Tuesday, May 11, 2010

தயிர் செய்த மாயம்.

கண்மணி ஒரே குஷியாக இருந்தாள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து யாராவது வந்து இஷ்டம்போல் சாக்லேட் கொடுத்தது தான் சமாச்சாரம். அவர்கள் முன்னால் "நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்" என்று அலம்பல் பண்ணி விட்டு... அவர்கள் சென்ற பின்னால் "எனக்குத்தான் தந்தார்கள் " என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.

எத்தனை தடவை சொன்னாலும்....தெரிந்தும் செய்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன். தினமும் சாப்பிடுகிற சாப்பாடு எல்லாம் ஒதுக்கிவைத்தாள்.

அடுத்த நாள் , ஒரு பிறந்த நாள் விழாவுக்கு ரெம்ப சந்தோஷமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான்... வயற்றிலிருந்து விபரீதம் ஆரம்பித்தது.சாக்லேட்டின் சாகசமா அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை ... வயிற்றிலிருந்து வந்த சுனாமி wash Basinனில் சங்கமிக்க ... சோர்வாக அமர்ந்தாள். தொடர்ந்து மூன்று தடவை வாந்தி வந்ததால் எங்கும் போகமுடியாமல் படு சோகமாகவும், சோர்வாகவும் இருந்தவளை பார்க்க பாவாமாயிருந்தது.

"இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா" என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்.

"சரியாய் போய்விடும்மா" என்று சமாதானப்படுத்திவிட்டு.. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மருத்துவமனைக்கு செல்லவும் பயமாக இருந்தது. ஒரு நாள் கைவைத்தியத்தில் சரியாக வில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் என்று முடிவெடுத்தேன்.

இருக்கவே இருக்கிறது தயிர்.

1. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

3. வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

4. தயிரில் உள்ள புரதச்சத்து சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மையுடையது.

இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு ...சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று...

காலையில்... தயிர் இட்லி...

மதியம் தயிர் சாதம்....

மாலை தயிர்...

இரவும் தயிர் இட்லி

என்று ஒரு நாள் முழுவதும் தயிர் விரதம் இருக்க... வயிறு சுத்தமானது...

முக்கியமான குறிப்பு : தயிருடன் சிறிது உப்பு சேர்க்கலாம், அனால் சீனியை சேர்த்துவிடாதிர்கள் .. அதனுடைய முக்கிய பலனே கிடைக்காமல் போய்விடும் .

இப்போதெல்லாம் நிஜமாகவே அவளாக சாக்லேட், junk food எல்லாம் அளவோடு நிறுத்தி கொள்வாள்.(எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை).

14 comments:

துளசி கோபால் said...

super!!!!!

துளசி கோபால் said...

super!!!!

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய் தயிர் சேர்த்து செஞ்ச உணவு பண்டங்கள் நல்லதுன்னு தெளிவா சொல்லுறீங்களே! - எங்க நிறைய தயிர் சாப்பிட்டா ஒல்லியா இருக்கிற நான் ரொம்ப குண்டாகிடுவேனோன்னு இதுநாள் வரைக்கும் டெரரால்ல நினைச்சுக்கிட்டிருந்தேன் ! :)

kunthavai said...

உங்கள் super க்கு ரெம்ப நன்றி துளசி அக்கா.

kunthavai said...

//ஹய்ய்ய்ய் தயிர் சேர்த்து செஞ்ச உணவு பண்டங்கள் நல்லதுன்னு தெளிவா சொல்லுறீங்களே!

அப்ப தெளிவாத்தான் சொல்லியிருக்கேன். :)

//எங்க நிறைய தயிர் சாப்பிட்டா ஒல்லியா இருக்கிற நான் ரொம்ப குண்டாகிடுவேனோன்னு இதுநாள் வரைக்கும் டெரரால்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்

நிஜமாவா? இல்ல காமெடி பண்ணுறீங்களா?

+Ve Anthony Muthu said...

மிக உபயோகமான பதிவு. தயிரில் இவ்வளவு நன்மைகளா? மிக்க நன்றி!

priya.r said...

ஹாய் குந்தவை!
நான் தயிர் பத்தி படித்ததை இங்கும் சொல்லுட்டுமா!

இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் 'அழகு வைட்டமின்' என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும், பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.

பூப்படையத் தாமதம், மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு நோய்களே மிகவும் குறைவு. காரணம், காலையில் தயிர் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்பு குறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். மிஸி ரொட்டி என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.

தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.

கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது, தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் கண்டுபிடித்தார்.

மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம், இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.

கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.

தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும், பாஸ்பரஸும்தான்.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் எளி தாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது


சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்.

Ellam net il padithathu than!

இப்படிக்கு
பாசமுடன் பிரியா

goma said...

தயிர் ,நம் உயிர் காக்கும்.
என்றறிந்தேன்

kunthavai said...

வாங்க முத்து சார். இன்னும் நிறையவே நன்மைகள் நான் கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன்.

kunthavai said...

வாங்க பிரியா... பேசாமா நீங்க ஒரு தனி பதிவே எழுதியிருக்கலாம். அப்பப்பா எவ்வளவு தகவல்கள்!.. வீட்டுக்கு போய் நானும் பேசாம தயிர் விரதம் இருந்துவிடப்போகிறேன்.

kunthavai said...

வாங்க கோமா... ரெம்ப சந்தோஷம் :)

வீணா said...

Very Usefull

குந்தவை said...

Thanks Veena.

priya.r said...

//வீட்டுக்கு போய் நானும் பேசாம தயிர் விரதம் இருந்துவிடப்போகிறேன்.
.
.
.
.
விரதம் ஏற்படுத்திய விளைவுகளை அறிய ஆவல் !

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger