Thursday, January 21, 2010

பரீட்சைக்கு நேரமாச்சு...........2

இது குழந்தைகளுக்கு...........

  1. நாளைக்கு நாளைக்குன்னு பாடங்களைச் சேர்த்து வைக்காதீங்க.
  2. அன்றைக்குரிய பாடங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும் திருப்பி ஒருதடவை வாசித்துவிடுங்கள்
  3. பரீட்சை வரப் போகிறதேன்னு பயப்படாமல் பயம் எதனால் வருகிறது.....படிக்காததினால்தான் என்பதைப் புரிந்து கொண்டு படிக்க ஆரம்பிக்கலாம்..
  4. எளிதான பாடங்களை சீக்கிரம் முடித்து விட்டுக் கடினமானவற்றை ஆரம்பியுங்கள்....முதலிலேயே கடினமானவற்றை ஆரம்பித்தால் ஐய்யோ இது தெரிலியே அது தெரிலியேன்னு பதட்டம் வரும்.
  5. படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.முந்தைய தடவை 60 வாங்கியிருந்தால் இந்த தடவை 70 வாங்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.போன தடவை ஃபெயிலாகியிருந்தால் இந்த முறை பாஸாக வேண்டும் என்று ஒரு குறைந்த பட்ச இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
  6. பரீட்சை நாட்களில் விளையாட்டு ,பாட்டு இப்படிப் பொழுது போக்கும்  விஷயங்களை அறவே  தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.இடையிடையே கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்
  7. பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் கண் விழித்துப் படித்துத் தூங்காமலிருப்பது கண்டிப்பாக கூடாது.
  8. பரீட்சைக்குக் கிளம்புவதற்கு முன் தினமே தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் காலை நேர ஆர்ப்பாட்டத்தைத் தவிர்க்கலாம்.
  9. பரீட்சைக்குச் செல்லும் முன் அது படிச்சாச்சா...இது படிச்சாச்சா...அப்படீன்னு கேட்பவர்கள் இருக்குமிடத்திலிருந்து விலகி நிற்கவும்.அது தன்னம்பிக்கையை அசைத்து விடும்.
  10. பரீட்சை எழுதி வந்தவுடன் "அதுக்கு விடையென்ன...இதெப்படி எழுதணும்னு.... கேட்டுத் தவறாக எழுதிய கேள்விகளுக்காக வருந்த  வேண்டாம்.இது அடுத்த பரீட்சைக்குப் படிக்கும் உற்சாகத்தைக் கெடுத்து விடும்.

11 comments:

நட்புடன் ஜமால் said...

10 வருடம் லேட்டா வந்துடுச்சி இந்த பதிவு

ஹூ ஹூம்

Jaleela Kamal said...

//10 வருடம் லேட்டா வந்துடுச்சி இந்த பதிவு//

ha haa

nalla pathivu .

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/10 வருடம் லேட்டா வந்துடுச்சி இந்த பதிவு ஹூ ஹூம்/
அடடா!இது தெரியாமப் போச்சே!

+Ve Anthony Muthu said...

A very good post indeed.

Also very useful too...

ரிஷபன் said...

அட! அடுத்த ஜென்மத்துல யூஸ் பண்ணிக்கலாம் போலிருக்கே.. (வேற என்ன சொல்ல.. லேட்டாச்சுன்னு எழுதலாம்னா அதுக்கும் முந்திகிட்டாங்க)

அன்புடன் அருணா said...

நன்றி ஜலீலா!Antony,ரிஷபன்!

suvaiyaana suvai said...

nice tips!!!
//வருடம் லேட்டா வந்துடுச்சி இந்த பதிவு//
ha ha
//அட! அடுத்த ஜென்மத்துல யூஸ் பண்ணிக்கலாம் போலிருக்கே.. (வேற என்ன சொல்ல.. லேட்டாச்சுன்னு எழுதலாம்னா அதுக்கும் முந்திகிட்டாங்க//
super

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு மற்றும் ஜமால் சொன்னது :-)

Thenammai Lakshmanan said...

அம்மாப்பாக்கு மற்றும் குழந்தைக்கு ரெண்டுமே அருமை அருணா

நினைவுகளுடன் -நிகே- said...

பயனுள்ள பதிவு

ஆர்வா said...

மாணவர்களுக்கு உபயோகமான பதிவு

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger