Sunday, August 2, 2009

பண்டிகை கொண்டாட்டங்களும் குழந்தைகளும்

இப்போதுள்ள காலகட்டத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாம் கொண்டாடுகிறோம்.அதுவும் அவசரம் அவசரமாக காலையில் குளித்து கடவுளை வழிபட்டு ஏதோ சாப்பிட்டு தொலைகாட்சி முன் உட்கார்ந்து விடுகிறோம். குழந்தைகளும் பண்டிகைகளை பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள் என்பது என் கருத்து.

பாட்டி தாத்தா இருந்தால் கதைகள் பாடல்கள் மூலம் குழந்தைகளின் அறிவுக்கு எட்டும் வகையில் சொல்லி தருவார்கள்.இப்போது நம்மில் நெறைய பேர் சில பல காரணங்களுகாக வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறோம்.நிலைமை இவ்வாறு இருக்க நாம்தான் நம் வழிபாட்டு முறைகள்,விரதங்கள், பண்டிகைகள் பற்றி விரிவாக குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்.

சின்ன பண்டிகைகள் மற்றும் விரதங்கள்(உதாரணம்: வரலக்ஷ்மி விரதம்,விநாயகர் சதுர்த்தி,பிரதோஷம்,ஏகாதேசி) பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் நமக்கே அவ்வளவு(நான் எல்லாரையும் சொல்லவில்லை) தெரியாத போது நம் குழந்தைகளுக்கு அவை பற்றி நாம் எவ்வாறு சொல்லி கொடுப்பது?

இதற்கு முதல் படி நம் வீட்டில் விரதங்கள், பண்டிகைகளை முறையாக கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.வீட்டு பெரியவர்களிடம் இவை பற்றி கேட்டறிந்து நம் குழந்தைகளுக்கும் புரியுமாறு எடுத்துரைத்து,அவர்களையும் ஈடுபடுத்தி பக்தியுட ன் செய்ய தொடங்க வேண்டும்.முடிந்தால் அவர்களின் தோழி தோழரைகளையும்,வீட்டு பக்கத்தில் இருக்கும் குழந்தைகளையும் அழைத்து பாடல்கள்,ஸ்லோகங்கள் படிக்கலாம்.

பூஜை முடிந்த பின்பு நம்மாலான சிறு அன்பளிப்பு,பிரசாதம் அளித்து ஊக்கபடுத்தலாம்.சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் உச்சரிக்கும் முறை அவற்றின் விளக்கம் பற்றி தெரிந்தவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி தரலாம். தொலைக்காட்சியை இந்த தினங்களில் பார்க்க வேண்டாம் என்ற உறுதியையும் எடுக்கலாம் (முடிந்தால்!!!!!)

5 comments:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கிருத்திகா.

எங்கள் குழந்தைகள் வளரும்போது பெரியவர்கள் எப்படியாவது பண்டிகாஇகளின் பொருள், அது ஏற்பட்ட விதம் எல்லாம் பொறுமையாகச் சொல்லுவார்கள். இப்போது என் பேரனும் கேட்டுக் கொள்ள ரெடிதான்.
ஆனால் அவன்கேட்கும் ''ஏன் '' களுக்குப் பதில் சொல்ல எனக்கு விஷயஞானம் போதவில்லை.

நட்புடன் ஜமால் said...

தொலைக்காட்சியை இந்த தினங்களில் பார்க்க வேண்டாம் என்ற உறுதியையும் எடுக்கலாம் (முடிந்தால்!!!!!)
]]

இது ஒரு நல்ல முயற்சி ...

Unknown said...

உங்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

முடிந்தால் இல்லை...கட்டாயம் டி.வி பார்ப்பதை விட்டு விட வேண்டும் நல்ல நாட்களில்...

pudugaithendral said...

ம்ம் அழகா சொல்லியிருக்கீங்க.

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு ஜூஸ், மஞ்சள் குங்குமம், பிராசதம்
போன்றவற்றைக் குழந்தைகையால் கொடுக்க வைப்பதால் அவர்களுக்கும் ஒரு இன்வால்வெமெண்ட் வரும். ஆண்குழந்தைக்கும் இது பொருந்தும்.


அந்த நாள் மட்டுமாவது நம் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் உடையுடன் குழந்தை மற்றும் பெரியவர்கள் வளைய வந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

எங்கள் வீட்டில் நடப்பதை பகிர்ந்துகொண்டேன்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger