இது அம்மாப்பாவுக்கு...........
- சும்மா சும்மா படி...படின்னு சொல்லாதீங்க.
- பரீட்சை என்பது ஒரு பயப்படும் விஷயம் என மனதில் பதிய வைக்காதீர்கள்.
- பரீட்சைக்காக படிப்பது என்றில்லாமல்.....விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புரிந்து கொள்வதற்காகப் படிக்கத் தூண்டுங்கள்
- .அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.
- முதல் ராங்கை விட்டுடாதே என்று பயமுறுத்தாதீர்கள்.
- 10 நாளில் பரீட்சை வருது .....நீ இப்படி விளையாடறேன்னு பரீட்சை பற்றி அச்சம் உண்டாக்காதீர்கள்.
- பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் படிக்க வைப்பதும் அதிகாலையில் எழுப்பி விடுவதும் கண்டிப்பாக கூடாது.
- பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள்.
- பரீட்சை எழுதி வந்தவுடன் "அதெப்படி எழுதினே...இதெப்படி எழுதினே....இதை ஏன் விட்டே"அப்படீன்னு கேட்டுக் கஷ்டப் படுத்த வேண்டாம்.
- இவ்வளவு நாள் படித்தது நினைவிலிருக்கிறதா..என்று அறிவதற்கு அல்ல பரீட்சை, படித்தது புரிந்திருக்கிறதா என அறிந்து கொள்ளத்தான் என்பதை உணர்த்துங்கள்
14 comments:
ரொம்ப சரி,
பரிட்சை நேரத்தில் என்ன விளையாட்டுன்னு விளையாடக்கூட அனுப்பாமல் இருந்தால் மன அழுத்தம் அதிகமாகும்.
1 மணி நேரத்துக்கு 10 நிமிடமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.
விருப்பமான பாடல் கேட்க வைக்கலாம்.
முக்கியமா பரிட்சைக்கு போகும் முன் சாக்லேட் கொடுங்கப்பா. மூளை வேலை செய்ய அது உதவும்.
அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.]]
ரொம்ப ம்ப ப ...
முக்கியம் ...
சரியாத்தான் சொல்லியிருக்கிங்க அருணா...
நம்ம குழந்தைங்க கிட்ட பரீட்சை பத்தி பயம் ஏற்படுத்தக் கூடாதுங்கறதைப் போலவே பரீட்சையோட இம்பார்டன்சையும் போற போக்குல சொல்லி வச்சிகிட்ட பெட்டர்னும் தோணுது. ஏன்னா ரொம்பக் கேசுவலா எல்லா நாட்களையும் போல அன்னைக்கும் இருந்துடக் கூடாதே.நான் சொல்றது சிக்ஸ்த் க்கு மேல பெரிய கிளாஸ் படிக்கற பசங்களுக்குன்னு சொன்னா பொருந்தும்,ஏன்னா வருஷம் முழுக்க அவுட்ஸ்டேன்டிங் வாங்கினாலும் பரீட்சைக்கான அந்த மூணு மணி நேரம் வருஷம் முழுக்க படிச்சதை அருமையா வெளிக் கொண்டு வர முடியாமப் போயிடுச்சுனா நிச்சயமா அது அந்தக் குழந்தைகளோட மனநிலையை பாதிக்கும் ,அடுத்தடுத்த வருசங்களில் படிப்பில் ஒரு தொய்வு வரும். கவனிக்காம விட்டா நல்லாப் படிக்கிற பசங்க கூட வருஷம் கடக்க கடக்க சுமார் நிலைக்கு போக வாய்ப்பிருக்கு.
பரீட்சை பயம் இருக்கக் கூடாது ,பேரன்ட்ஸ் அப்படிப்பட்ட பயத்தை ஏற்படுத்தவும் கூடாது...ஆனா பரீட்சைக்கான முக்கியத்துவத்தை மட்டும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிப் புரிய வைக்கலாம்.
"பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள்"
True!!!
// பரீட்சை எழுதி வந்தவுடன் "அதெப்படி எழுதினே...இதெப்படி எழுதினே....இதை ஏன் விட்டே"அப்படீன்னு கேட்டுக் கஷ்டப் படுத்த வேண்டாம்.//சரியாக சொன்னிங்க. முடிந்த பரிட்ச்சையினை பற்றி கேட்காமல் அடுத்த பாடத்தில் குழந்தைக்கு எந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணமுடியுமோ பண்ணுங்கள்
மிக நல்ல பதிவு!
என்ன டா ஒரே don'ts ஆ இருக்கேன்னு நெனச்சேன். ஆனா எதைச் செய்யாம இருக்கணும்னு தான் நம்ம நல்லாத் தெரிஞ்சுக்கணும்.
//பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள். //
LOL!! :-))
ரொம்ப நல்ல பகிர்வு :-)
என் பொண்ணு படிக்க ஆரமிக்க இன்னும் வருஷம் இருக்கு, எப்படியும் மீள்பதிவு வரும் போது தான் எனக்கு பயன்படும் :-)
நல்ல கருத்துக்கள் அருணா. நன்றி, ஆனாலும்
//பரீட்சைக்கான முக்கியத்துவத்தை மட்டும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிப் புரிய வைக்கலாம்.//
கார்த்திகாவின் கருத்தும் என் கருத்தோடு ஒத்துப்போகிறது.
கரெக்டா சொன்னீங்க..
நன்றி தென்றல்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி KarthigaVasudevan
நன்றி Anonymous
நன்றி Mrs.Faizakader
நன்றி Deepa
நன்றி சிங்கக்குட்டி
நன்றி ஹுஸைனம்மா
நன்றி அமுதா
ஹ்ம். இங்கயும் படிப்பு சம்மந்தமாதானா?
அம்மாவா எதாச்சும் சொல்லுதியளான்னு பாக்க வந்தா...?
எப்படியோ...?
Well done & well said Teacher.
;-)
பெற்றோருக்குத் தேவையான அருமையான கருத்துக்கள். பரீட்சை வர இன்னும் 2மாதங்களே பாக்கி ....இப்பொழுதே பெற்றோரை ஆசுவாசப் படுத்தும் பணியைத் தொடங்கி விட்டீர்கள்
நன்றி அண்ணாமலையான்,Antony,கோமா!
miga arumai... mukkima mathavangakooda compare pannakoodathu
Post a Comment