தவை. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
அன்பின் குந்தவைக்கு,
ரொம்ப நல்லாருக்குமா..
அருமையான வலை பதிவு!!
இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க.. படிக்க வேண்டிய நிலையில தான் இன்னும் நிறைய பேரிருக்கிறோம்.
உங்களின் தாய்மையான எழுத்துக்களால் வக்கிர புத்திகள் தெளியட்டும் குந்தவை.
பாராட்டிற்குரிய பணி செய்கிறீர்கள், இனிதே தொடருங்கள்!!
Your story is supper.
அன்பு குந்தவைக்கு
நானும் அம்மாக்களின் வலைபூக்களில் எழுத நினைக்கிறேன் .ஆனால் தேவை இல்லாத Anonymous said...
போன்ற கமெண்ட்ஸ் தான் கவலையை தருகிறது .,
இதை நீக்க வழியே இல்லையா ?
கவலையுடன் பிரியா
Post a Comment