உலக தாய்ப்பால் வாரத்திற்கான வாழ்த்துகள் அனைத்து தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கும், குழந்தைகளுக்கும்! :)
தாய்ப்பால் பற்றி மயில் நன்கு விளக்கிவிட்டார்! அவருக்கான என் நன்றியோடு மேலும் சிலவற்றை எனக்குத் தெரிந்தவரை உங்களுடன் பரிமாரிக்கொள்ளவே இப்பதிவு! நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றை பரிமாரிக்கொள்ளுங்கள்!
தாய்பால் பற்றாக்குறை:
இப்படி ஒரு நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை.... இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவினைப் பார்க்கலாம்!
தாய்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:
குழந்தைகளுக்கான நன்மை பற்றி மயில் விளக்கி்விட்டார்... அதனால் தாய்மார்களுக்கான நன்மைகளைப் பார்ப்போம்...
* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்
*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது
*உங்களுக்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது
*பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் ஓரளவு கட்டுப்படும் தாய்ப்பால் ஊட்டுவதால்
தாய்ப்பாலின் வேறுசில பயன்கள்:
இந்தப் பதிவினில் பார்க்கலாம்.... ஆனால் குழந்தை அருந்தியது போக மீதமிருக்கும் தாய்பாலினை தான் பிற பயன்பாடுகளுக்கு எடுக்க வேண்டும்
அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக:
அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!
தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்..... அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்...
இப்படி சேமிக்கப்பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்....
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்.... இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும்।
இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான்_டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்... இதனால் இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதாலும் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!
பம்பின் அமைப்பு:
இந்த பம்ப் ஒடு பாட்டில், கையினால் பம்ப் செய்ய ஒரு ரப்பர் பந்து, காற்று விசை வர ஒரு டியூப், பால் வடகட்டி, மூடி, நிப்பிள், மார்பக உறை ஆகியவற்றைக் கொண்டது.... இது மேனுவல் பம்ப் என்றால்....
மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் பம்பும் உள்ளன.... இதனை பற்றி நான் விளக்க விரும்பவில்லை.... இது அத்துணை சரியான வழியல்ல....
வலுக்கட்டாயமாக தடாலடியாக பாலினை எடுக்கக் கூடாது... அதனால் நான் கையின் மூலம் பாலினை வெளியேற்றும் பம்ப் பற்றி மட்டுமே விளக்குகிறேன்!
மேலே காணும் படத்தில் இதன் விளக்கங்கள் ஓரளவு உங்களுக்குப் புரியும்...
செய்முறை:
படத்தில் உள்ளது போல அந்த மார்பக உறை போன்ற கப்பினை பால்வடிகட்டி இணைத்து பாட்டிலோடு இணைக்கவேண்டும்,
பின்பு அந்தக் கப்புடன் டியூப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் பந்தினைக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும்,
பிறகு அந்த கப்பினை மற்றொரு கையால் மார்பகத்தில் வைத்து மூட வேண்டும்,
பால் வெளிவரும் இடம் கப்பில் பால் செல்லும் வழிக்கு நேராக இருக்கும் படி மார்போடு பொருத்த வேண்டும்,
இப்போது முதலில் மிக மெதுவாக பந்தினை அமுக்க வேண்டும்,
பின் சிறிது சிறிதாக அழுத்தம் கூட்டிக்கொண்டே வரவேண்டும்
இப்போது மார்புப்பகுதியில் ஒரு இறுக்கம் தெரியும் அப்படியானால் நீங்கள் மிகச் சரியாக பொருத்தியிருப்பதாக அர்த்தம்
இப்போது பால் வெளிவரத் துவங்கும்
ஒரு மார்பு முழுதும் பால் வெளிவரும் வரை பம்ப் செய்து எடுத்துவிடுங்கள்
பின் இதே போல மற்றொரு மார்பு!
இதன் பயன்கள்:
குழந்தைக்கு பால் சேமித்துவைக்கவும்
பால் கட்டாமல்/கசியாமல் அவ்வப்போது வெளியேற்றவும்
பால் குறைவாகத் தெரியும் போது குழந்தை சரியாகப் பால் குடித்தாலே பால் நன்கு ஊறிவிடும் ஆனால் குழந்தையின் உடல் சூழ்நிலையால் குழந்தை பால் சரியாகக் குடிக்காமல் குறைந்தால் இப்படி பம்ப் செய்து இருக்கும் பாலை எடுப்பதன் மூலம் பால் அதிகம் ஊறும்!
அலுவலகத்தில் இந்த பம்ப் மூலம் எடுக்கும் பாலை ஐஸ் பாக்ஸில் வைத்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் புகட்டலாம்!
இந்தப் பம்புன் விலை ரூபாய்।இருநூறில் இருந்து இருக்கிறது!
வேலைக்கு சென்றாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கும் போது இருநூறு ரூபாயெல்லாம் ஒரு மேட்டரா? :)
5 comments:
ஆகாய நதி ரொம்ப நல்ல பதிவு,
இந்த பம்பில் பால் எடுக்கும் போது கொஞ்சம் வலிக்கும், அதற்க்கு பதில் கையிலே எடுத்து விடலாம். ( எல்லாம் அனுபவம் தான்) :)
நன்றி மயில்! வலிப்பது உண்மைதான்... ஆனால் மிக மெதுவாக அழுத்தம் கொடுக்கும் போது அவ்வளவு வலி இருப்பதில்லை... கை என்றால் அதிக நேரம் பிடிக்கிறது அலுவலகம் கிலம்பும் அவசரத்தில்.... அதோடு இதில் வெளிக்காற்று உட்புகாமல் கைப் படாமல் பால் பாதுகாக்கப்படுகிறது...
பாலை எப்படி நிறுத்துவது?படிப்படியாக குறைத்தாலும் இன்னும் பால் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது எனக்கு. இதற்கு என்ன செய்வது? தெரிந்தால் சொல்லுங்களேன்.மாத்திரை போட்டால் side effects ஏற்படுமோ என்று பயமாக உள்ளது.
@கிருத்திகா
குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டாலே சில நாட்களில்/வாரங்களில் பால் சுரப்பது நின்றுவிடும்...
அப்படியும் நிற்காமல் வந்தால் பாட்டிவைத்தியப்படி மார்பகத்தினை மல்லிகைப் பூவால் நன்கு சுற்றி வைத்துவிட்டால் பால் சுரக்காது என்பர்..
இன்னொரு முறையும் உண்டு... வெதுநீரில் நனைத்த காட்டன் துணியை மார்பகத்தில் கட்டிவிட்டாலும் பால் உடலோடு கலந்து மேலும் சுரப்பதும் நிறுத்தப்படும் என்பர்...
இரண்டும் எந்த அளவுக்கு சரிவரும் என்ற அனுபவம் இல்லை ஆனால் கண்டிப்பாக தவறான பின் விளைவுகள் அற்ற வழிகள் இவை!
@ கிருத்திகா
தயவுசெய்து பாலை நிறுத்த எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள்... அது அடுத்தக் குழந்தைக்கு பால் கிடைக்காமல் போக வழிவகுத்துவிடும் மேலும் மார்பகப் புற்றுநோய்க்கும் வழி காட்டும்...
Post a Comment