Thursday, August 4, 2011

அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!

பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!


குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!

அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....

ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...

இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...

ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

13 comments:

Anna said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆகாயநதி.

"ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான்."

Cool!. உங்கள் மகனிற்கு எத்தனை வயது இப்போ? எப்ப எழுதக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினனீங்க? என் மகனிற்கு இன்னும் இரு வாரங்களில் மூன்று வயதாகப் போகிறது. தமிழ் கதைப்பான். புத்தகங்கால் வாசித்தும் காட்டுவோம். பல சிறுவர் பாட்டுகளும் கேட்டு பார்க்கிறவன். எப்படியாவது நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். நன்றி.

ஆகாய நதி said...

நன்றி! அவனுக்கு தமிழில் உயிர் எழுத்துக்களை அடையாளம் கண்டு சொல்ல முடியும்.. மற்றபடி சரளமாக தமிழிலும்,ஆங்கிலத்திலும் மழலையுடன் பேசுவான் :)

அவனுக்கு வயது மூன்று வருடங்கள்,மூன்று வாரங்கள் ஆகிறது... குழந்தைகளை அவர்களாகவே எழுத விரும்பி வரும்னடி நாம் ஊக்குவித்தாலே போதும் தற்சமயம்... எழுதக் கட்டாயப்படுத்துவது தவறு... அவனே விரும்பி ஒரு சில எழுத்துக்களை எழுதுகிறான்... குழந்தைப்பாடல்கள் மற்றும் கதைகள் தமிழிலும் கேட்கிறான்... நாங்கள் வீட்டில் பேசுவதும் தமிழ் ஆகையால் தமிழ் பற்றி அவனிடத்தில் எனக்கு தற்சமயம் எந்தக் கவலையும் இல்லை!

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

அம்பாளடியாள் said...

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

வணக்கம் சகோ .பொழிலனின் பேச்சும் உங்கள் கருத்தும் வரவேற்கத் தக்க
ஒன்று .குழந்தைகள் எப்போதும் பெற்றோரையே முன்னோடியாகப் பார்ப்பார்கள் .
அந்த வகையில் நீங்கள் கொடுக்கும் முயற்சி நிட்சயம் சிறந்த பயனைத் தரும் .என் பிள்ளைகளும் வேற்று மொழியுடன் மிக அழகாக தமிழில் உரையாடுவார்கள் .உங்களைப் போன்றே வெளிநாடுகளில் உள்ள ஏனைய உறவுகளும் தாய் மொழியாம்
எம் தமிழை வீட்டில் பிள்ளைகளுடன் உரையாட வேண்டும் .கற்பிக்க வேண்டும் அப்போதுதான் எம் கனவுகளும் நினைவாகும் .மிக்க நன்றி உங்கள் ஊக்குவிப்பிற்கும்
அருமையான இப் பகிர்வுக்கும் ........

rishvan said...

எந்த நாட்டிற்க்கு சென்றாலும் நம் மொழியை நாம் பேசுவதே பெரிய விடயம் .... கற்பது.... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

இராஜராஜேஸ்வரி said...

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது..

வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...
மகிழ்ச்சி தரும் தகவல் ..

Ranjani Narayanan said...

வலைச்சரத்தில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது உங்கள் வலைத்தளம். பாராட்டுக்கள்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2013/01/6.html

வெளிநாட்டில் இருந்தாலும் நாம் குழந்தைகளுடன் தமிழில் பேசினால் அவர்கள் நம் மொழியைக் கற்பார்கள்.
சின்னஞ்சிறு வயதில் நிறைய மொழி கற்கும் ஆற்றல் மிகுந்திருக்கும். பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது இதில்.

நேரம் இருக்கும்போது என் வலைதலங்களுக்கும் வாருங்கள்.

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

இராஜராஜேஸ்வரி said...

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது..

மகிழ்ச்சி தந்த வரிகள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/01/6.html

Sobia Anton said...

உங்கள் ஆக்கம் படித்தேன். மேலைத்தேயங்களில் நாம் காணும் சிறந்த பிள்ளை வளர்ப்பு நுணுக்கங்கள் தாய் நாட்டிலும் வளர வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் உண்டு.

டிபிஆர்.ஜோசப் said...

பொழிலன்: அழகான பேருங்க. அமெரிக்காவில அப்படி. இங்க? எல்லா பிள்ளைகளையும் ஒரு சின்ன ரூம்ல வச்சி அடச்சி... ஒன்னு ரெண்டு பேசாம இருந்தாலும் மத்த அழற பசங்கள பாத்துட்டு இவங்களு அழ ஆரம்பிச்சிருவாங்க. மிஸ்களுக்கு பொறுமையே இருக்காது. முதல் நாளே பிள்ளைங்க அழாம இருக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா? இது இங்க ஸ்கூல் நடத்தவறவங்களுக்கு எங்க புரியுது:(

தேன் நிலா said...

என்னவொரு தமிழ் பற்று.. தமிழைப் தங்களது குழந்தையும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..

பகிர்வினிற்கு மிக்க நன்றி...!!!

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

தேன் நிலா said...

"பொழிலன்" பெயரே மகிழ்வைப் பொழிகிறதே..!

தேசம் விட்டு தேசம் சென்றாலும் தங்களின் தமிழ்பற்று எம்மை வியக்க வைக்கிறது..

தொடர்ந்து பிள்ளைகளுக்கு தமிழூட்டூங்கள்..

நன்றி தாயே..!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger