Monday, June 14, 2010

கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

"அம்மா, நாளைக்கு டிக்டேஷன். சொல்லிக் கொடும்மா", என்று குட்டிப்பெண் சொன்னவுடன், பொறுமையாக புரிதலுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெருமையாக ஆரம்பித்தேன்.

முதலில் ஒரு முறை வார்த்தைகளைப் படித்தோம். இனி மனப்பாடம் ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். "lip" சொல்லு என்றேன்.
C,A,R என்று பதில் வந்தது.
"இல்லடா, lip "ல்" எது மாதிரி சத்தம் வருது?"
"ல...L" என்றாள்
"வெரி குட். இப்ப lip "ப்" எப்படி முடியற சத்தம் வருது?
"ப ... P" என்றாள்
"ம்.. இப்ப சொல்லு lip என்ன ஸ்பெல்லிங்?"
"L I P"
"குட்... ", இன்னும் சில வார்த்தைகள் படித்த பின்..."Lip என்ன ஸ்பெல்லிங்?" என்றேன்
"H A S"

நான் சற்று நேரம் என் பெருமித உணர்வு குன்ற வெறித்து பார்த்தேன். பெரியவள் உதவிக்கு வந்தாள். "அம்மா, அவளுக்கு அப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க..., இங்க பாருடா செல்லம் உதடு வரைந்து) இது என்ன?"
"Lip"
"(கார் வரைந்து) இது என்ன)
"Car"
"ஸ்பெல்லிங் சொல்லுங்க..."
C A R

... பாடம் அழகாகப் போய்க்கொண்டிருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முறையைப் புரிந்து கொள்ளாது நான் என் மூக்கை நுழைத்தது தவறு தானே!!! கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்... முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதன் பின் புது முறைகளைப் புகுத்த...

7 comments:

pudugaithendral said...

முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதன் பின் புது முறைகளைப் புகுத்த...//

நாம வீட்டில் சொல்லிக்கொடுப்பதில் இது ரொம்ப முக்கியம். அழகான பகிர்வு

குந்தவை said...

//நான் சற்று நேரம் என் பெருமித உணர்வு குன்ற வெறித்து பார்த்தேன்.

ha...ha...

//கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்... முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து

Good post.Thanks for sharing.

goma said...

நாம் கற்றுக் கொள்ள வேண்டியதே நிறைய இருக்கும் போலிருக்கிறதே

goma said...

என்ன இருந்தாலும் அந்தக் கால முத்து சிஸ்டத்தில் கற்ற கணக்கு இன்னும் துல்லியமாய் மனதில் நிற்கிறது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் அப்ரோச்.... உங்க பெரிய பொண்ணு செம சமத்து போல...

முனியாண்டி பெ. said...

இதை படித்தபோது 19 அடுத்து 110 எழுதிய குழந்தை நினைவுக்கு வருகிறது.


http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

Pattu & Kuttu said...

Ture... TRUE..

par appa vandu taipu taipu shelithra. . is my KG kids word...

VS Balajee

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger