அம்புலிமாமா பழைய பதிப்புகளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.
இது என் ப்ளாகில் எழுதியது
Tuesday, February 22, 2011
அம்புலிமாமா
Posted by Dhiyana at 11:20 AM 1 comments
Labels: தீஷு, புத்தகங்கள், புத்தகங்கள்
Wednesday, August 19, 2009
The happy Hedgehog - புத்தகம்
The happy Hedgehog
வயது : 5 - 12 வயதுவரை
மொழி : ஆங்கிலம்
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தேர்வு செய்தேன், எந்தவொரு அபிப்ராயமுமில்லாமல். சமீப நாட்களாக பப்பு முள்ளம்பன்றி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அங்கிருந்த டீடெய்ல் மட்டும் பார்த்து வாங்கிவிட்டேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
மிக்கோ என்பது அந்த முள்ளம்பன்றியின் பெயர். பூச்சி நண்பர்களும், நறுமணமுள்ள பூக்கள் நிரம்பியதுமான ஒரு அழகான தோட்டத்தில் வசித்து வந்தான். எல்லாச் செடிகளும் அவனுக்குப் பரிச்சயம். மூலிகைகளையுங்கூட அறிந்திருந்தான். மிக்கோவின் தாத்தா, இவனை இப்படியேவிட்டால் பகல் கனவு கண்டுக்கொண்டு எதையும் வாழ்வில் சாதிக்கமாட்டானென்று எண்ணினார். தோட்டத்தை விட்டு வெளியே சென்று மற்ற மிருகங்களைப் பார்த்து அவைகளைப் போல் சாமர்த்தியமாக, வேகமாக, பலமுள்ளவனாக இருப்பது எப்படியென்று கற்றுக்கொள் என்று அனுப்பிவிட்டார். வேகமாக ஓட பயிற்சியெடுக்கும் ஒரு ஆமை, புத்தகத்தை வைத்து மனப்பாடம் செய்யும் முயல், பாரமான கல்லைத் தூக்கி பயிற்சியெடுக்கும் கீரியை சந்திக்கிறான் மிக்கோ. ஆனால் இவர்களில் யாருமே அந்தந்த வேலையை செய்வதால் மகிழ்ச்சியடைவதில்லை என்று அறிந்துக்கொள்கிறான். தனக்கு அந்த தோட்டத்தில் வாழ்வதே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உணர்ந்து தோட்டத்திற்கு வந்துவிடுகிறான்.
இந்தக் கதை பப்புவின் வயதுக்கு அதிகம் என்றாலும் புத்தகத்தின் படங்களும்
சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியும் பப்புவிற்கு பிடித்திருந்தது. அடிக்கடி ரிப்பீட்டு செய்ய வேண்டும் இந்தக்கதையை. பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!
Posted by சந்தனமுல்லை at 9:57 PM 6 comments
Labels: சந்தனமுல்லை, புத்தகங்கள்
Tuesday, August 18, 2009
The mixed-up chameleon - புத்தகம்
The mixed-up chameleon - Eric Carle
வயது : 3-6
மொழி : ஆங்கிலம் & இந்தி
விலை : ரூ 175
எரிக்-இன் புத்தகங்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான், The very hungry caterpillar ஒன்றே போதும்! வழக்கம்போல எளிய கதை. தன் தோற்றத்தைக் குறித்தும், தனது சுவாரசியமற்ற வாழ்க்கையைக் குறித்தும் அதிருப்தியடைகிற ஒரு பச்சோந்தியே மெயின் கேரக்டர். தன்னால் நிறங்களை மாற்றிக்கொண்டு வாழ முடியுமென்று அறிந்திருக்கிறது. நாவை நீட்டி பூச்சிகளைப் பிடித்து உணவுண்கிறது. அதனால் பெரிதும் பயனில்லை என்று நினைக்கிறது.
ஒரு நாள் ஜூவிற்குச் செல்கிறது. அங்கு பல விலங்குகளைப் பார்க்கிறது. அந்த விலங்குகளின் உடலமைப்போல தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று எண்ணுகிறது. அப்படி எண்ணியதும் அது விருப்பப்படியே நடந்தும் விடுகிறது. ஃபெளமிங்கோவின் கால்களும், ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், நரியைப் போன்ற வாலும் கிடைக்கப் பெறுகிறது. இப்படி எல்லாமுமாக இருக்கும் நேரத்தில் ஒரு பூச்சி பறந்துச் செல்வதைப் பார்க்கிறது.மாற்றங்கொண்ட தோற்றத்தால் பச்சோந்தியால் பூச்சியைப் பிடிக்க இயலவில்லை. பூச்சியை பிடிக்க வேண்டுமானால் அது பழையத் தோற்றத்துக்கு திரும்ப வேண்டுமென்பதை அறிந்து பழைய பச்சோந்தியாக மாற விரும்புகிறது. அதன் விருப்பமும் நிறைவேறுகிறது.
வண்ணமிகு படங்களுடன், கொஞ்சமே கொஞ்சம் எழுத்துகள் இருக்கிற புத்தகங்களையே தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். அந்த வகையில், படங்களே இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம். பலவகையான விலங்குகளின் தனிச்சிறப்பம்சங்களை அழகாக விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் நாமாக, நமதுத் தனித்தன்மையுடன் இருப்பதன் அவசியத்தையும், அழகையும் சொல்லாமல் சொல்கிறது. மற்றுமொரு கலக்கலான புத்தகம் எரிக்கிடமிருந்து!
வெளிநாட்டு பதிப்பு - போர்டு புத்தகம் எழுநூறு ரூபாய்கள் வரை. ஆனால், இதன் இந்திய பதிப்பு கரடி டேல்ஸ் மற்றும் அமரசித்ர கதாவிலிருந்துக் கிடைக்கிறது, ரூ 175-க்கு. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கதையின் வரிகள்.
சென்னைவாசிகளுக்கு : பெசன்ட் நகரில் words&worth என்று ஒரு கடை இருக்கிறது. சிறிய கடைதான். மிககுறைந்த விலையில் நல்ல புத்தகங்கள்,இந்திய பதிப்பில் கிடைக்கிறது.
Words & Worth
2nd Avenue, Indira nagar,
Besant nagar,
chennai.
Posted by சந்தனமுல்லை at 9:03 PM 6 comments
Labels: சந்தனமுல்லை, புத்தகங்கள், புத்தகங்கள்
Tuesday, August 11, 2009
குழந்தைகளுக்கான கதைகள்
எல்லா குழந்தைகளுக்கும் கதை கேட்கும் ஆர்வம் உண்டு. பல நேரங்களில் நாம் நம் கற்பனையில் உதித்த கதைகள் சொன்னாலும், சில நேரங்களில் தெரிந்த கதைகளும் கை கொடுக்கத்தான் செய்கின்றன.
அவ்வகையில் முக்கியமான கதைகளும் புத்தகங்களும் கீழே உள்ள லிங்குகளில் உள்ளன,
1. http://www.mainlesson.com/displaybooksbytitle.php
2. http://www.mainlesson.com/displaystoriesbytitle.php
3. http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents
அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Posted by Dhiyana at 3:33 PM 3 comments
Labels: குழந்தைகளுக்கான கதைகள், தீஷு, புத்தகங்கள்