Wednesday, April 22, 2009

சிசேரியனும் தாய்பால் பற்றாக்குறையும் - உண்மை என்ன?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்காகவே இந்த பதிவு!

பொதுவாகவே சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது :( இது முற்றிலும் தவறான கருத்து. நான் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றேன்... எனக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டதும் இல்லை... நானும், என் தாயாரும், என் அத்தையும்(மாமியார்) அப்படி ஒரு நிலை உண்டாகவிட்டதும் இல்லை.

இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். நான் அப்படிலாம் இல்லைங்க... மயக்க மருந்து கொடுத்தாலும் குழந்தையை பார்க்க விழித்தே இருந்தேன் அறுவை சிகிச்சையின் போது கூட :) சரி என் மொக்கை வேண்டாம் மேட்டருக்கு வருவோம்... அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை.. இங்கு தான் துவங்குகிறது பால் பஞ்சம்.

சீம்பால் என்ப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்... குழந்தை வெளியே வந்ததும் வரும் முதல் பால் குழந்தை ஆயுட்கால நோய் எதிர்ப்பு கேரண்டி மாதிரி... தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட இருக்கும் பெண் எப்படியாவது அந்த குழந்தை பால் குடிக்க வழி செய்ய வேண்டும்... பிறகு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் நன்கு பால் கிடைக்கும்... அதை விடுத்து பால் குரைவாக தான் இருக்கிறது, குழந்தைக்கு குடிக்கத் தெரியவில்லை என்றெல்லாம் சாக்கு சொல்லி புட்டி பால் கொடுத்து குழந்தையின் எதிர்கால உடல்நிலை குறைகளுக்கு வித்திடக்கூடாது! உயிரையே கொடுத்து செத்து பிழைத்து நம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நாம் பால் கொடுப்பதற்கு யோசிக்கலாமா?

தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்! உங்களுக்கு கற்றுப் பழகாமல் எதையும் எடுத்தவுடன் திறமையாக செய்யமுடியுமா? அப்படித்தான் பிறந்த குழந்தையும்... அப்போது பிறந்த குழந்தைக்கு பால் குடித்து குடித்துப் பழகினால் தான் சரியாக குடிக்கத் தெரியும்... நீங்களும் பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகும்.

ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துகள் மற்றும் விட்டமின்கள் மாறிக் கொண்டே இருக்கும்... அதனால் 6மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே கொடுக்கலாம்... குழந்தைக்கு பிடித்த எளிதில் செரிக்கக் கூடிய தூய்மையான உணவு இது! 7வது மாதத்தில் இருந்து மற்ற உணவுகளை சிறிது சிறிதாக துவங்கி பழக்கப் படுத்தலாம்! குறைந்தபட்சம் 1வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இரு விதமான சிக்கல் ஏற்படும்; எடை அதிகரித்தல் அல்லது குறைதல்... இரண்டுமே பால் கொடுப்பது முடிந்ததும் சரியாகிவிடும். பால் கொடுப்பது தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது, எலும்பு தேய்வது போன்றவற்றைத் தவிர்க்கும்.

சிசேரியன் அதனால் பால் போதலை என்று மட்டும் சொல்லாதீர்கள்! போன பதிவில் கவிதா அவர்கள் கூறிய உணவு மற்றும் நான் கூறும் இந்த உணவுகளை சேர்த்து பாருங்கள்...

1. பூண்டு
2. கீரைகள்
3. கத்திரிக்காய்
( கவிதா அவர்களின் கருத்தினை ஏற்று கத்தரிக்காய் வேண்டாம் அவர் கூறுவது சரிதான்)
4. கேரட்
5. டபுள் பீன்ஸ்
6. ஓட்ஸ்( உடனடிப் பலனுக்கு)
7. பிரட்/ரஸ்க் (உடனடிப் பலனுக்கு)
8. தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்
9. பால் அதிகம் குடிக்க வேண்டும்
10.சுறா மீன் மற்றும் அனைத்து மீன் வகைகள்
11.தயிர்

இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்.
தயவு செய்து புட்டிபால் கொடுக்காதீர்கள்.

29 comments:

Sasirekha Ramachandran said...

//சிசேரியன் அதனால் பால் போதலை என்று மட்டும் சொல்லாதீர்கள்//

எதிர்கால தாய்மார்களுக்கு ஏற்ற பதிவு!!

புருனோ Bruno said...

//இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். //

அதெல்லாம் அந்த காலம்

இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும்

அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை

புருனோ Bruno said...

தண்ணீர் அதிகம் குடித்தால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் பிடித்து விடும் என்ற தவறான கருத்தினால் தாய்க்கு தண்ணீரே தருவதில்லை

அதனால் பால் குறைய வாய்ப்புள்ளது

தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்

Deekshanya said...

very true, I had a C-section too. And what you said is very true. A lot of misconceived things are said about delivering by C-Section. Some people even go the extra mile to say, ladies opt for C-section to avoid the pain..

Anonymous said...

unmaidhaan.
oru 15 naatkal engal veetil perum porattame nadandhadhu kuzandhayai paal kudikka vaippadharku. nan payanpaduthadha karuvigal, vazhimuraigale kidayadhu. muyandraal vettri kidaikkum.

ஆகாய நதி said...

//
அதெல்லாம் அந்த காலம்

இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும்

அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
//

இருந்தும் எனக்கு அறுவை சிகிச்சை செய்வத்ற்கு முதல் நாள் செய்த பெண் அடுத்த அன்று மாலை தான் கண் விழித்தார்... நான் தூங்கவில்லை... எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். ஆனால் அயர்வின்றி தூங்க வேண்டும் என்பதற்காக மயக்க மருந்து.

ஆகாய நதி said...

//
தண்ணீர் அதிகம் குடித்தால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் பிடித்து விடும் என்ற தவறான கருத்தினால் தாய்க்கு தண்ணீரே தருவதில்லை

அதனால் பால் குறைய வாய்ப்புள்ளது

தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்

//

உண்மை தான்... இப்படி ஒரு வதந்தியும் உள்ளது... நான் செமயா தண்ணீர் குடித்தேன்...

ஆகாய நதி said...

//
unmaidhaan.
oru 15 naatkal engal veetil perum porattame nadandhadhu kuzandhayai paal kudikka vaippadharku. nan payanpaduthadha karuvigal, vazhimuraigale kidayadhu. muyandraal vettri kidaikkum.
//

நன்றி அனானி!

ஆகாய நதி said...

//
எதிர்கால தாய்மார்களுக்கு ஏற்ற பதிவு!!
//

நன்றி சசிரேகா அவர்களே!:)

கவிதா | Kavitha said...

//அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
//

ஆமாம்.... மயக்கம் இருக்காது நன்றாகவே பேசவும், உணரவும் முடியும்... :))

கவிதா | Kavitha said...

ஆகாயநதி, சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை..

குழந்தை வயிற்றில் இருக்கும் போதே நல்ல தேவையான ஊட்டச்சத்துடுன் உணவு பழக்கம் இருந்தால், சிசேரியன் எல்லாம் ஒரு காரணம் இல்லைங்க.

எனக்கு சிசேரியன், அதுவும் அப்போது நான் சுத்த சைவமாகவே இருந்தேன். வெறும் கீரை உணவில் மட்டும் என் குழந்தை வயிற்றில் வளர்ந்தான் எனலாம். ஆனால் எனக்கு நீங்கள் சொன்னது போன்று எந்த பிரச்சனையும் இல்லை.

குழந்தை பிறந்த பிறகும் தாய்ப்பாலுக்கேன தேவையான உணவை உடனுக்குடன் சேர்த்துக்கொள்வது மிக சிறந்தது.

உடம்பில் சோர்வு இருக்கும், குழந்தை தூங்கும் போது நாமும் தூங்கிவிட வேண்டும், அப்போது தான் உடல் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

goma said...

நான் அப்படிலாம் இல்லைங்க... மயக்க மருந்து கொடுத்தாலும் குழந்தையை பார்க்க விழித்தே இருந்தேன் அறுவை சிகிச்சையின் போது கூட :) சரி என் மொக்கை வேண்டாம் மேட்டருக்கு வருவோம்... .

உங்கள் தாய்ப்பாசத்தை விளக்கும் இந்த வரிகளை ஏன் மொக்கையில் சேர்க்கிறீர்கள்.இது போல் பல தாய்மார்கள், தத்தம் அனுபவத்தை ,எழுதினால்தான்,பல பெண்மணிகள் ,தேவையற்ற பயம் தெளிந்து பிரசவ காலத்தை ,இயற்கையோடு இணைந்த விஷயமாக ஆரோக்கியமாக எதிர்கொள்வார்கள்.

ஆகாய நதி said...

//
ஆகாயநதி, சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை..
//

ஆனால் பலரிடம் இத்தவறான கருத்து உள்ளது... என்னிடம் வந்து உனக்கு நன்றாக பால் இருக்கிறதா சிசேரியன் ஆயிற்றே... என்றும் குழந்தைக்கு வேறு ஏதாவது கொடு என்றும் கூறியிருக்கிறார்கள்...

நான் ஒன்றும் சொல்வதில்லை... எனக்கு எப்போதும் பால் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை... நானும் முதல் இரு மாதங்கள் சைவ உணவுதான்... இப்போது பொழிலனின் 8வது மாதம் முதல் சைவ உணவு தான் எடுக்கிறேன்.. இப்போதும் அவனுக்கு தாய்ப்பால் ஒவ்வொரு உணவு இடைவேளையின் போதும் கொடுக்கிறேன்... இரவு முழுவதும் தாய்ப்பால் தான் :)

ஆகாய நதி said...

//
உடம்பில் சோர்வு இருக்கும், குழந்தை தூங்கும் போது நாமும் தூங்கிவிட வேண்டும், அப்போது தான் உடல் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
//

இது நல்ல விஷயம் கவிதா.. ஆனால் என்னவோ எனக்கு இரவு முழுதும் கண் விழித்தாலும் பகலில் அதிகம் தூக்கம் வருவதில்லை :(

ஆகாய நதி said...
This comment has been removed by the author.
ஆகாய நதி said...

அதுவும் சரிதான் :) நன்றி!

நான் தாய்மார்கள் பயத்தை போக்கி பிரசவத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வழிகள் பற்றிய பதிவும் எழுத முயற்ச்சித்து இருக்கிறேன் :)

http://aagaayanathi.blogspot.com/2008_06_01_archive.html

இங்கு சென்று அதைப் பார்க்கலாம் :)

கவிதா | Kavitha said...

//இது நல்ல விஷயம் கவிதா.. ஆனால் என்னவோ எனக்கு இரவு முழுதும் கண் விழித்தாலும் பகலில் அதிகம் தூக்கம் வருவதில்லை :(
//

ஆகாய நதி வீட்டு வேலை எல்லாம் நீங்க செய்வீங்களா? ஆள் இருக்காங்களா.? முடிந்தால் நீங்களே செய்யுங்கள் சோர்வு ஏற்பட்டு நல்ல தூக்கம் வரும்

பின் வாக்கிங் முடிந்தால் போங்கள், அதுவும் நல்ல தூக்கம் வரும்.

தியானம் செய்ய பழகிக்கொள்ளுங்கள் நல்ல தூக்கம் வரும்..

ம்ம் வேற என்ன... ஹெட்ஃபோன் போட்டு க்கிட்டு மைல்ட் மியூசிக் கேட்டுக்கிட்டே இருங்க உங்களை அறியாமல் தூங்கிப்போவிர்கள்

ம்ம் அப்புறம்.. கண்ணை மூடிக்கிட்டு, உங்கள் எதிரில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் அல்லது மான்கள், ரோஜாப்பூக்கள் இருப்பது போன்று கற்பனை செய்துக்கொண்டு ஒவ்வொன்றாக எண்ணுங்கள்.. 100 முடிப்பதற்குள் தூக்கம் வந்துவிடும்.

இது போதுமா? :))

Thamiz Priyan said...

நல்ல தேவையான கட்டுரை! பய்னுள்ளது நன்றி!

புருனோ Bruno said...

//இருந்தும் எனக்கு அறுவை சிகிச்சை செய்வத்ற்கு முதல் நாள் செய்த பெண் அடுத்த அன்று மாலை தான் கண் விழித்தார்//

அவருக்கு பொது மயக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்

//... எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். //

அப்படியெல்லாம் இல்லை. இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)

புருனோ Bruno said...

//ஆனால் அயர்வின்றி தூங்க வேண்டும் என்பதற்காக மயக்க மருந்து.//

மன்னிக்க வேண்டும்

இது தவறான கருத்து

தூங்க வேண்டுமென்றால் தூக்க மருந்து
மயக்கம் வேண்டுமென்றால் மயக்க மருந்து

இரண்டும் வேறு !!

தயவு செய்து குழப்ப வேண்டாம்

நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு சிறிய குண்டூசி குத்தினால் கூட எழுந்து விடுவீர்கள். மயக்கத்தில் அப்படி இல்லை !!

புருனோ Bruno said...

//ஆகாயநதி, சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை..//

இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
ஆனால் பால் சுரக்கும் அளவில் வேறுபாடு இல்லை

சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்

அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்

ஆனால் இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

புருனோ Bruno said...

//ஆனால் பலரிடம் இத்தவறான கருத்து உள்ளது... என்னிடம் வந்து உனக்கு நன்றாக பால் இருக்கிறதா சிசேரியன் ஆயிற்றே... என்றும் குழந்தைக்கு வேறு ஏதாவது கொடு என்றும் கூறியிருக்கிறார்கள்...//

நான் ஏற்கனவே கூறியபடி சிசேரியன் செய்து தண்ணீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்ற தவறான கருத்தால் தாய் தண்ணீர் குடிக்காததால் தான் பால் அளவு குறைகிறது

கவிதா | Kavitha said...

இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது//

நன்றி புருனோ ! :)

ஆகாய நதி said...

//
இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது
//

உண்மைதான்... குழந்தை குடிக்க குடிக்க பால் நன்கு சுரக்கும் :)

நன்றி புருனோ... மயக்க மருந்து தூக்க மருந்துன் இரண்டையும் விளக்கியதற்கு :)

அது பற்றி எனக்குத் தெரியாது... என்னிடம் வந்து உங்களுக்கு தூங்க டோஸ் குடுத்திருந்தோமே நீங்க என்ன இப்படி தியேட்டர் உள்ள வந்து தெளிவா பதில் சொல்றீங்கனு கேட்டாங்க :)

ஆகாய நதி said...

நன்றி கவிதா.... சென்னை வந்ததில் இருந்து வீட்டுவேலைகளை நான் தான் செய்கிறேன்..

ஆனால் எப்போதுமே பகலில் தூங்குவது பிடிக்காத செயல் ஆகையால் இப்போது தூங்க எண்ணினாலும் பகலில் தூக்கம் வருவதில்லை போல... :)

ஆகாய நதி said...

//
நான் ஏற்கனவே கூறியபடி சிசேரியன் செய்து தண்ணீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்ற தவறான கருத்தால் தாய் தண்ணீர் குடிக்காததால் தான் பால் அளவு குறைகிறது
//

நன்றி புருனோ... இதுவும் முக்கியமான காரணம் தான்... அதாவது தண்ணீர் குறைவாக குடிப்பது... சீழ் பிடிக்கும் என்று கூட எண்ணுகிறார்களா? :(

ஆகாய நதி said...

//
very true, I had a C-section too. And what you said is very true. A lot of misconceived things are said about delivering by C-Section. Some people even go the extra mile to say, ladies opt for C-section to avoid the pain..

//

ஆமாம் சிலர் விரும்பி சிசேரியன் செய்துகொள்கிறார்கள் :(

Deepa said...

நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு நார்மல் டெலிவரி தான். ஆனால் முப்பது நாட்களுக்குப் பின் பால் குறைந்து தான் விட்டது.


டாக்டர் தொடர்ந்து தாய்ப்பாலே கொடுக்கச் சொன்னார். ஆனால் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் புட்டிப்பாலும் கொடுத்தேன். ஆனாலும் தாய்ப்பாலும் விடாமல் கொடுத்து வந்ததால் நன்றாகவே சுரந்தது.

ஆனால் நீங்கள் சொல்வதே சரி. புட்டிப்பாலைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.

எனக்குத் தெரிந்து சிசேரியன் செய்த சில பெண்கள் ஆறு மாதம் வரை தய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்துள்ளனர்.

Anonymous said...

Great post. I was checking constantlу this blog anԁ I'm impressed! Very helpful info particularly the closing section :) I take care of such info much. I was seeking this particular info for a long time. Thank you and best of luck.

Stop by my site :: Zahnzusatzversicherung stiftung warentest Vergleich

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger