மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!
பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்! :-)
இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும். )
அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)
1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்
2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்
3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.
4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!
குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!
என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
7 comments:
நல்ல யோசனை. வாழ்த்துக்கள்
கண்டிப்பாய் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் முல்லை. மடல் கிடைத்து மடலும் அனுப்பி விட்டேன்.
அடுத்த ஸ்டேஜ் பசங்களையும் கோத்துவிடலாமே. ஆஷிஷ் சண்டைக்கு வர்றாப்ல :))
11 முதல் 16 வயசுன்னு வெச்சுக்கலாமா?
ஹ்ஹிஹி நான் சேர எதுனா வழி இருக்கா?
2-4 வயதினர் யாரும் இருந்தால் தெரிவியுங்கள். க்விக்! :-)
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்
Post a Comment