Friday, May 28, 2010

BPA என்றால் என்ன?

BPA அல்லது Bisphenol-A, polycarbonate வகைப் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றது. BPA பிளாஸ்டிக்குகளை கடினப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. எமது அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் எத்தனையோ பொருட்களில் BPA கலந்திருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்கள், குழந்தைகளுக்கு பால்/நீர் கொடுக்கப் பயன்படுத்தும் போத்தல்கள், CDs, DVDs, dental fillings, food cans இப்படிப் பல வகையான பொருட்கள் செய்யும் போது BPA பயன்படுத்தப்படுகின்றது. அநேகமாக நாம் பாவிக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் அடியில் ஒரு முக்கோணத்தினுள் 1‍‍ 7 வரையுள்ள எண்களில் ஏதாவதொரு எண் இருக்கும். அவ்வெண் அப்பாத்திரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகையைக் குறிக்கும். அவ்வாறு 3, 7 இலக்கங்களைக் கொண்ட அல்லது PC (polycarbonate) எனக் குறிப்பிட்டிருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் BPA ஜக் கொண்டுள்ளது.

BPA ஒரு Estrogen mimic. Endocrine disrupter என்றும் கூறுவார்கள். அதாவது BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen என்ற hormone இன் இரசாயனக் கட்டமைப்பை ஒத்திருக்கும். அநேகமானவர்கள் estrogen ஜப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். Estrogen ஜ ஒரு female hormone என்று கூடச் சொல்வார்கள். ஆண்களின் உடலிலும் சிறிதளவு இருந்தாலும் பெண்களின் உடலிலேயே அதனளவு கூடுதலாக இருக்கும். But in a cyclical fashion during menstrual cycle. பெண்கள் பூப்படையும் காலங்களில் மார்பக விருத்தி மற்றும் secondary sexual characteristics (இனப்பெருக்கத்தொகுதியல்லாத பெண்களின் உடலில் ஏற்படும் மற்றைய உடலில் ஏற்படும் மற்றைய மாற்றங்கள்) விருத்தியடைய estrogen மிகவும் அத்தியாவசியமானது. அத்தோடு ஒரு பிள்ளையை விருத்தியடையச்செய்ய கருப்பையைத் தயார்செய்யவும் அவசியமானது.

இப்பிளாஸ்டிக்குகளைச் சூடக்கும் போதும் மீண்டும் மீண்டும் சுடுநீரில் கழுவும் போதும் இவற்றிலிருந்து BPA வெளியேறும். அதனால் நாம் ஒவ்வொரு முறையும் இப்பிளாஸ்டிக்குகளில் உணவைச் சூடக்கும் போதும் BPA பாத்திரங்களில் இருந்து உணவுடன் சேர்வதால் எமக்குத் தெரியாமலே நாம் BPA ஜ உட்கொள்கின்றோம்.

அதனால் என்ன பிரச்சனை?

BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen னுடையதை ஒத்திருப்பதால் எமது உடலிற்கு இரண்டிற்குமிடையே வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதனால் BPA எமது உடலில் சேரும் போதெல்லாம், அது உடலில் estrogen னால் இயக்கிவிக்கப்படும் செயல்களெல்லவற்றையும் பாதிக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம்.

இப்போது பல நூற்றுக்கும் மேலான ஆய்வுகளின் முடிவுகள் BPA ஆல் ஏற்படக்கூடிய‌ பாரதூரமான விளைவுகளை நிரூபித்திருக்கின்றன. அவற்றில் மிகச்சில விளைவுகளே இவை.

பெண்களில் மார்பகப் புற்றுநோய்
ஆண்களில் prostate புற்றுநோய்
பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகலாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல்
ஆண்களில் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல்
பிள்ளைகளில் behavioural problems such as ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)

மேலதிக தகவல்களிற்கு இத்தளத்திற்குச் செல்லுங்கள் (http://www.ourstolenfuture.org/).


இதனால் குழந்தைகளும் மிகவும் பாதிப்பிற்குள்ளாவார்கள். எப்படி? குழந்தைகளுக்கு பாலோ நீரோ இப்போது அநேகமானோர் பிளாஸ்டிக் போத்தல்களிலேயே கொடுக்கின்றார்கள். அப்பாலோ/நீரோ அநேகமாக சுடவைக்கப்பட்டே கொடுக்கப்படும். குழந்தைகளுக்காப் பாவிக்கப்படும் 95% ஆன‌ போத்தல்களில் BPA இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு இப்போத்தல்களைச் சூடாக்கும் போது மிகக்கூடுதலானளவு BPA வேளியேறுகின்றதென்றும் கண்டுபிடித்துள்ளனர்.குழந்தைகளின் எல்லா அங்கங்களும் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டிருப்பதால் அவர்கள் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்தப் பாதிப்பின் விளைவு அநேகமாக அக்குழந்தை வளர்ந்த‌ பின்பே தெரியும். அந்நேரம் நாம் BPA ஜ ஒரு போதும் சந்தேகிக்க மாட்டோம்.

இதையும் விட நாம் எமது ஆய்வுகூடத்திலேயே இன்னொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளோம். அதாவது ஒரு தாய் கருத்தரித்து இருக்கும் காலங்களில் அவளின் உடலில் சேரும் BPA மிகச்சுலபமாக placenta வினூடு பிள்ளையைச் சென்றடையும். அதனால் நாம் கவனமாக இல்லாவிடில் நம் பிள்ளைகளை அவர்கள் பிறக்கு முன்னே BPA க்கு expose பண்ணுகின்றோம்.

இவ்வாறான பல ஆய்வுகளின் முடிவுகளைக் கண்டு கனடா போனவருடம் குழந்தைகளிற்குப் பால் கொடுக்கும் போத்தல்களின் உற்பத்தியில் BPA சேர்க்கப்படுவதைத்த் தடை செய்துள்ளது. இவ்வருடம் அமெரிக்காவில் மூன்று states இலும் Denmark இலும் இத்தடைகள் கொண்டுவரப் பட்டுள்ளன.

எம் குழந்தைகளுக்கும் எமக்கும் BPA exposure ஜக் குறைக்க என்ன செய்யலாம்? கண்ணாடிப் போத்தல்களே சிறந்த வழி. இப்போது BPA-free baby bottles உம் வரத் தொடங்கிவிட்டன. எமக்கு உணவு போட்டுவைக்கவோ வேலைக்குக் கொண்டு செல்லவோ கண்ணாடிப் பாத்திரங்களையோ அல்லது அலுமினியப் பாத்திரங்களையோ பாவியுங்கள். அத்தோடு 3, 7 எண்களுடைய பாத்திரங்களைத் தவிருங்கள். பிளாஸ்டிக் பாத்திரங்களை long-term பாவனைக்குப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் என்ன வகையான பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன எனத் தெரிந்து வாங்குங்கள். ஏனெனில் குழந்தைகள் இயல்பாக அவற்றை வாயில் வைக்கும் போது எமக்குத்தெரியாமல் எத்தனையோ பாதிக்கக்கூடிய chemicals குழந்தையின் உடலில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.

2 comments:

kunthavai said...

Anna.. very informative and usefull article.

Anna said...

Thanks Kunthavai!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger