கதை : Grizzly Dad
மொழி : ஆங்கிலம்
வயது : 3-8 வயது வரை
ஒரு நாள் காலையில் அப்பா எழுவதற்கு மனமில்லாமல் எழுகிறார். எழும்போதே மூட் அவுட்!திரும்ப படுக்கைக்குச் சென்று விடுகிறார். குட்டிப்பையன் அப்பாவின் பொறுப்பில். அம்மா தங்கைகளைக் கூட்டிக்கொண்டு தங்கைகளை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார். குட்டிப்பையன் அப்பாவை எழுப்புகையில், தன் அப்பா ஒரு பெரிய கரடியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான்!!அப்பா-கரடிக்கு முகம் கழுவ, ரெடியாக உதவி செய்கிறான். காலை உணவை இருவரும் அருந்துகிறார்கள். அப்பா, கரடியாக இருப்பதால் எல்லாவற்றையும் மேலே கீழே கொட்டி வீட்டை வீட்டை நாசமாக்குகிறார். பின்னர் சிறுவனும் அப்பா-கரடியும் சினிமாவுக்குப் போகிறார்கள், பின்னர் பார்க்கில் சென்று ஸ்கேட்டிங் பழகுகிறார்கள், கரடிக்கு ஸ்கேட்டிங் தெரியாததால் சிறுவன் கற்றுத் தருகிறான். கரடி சிறுவனுக்கு மரம் ஏறவும், ஒன்றுமே செய்யாமல் மரக்கிளையில் எபபடி இருப்பது என்றும் சொல்லித் தருகிறது. பின்னர் வீட்டுக்கு வந்து இருவரும் சாண்ட்விச் செய்து சாப்பிடுகிறார்கள். கரடி சிறுவனை கட்டியணைத்துக்கொள்கிறது. அந்த நொடியில் கரடி திரும்ப அப்பாவாகிவிடுகிறது! அம்மாவும் தங்கைகளும் வீடு வந்து சேர்கிறார்கள். வீடு குப்பையாக இருப்பதை பார்க்கும் அம்மா, இது வீடா அல்லது பன்றிகளின் கூடாரமா என்று கேட்கும் போது இருவரும் சுத்தம் செய்யக் கிளம்புகிறார்கள். அப்போது இருவருக்கும் பன்றிக்குட்டியின் வால் முளைத்து இருக்கிறது!! :-)
உணர்ச்சிகளை பற்றிய ஒரு எளிதான கதை. கதையில், பப்புவை மிகக் கவர்ந்த அம்சம் படங்கள். அப்பாவுக்குக் கோபம் இருந்தாலும், அதைச் சிறுவனிடம் வெளிக்காட்டாமல் இருவரும் ஒரு நாளை எப்படி செலவழிக்கிறார்கள் என்றும் சொல்கிறது, சிறுவனின் பார்வையில்!!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
4 comments:
பகிர்வுக்கு நன்றி
பொதுவாக பெரியவர்கள் தான் கோபப்படுவர்களை நாய், கரடி போல உருவகம் செய்து பாப்போம். இந்த பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்று தருகிறதா இந்த புத்தகம்?????
ஏதாவது நீதியை போதித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கதை சொல்லும் புத்தகங்களின் மத்தியில் இது ஒரு ஜாலியான, விளையாட்டுத்தனமான, பாசிடிவான, கற்பனையை தூண்டுகிற புத்தகமாகவே எனக்குப் படுகிறது! அந்தச் சிறுவன் அப்பாவைக் கரடியாக பார்க்கிறான் என்பது உண்மைதான்...ஒரு கரடியை அப்பாவாக கொண்டிருப்பதை மகிழ்ச்சிகரமாக சொல்வதாகவே நான் பார்க்கிறேன்!
உடனே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விட்டது உங்கள் பதிவு.
Post a Comment