Rabbit's Happy day
பிரிவு : ஆங்கிலப் புத்தகம்
பரிந்துரைக்கப் பட்ட வயது : நான்கு-ஏழு வயதுவரை
மூன்று - ஐந்து வயதினரும் உபயோகிக்கலாம்.
”எங்க அம்மா பிசியா இருக்காங்க, நான் என்ன பண்றது, என்கூட விளையாட யார் இருக்காங்க” என்று முயல்குட்டி சொல்லவதாக ஆரம்பிக்கும் இக்கதை, பப்புவின் சூழலை பிரதிபலிப்பதாலேயோ என்னவோ, இந்தப் புத்தகம் பப்புவிற்கு பிடித்தமானது!
கையில் பந்துடன் கேரட் செடிகளுக்கு மத்தியில் குளக்கரையில் அமர்ந்திருக்கும் முயல்குட்டி, விளையாட யாருமின்றி இருப்பதாக் நினைக்கும் வேளையில், எதிர்பாராத வண்ணம் சந்திக்கிறது பல முயல்குட்டிகளை! அதன் மீதி பொழுது எப்படி போகிறது
என்பது தான் கதை!
ஆனால், அந்த முயல்குட்டிகள் தங்களை எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்கின்றன தெரியுமா, “we are your little brothers and sisters". நாங்கள் உன் குட்டிச்சகோதரர்கள் என்றுக் குதித்தோடி வருகின்றன இரு குட்டிகள். முயல் இப்போது சொல்லிக் கொள்ளும், மூன்று பேர்கள் இருக்கிறோம் இப்போது! திடீரென முளைக்கின்றன, இரு குட்டிச்சகோதரிகள். இப்போது முயல் சொல்லிக்கொள்ளும், மொத்தம் ஐந்து பேரென! இப்படியாக, கால்பந்து விளையாட ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பேராக மொத்தம் பத்து முயல் குட்டிகள் எப்படி சேர்கின்றன என்பதுதான் மொத்தக் கதையும்!
ஒருவகையில், எண்களை அறிமுகப் படுத்த உதவி செய்வதோடு, எண்ணவும் அதாவது கூட்டலை அறிமுகப்படுத்தலாம், மிக எளிய முறையில்!
சுவாரசியமான் சம்பவங்களோ, அல்லது சவாலானக் காரியங்களோ அல்லது செய்தி(moral) - இப்படியான ஒன்றை எதிர்பார்ப்பீர்களானால் அது கிடையாது. தூங்கப் போவதற்கு முன் உங்கள் 4 வயது குட்டிக்கு சொல்ல ஏற்றக் கதை..சிறிய கதை..மகிழ்ச்சியும், இதமான நினைவுகளுடனுமாக முடியும் கதை! கூடுதலாக, இது ஜொலிக்கும் தாளாலானது, குட்டிகள் விரும்பும் வண்ணம்!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
7 comments:
//ஒருவகையில், எண்களை அறிமுகப் படுத்த உதவி செய்வதோடு, எண்ணவும் அதாவது கூட்டலை அறிமுகப்படுத்தலாம், மிக எளிய முறையில்!//
ஓ! நல்லது... :)
நல்ல அறிமுகம்
/*சுவாரசியமான் சம்பவங்களோ, அல்லது சவாலானக் காரியங்களோ அல்லது செய்தி(moral) - இப்படியான ஒன்றை எதிர்பார்ப்பீர்களானால் அது கிடையாது. */
பல சமயங்களில் குட்டீஸ் இவை இல்லாத இது போன்ற சுவாரஸ்யங்களையே விரும்புவார்கள். நல்ல அறிமுகம்.
உபயோகமான பதிவு
மூன்றாம் வயதில் எண்களின் கூட்டலை அறிமுகப் படூத்த ஒரு சிறந்த புத்தகம்... :)
மூன்றாம் வயதில் எண்களின் கூட்டலை அறிமுகப் படூத்த ஒரு சிறந்த புத்தகம்... :)
ஆரம்ப கணிதம் கற்க அருமையான பதிவு, சந்தனமுல்லை!
'Abiyoyo' என்ற தென் ஆப்பிரிக்க புத்தகம் குழந்தைகளை மிகவும் கவரும் புத்தகம். சிறிய பாடல் வரியைக் கொண்டது. அதை மெதுவாகவும் வேகமாகவும் பாடும் வகையில் இருக்கும். தாலாட்டைப் போல் தூங்கும் நேரத்தில் பயன்படுத்தலாம்.
Post a Comment