The happy Hedgehog
வயது : 5 - 12 வயதுவரை
மொழி : ஆங்கிலம்
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தேர்வு செய்தேன், எந்தவொரு அபிப்ராயமுமில்லாமல். சமீப நாட்களாக பப்பு முள்ளம்பன்றி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அங்கிருந்த டீடெய்ல் மட்டும் பார்த்து வாங்கிவிட்டேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
மிக்கோ என்பது அந்த முள்ளம்பன்றியின் பெயர். பூச்சி நண்பர்களும், நறுமணமுள்ள பூக்கள் நிரம்பியதுமான ஒரு அழகான தோட்டத்தில் வசித்து வந்தான். எல்லாச் செடிகளும் அவனுக்குப் பரிச்சயம். மூலிகைகளையுங்கூட அறிந்திருந்தான். மிக்கோவின் தாத்தா, இவனை இப்படியேவிட்டால் பகல் கனவு கண்டுக்கொண்டு எதையும் வாழ்வில் சாதிக்கமாட்டானென்று எண்ணினார். தோட்டத்தை விட்டு வெளியே சென்று மற்ற மிருகங்களைப் பார்த்து அவைகளைப் போல் சாமர்த்தியமாக, வேகமாக, பலமுள்ளவனாக இருப்பது எப்படியென்று கற்றுக்கொள் என்று அனுப்பிவிட்டார். வேகமாக ஓட பயிற்சியெடுக்கும் ஒரு ஆமை, புத்தகத்தை வைத்து மனப்பாடம் செய்யும் முயல், பாரமான கல்லைத் தூக்கி பயிற்சியெடுக்கும் கீரியை சந்திக்கிறான் மிக்கோ. ஆனால் இவர்களில் யாருமே அந்தந்த வேலையை செய்வதால் மகிழ்ச்சியடைவதில்லை என்று அறிந்துக்கொள்கிறான். தனக்கு அந்த தோட்டத்தில் வாழ்வதே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உணர்ந்து தோட்டத்திற்கு வந்துவிடுகிறான்.
இந்தக் கதை பப்புவின் வயதுக்கு அதிகம் என்றாலும் புத்தகத்தின் படங்களும்
சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியும் பப்புவிற்கு பிடித்திருந்தது. அடிக்கடி ரிப்பீட்டு செய்ய வேண்டும் இந்தக்கதையை. பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
ம் இப்பிடியெல்லாம் நான் என்னைக்கோ படிச்சிருந்தேன்னா இன்னிக்கு எப்புடி இருந்திருப்பேன் :( (படிப்புல டெவலப் ஆகியிருப்பேன் சொல்ல வந்தேன் பாஸ்!)
சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!?
-------------
Agreed!!
இனியதொரு பகிர்வு.
எங்க வீட்டு பாப்பாவிற்கும் ஒன்னு வாங்கிடவேண்டியதுதான்.
நல்ல பதிவு.
ம்.. நல்ல கதை..நமக்கே பாடமா இருக்கும் போல இருக்கே..
பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!
கண்டிப்பாக :)
Post a Comment